News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்! தனியாரிடம் ஒப்படைப்பு!

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று (நவ.29), ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்கரய்யா, ஆன்மிக தலைவர் பங்காரு அடிகளார் ஆகியோரின் மறைவுக்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.   அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது தண்டையார்பேட்டைமண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பரமேஸ்வரன் நகர் பகுதியில் கழிவுநீர், மின்வசதி, குடிநீர் […]

செல்வகணபதி மீண்டும் திமுக எம்.பி. ஆவாரா?

1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து.   சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அதேவேளையில் கூட்டு சதி […]

ஞானவேல் ராஜாவின் மன்னிப்பு போலியானது- நடிகர் சசிகுமார்

இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை விடுத்துள்ளதை விமர்சித்து நடிகர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   ‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையிலான பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக யூடியூப் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் குறித்து செய்திகள் வைரலாகி வந்து கொண்டிருந்தன.   பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் அமீருக்கு ஆதரவு கரம் நீட்டி வந்த நிலையில், […]

மீட்கப்பட்ட 41 சுரங்கத்தொழிலாளர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 சுரங்கத்தொழிலாளர்களுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.   உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் […]

செவிலியர்களுக்கு மடிக்கணினி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!

சென்னையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியின் மடிக்கணினிகளை வழங்கினார்.   சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரம் டி.எம்.எஸ். வளாகத்தில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இன்று (நவ.29) மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை! மருத்துவமனை அறிக்கையால் அதிர்ச்சி!

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் நிலை தற்போது சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா மற்றும் அரசியல் பணிகளில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. கட்சியை அதன் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு […]

‘மங்கி குல்லா’ கொள்ளையர்கள் அட்டூழியம்! உறக்கத்தை தொலைத்த மக்கள்!

தஞ்சாவூரில் மீண்டும் மங்கி குல்லா கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் உறக்கமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை அச்சுறுத்தி வந்த மங்கி குல்லா கொள்ளையர்களின் அட்டகாசம் சமீப காலமாக மீண்டும் அதிகரித்துள்ள அம்மாவட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவென்யூ நகரைச் சேர்ந்த இந்திராணி என்ற 50 வயது பெண் தனது […]

அமீர் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள்- ஞானவேல் ராஜா

பருத்திவீரன் பிரச்சினை தொடர்பாக அமீர் குறித்து பேசியதற்கு மனப்பூர்வமாக தான் மன்னிப்புக் கேட்பதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். ‘பருத்திவீரன்’ திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும், இயக்குனர் அமீருக்கும் இடையிலான பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக யூடியூப் சேனல்களிலும், பத்திரிகைகளிலும் இந்த விவகாரம் குறித்து செய்திகள் வைரலாகி வந்து கொண்டிருந்தன. பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் அமீருக்கு ஆதரவு கரம் நீட்டி வந்த நிலையில், நடிகர் சிவகுமாரின் மொத்த குடும்பத்தின் […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கெட்! என்று முதல் தெரியுமா?

புதுவையில் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியத்தால்  தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   யூனியன் பிரதேசமான புதுவையில் 300 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.   கடந்த 2018ம் ஆண்டு முதல் அட்சயபாத்திரம் என்ற நிறுவனத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் கொண்டது.  அதன்படி 11  இடங்களில் அமைந்துள்ள நவீன சமையல் கூட்டங்களின் மூலம் மதிய […]

41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் 41 தொழிலாளர்களையும் தற்போது பத்திரமாக […]