அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கெட்! என்று முதல் தெரியுமா?

புதுவையில் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியத்தால் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையில் 300 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு முதல் அட்சயபாத்திரம் என்ற நிறுவனத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் கொண்டது. அதன்படி 11 இடங்களில் அமைந்துள்ள நவீன சமையல் கூட்டங்களின் மூலம் மதிய […]
41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் 41 தொழிலாளர்களையும் தற்போது பத்திரமாக […]
அது மன்னித்துவிடு அல்ல மரணித்துவிடு! மன்சூர் அலிகான் மீண்டும் திமிர் பேச்சு!

திரிஷாவின் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் மரணித்துவிடு என்று தான் சொன்னேன் என்று மன்சூர் அலிகான் மீண்டும் திமிராக கூறியுள்ளது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாவே திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில பிரபலங்கள் ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். ஒரு பக்கம் சட்ட சிக்கல், இன்னொரு பக்கம் நடிகர்கள் சங்கத்தின் அழுத்தம் என நடிகர் மன்சூர் அலிகான் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சகநாயகி திரிஷாவே […]
சீமானை எதிர்க்க யாருக்கும் யோக்கியதை இல்லை! விஜயலட்சுமி பளிச்!

கடந்த 3 மாதமாக போலீஸ் வசம் இருக்கும் தனது மொபைல் போனை வாங்கிக்கொடுத்துவிட்டால் தான் இனி தமிழகத்திற்கே வரப்போவதில்லை என்று நடிகை விஜயலட்சுமி போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகை விஜயலட்சுமி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், ‘‘கடந்த 2011ல் சீமானுக்கு எதிராக நான் கொடுத்த ஆதாரங்களை போலீசார் அழித்துவிட்டனர் என்னிடம் […]
தமிழக அரசுக்கு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

தமிழக அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் மாதந்தோறும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வந்த நிலையில், […]
6 வயது சிறுமி கடத்தல்! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் ரூ.10 லட்சம் கேட்டு 6 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பகுதியில் அபிஹல் சாரா ரிஜி என்ற 6 வயது சிறுமி நேற்று மாலை 5 மணியளவில் தனது சகோதரன் ஜானதன் உடன் சேர்ந்து டியூசனுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமி சாராவை மர்ம கும்பல் ஒன்று பின் தொடர்ந்து வந்து காரில் கடத்திச் சென்றது. இதைத்தொடர்ந்து மர்ம கும்பல், சாராவின் தாயாருக்கு போன் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு கோரப்பட்ட ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி தனக்கு நெஞ்சுவலிக்கிறது என்று சொன்னதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை காரணம் […]
குஷ்புவின் புகைப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குரல் கொடுக்காதது ஏன் என்று நெட்டீசன் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சேரி என்ற வார்த்தைக்கு குஷ்பு அர்த்தம் […]
நீட் தேர்வு பயிற்சி மாணவர் தற்கொலை! ராஜஸ்தானில் பரபரப்பு!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் தேர்வுகளுக்கு தயாராவதற்கு நீட் தேர்வு மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதன்படி லட்சக்கணக்கான மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு சிலர் அழுத்தம் மற்றும் தோல்வி பயம் காரணமாக தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். அந்த வகையில் நீட் தேரவு […]
9.13 லட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்! தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் புதிதாக 9.13 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்காக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார விடுமுறை நாட்களில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதுபோன்று நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் இதுவரை மொத்தம் 9.13 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை […]

