News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள்!

பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (டிச.1) காலை 11 மணியளவில் நடைபெற்றது.    இது குறித்து செய்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாளையங்கோட்டை சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆறுமுகத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், மேல்பா சிப்காட் மற்றும் பரந்தூர் விமான நிலையம் […]

12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.   வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இது வருகிற 3ம் தேதி (நாளை மறுநாள்) வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் அந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் […]

அயோத்திதாச பண்டிதர் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.2 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்திதை இன்று (டிச.1) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் […]

கூட்டணி கட்சிகளை அழைத்த தி.மு.க.! இளைஞரணி மாநாடு எதிரொலி!

தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.   இம்மாதம் (டிசம்பர்) 17ம் தேதி சேலம் மாவட்டம பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. தி.மு.க. தனது பலத்தை நிரூபக்கவும், வரவிருக்கின்ற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வியூகம் வகுக்கவும் இம்மாநாட்டை வெற்றி கரமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.   இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. இளைஞர் அணியினர் […]

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரிப்பு!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறைவுக்கு ஏற்ற வகையில் மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் மாதம் முதல் தேதி என்பதால் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு […]

செம்பரம்பாக்கம் ஏரி: உபரிநீர் திறப்பு அளவு குறைப்பு!

தொடர் மழை காரணமாக நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக அகற்றி வருகின்றனர்.   தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை […]

காணாமல் போன மெரீனா கடற்கரை மணற்பரப்பு! கடைகள் மூழ்கின!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக மெரீனா கடற்கரை மணற்பரப்பு முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மணற்பரப்பே கண்களுக்கு தெரியவில்லை. மேலும் அங்கு போடப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் தண்ணீரில் பாதியளவுக்கு மூழ்கியுள்ளதால் கடைகள் திறக்கப்படவில்லை.   மழையின் காரணமாக மெரீனா கடற்கரைக்கு பொதுமக்கள் வராத நிலையில், கடைகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், கடலை தாண்டி ஒரு தீவுபோலவும், தீவுக்கு நடுவில் கடைகள் இருப்பது போலவும் […]

மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து எழும் புகார்களின் அடிப்படையில் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு […]

மழைநீரில் மிதக்கும் திருவேற்காடு!

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைநீர் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் வெள்ளம் புகுந்துள்ளதால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.   இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள எழுமலை நாயக்கர் நகர், சுந்தரசோழபுரம் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மழைநீர் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுபோல் […]

இனி அப்படி செய்யமாட்டேன்! உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். உத்தரவாதம்

அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னத்தை இனி பயன்படுத்தமாட்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் உத்தரவாதம் அளித்துள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,  அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இனி கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினருக்கு இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று […]