‘சேரி மொழி’ விவகாரம்! குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்- காயத்ரி ரகுராம்

பா.ஜ.க. பிரமுகரும் நடிகையுமான குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘சேரிமொழி’ என்ற வார்த்தை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதன் உறுப்பினரான நடிகை குஷ்பு வலியுறுத்திருந்தார். அதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு […]
டி20 தொடர்! இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்!

இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததை இன்றளவும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவைத்துள்ளது. எப்படியும் சொந்த மண்ணில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை தட்டிச் சென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக […]
எக்ஸ் வலைதள வருமானம்! எலான் மஸ்க் எடுத்த முக்கிய முடிவு!

எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் வருமானத்தை இஸ்ரேல் மற்றும் காசா மருத்துவமனைகளை சீரமைக்க வழங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், காசாவில் பொதுமக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். […]
கட்சியில் நேர்மையானவர்களுக்கு உயர்வு நிச்சயம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

கட்சியில் நேர்மையானவர்களுக்கு உயர்வு நிச்சயம் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று (நவ.21) மாலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தும், ஆலோசனைகளையும் கூறியுள்ளதாக கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அவர் கூறும்போது, […]
திரிணாமுல் கட்சி தொண்டர் சுட்டுக்கொலை! மேற்கு வங்கத்தில் பதற்றம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பா.ஜ.க.வினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த வன்முறைகளில் நாட்டுத் துப்பாக்கிளால் சுட்டும், நாட்டு வெடிகுண்டுகள் வீசியும் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பலியும் ஏற்படுவதால் மேற்குவங்கத்தில் அடிக்கடி பரபரப்பு நிலவுகிறது. […]
பாலியல் தொந்தரவு கொடுத்த டாப் ஹீரோ! கண்ணீர் விட்ட விசித்ரா!

டாப் ஹீரோ ஒருவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை நள்ளிரவில் தட்டி தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை விசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதது தற்போது பேச்சுபொருளாக மாறியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா ‘தங்கள் வாழ்வை அசைத்த பூகம்பம்’ என்ற டாஸ்க்கில் மனம் திறந்து பேசினார். அவர்பேசும் போது, ‘‘தெலுங்கு படத்திற்கான ஷூட்டிங் கேரளாவில் நடந்த போது அந்த படத்தின் ஹீரோ நான் தங்கியிருந்த அறைக்கு வந்து, […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதமாகியுள்ள நிலையில் மழையின் அளவு இயல்பை விட குறைவாகவே பதிவானது. இதனால் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது […]
முதல்வருக்கு கருப்புக்கொடி! இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்!

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை முதல்வர் பினராயி விஜயன் நடத்தி வருகிறார். அக்கட்சியின் சார்பில் நவகேரள சதஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் முதல்வர் பினராயி விஜயன் தனது மந்திரிகளுடன் ரூ.1.5 கோடி மதிப்பிலான கொகுசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார். 36 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த பயணம் வருகிற டிசம்பர் 24ம் தேதி முடிவடைகிறது. மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் […]
கலைஞர் நூற்றாண்டு விழா! மாபெரும் செய்தியாளர்கள் சந்திப்பு!

திரைத்துறை சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் சங்க தலைவர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரைத்துறை சங்கம் சார்பில் வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தாஜ் கோரமண்டலில் செய்தியாளர்கள் […]
நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்! மன்சூர் அலிகான் பிடிவாதம்!

தவறாக சித்தரித்து செய்தி பரப்பி வருவதால் நான் நிச்சயமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நடிகர் மன்சூர் அலிகான், செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் காட்டமாக பேசியுள்ளார். பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியது பெரிய சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் மன்சூர் அலிகானை கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யும் நிலை […]

