மத்திய குழு இன்று சென்னை வருகை! 2 நாட்கள் ஆய்வு!

மிக்ஜாம் புயல் மழை வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் வகையில் மத்திய குழு இன்று சென்னை வருகிறது. அதன்படி நாளை முதல் 2 நாட்கள் இந்த குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது. கடந்த 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்களில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த பெருமழை வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வரலாறு காணாத மழை காரணமாக பொது மக்களின் […]
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்! தொண்டர்கள் உற்சாகம்!

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ம் தேதி சளி, இருமல் காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது எனவே எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் அறிக்கை மூலம் ரசிகர்களையும், தொண்டர்களையும் […]
மிக்ஜாம் புயல் பாதிப்புகள்& மறுசீரமைப்பு பணிகள்! முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மறுசீரமைப்பு குறித்தும் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.9) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மிக்ஜாம் புயலால் வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து தீவு போல மாற்றியது. மின்சாரம், உணவு, குடிநீரின்றி […]
மலிவு விலையில் காய்கறிகள்: நடமாடும் விற்பனை வண்டியை தொடங்கி வைத்த அமைச்சர்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யும் வகையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து திறந்து வைத்தார். வரலாறு காணாத பேரிழப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் சென்னையை உருக்குலைய செய்துவிட்டது. தெருக்களில் மரங்கள் வேரோடு சாய்ந்த நிலையில் மின்சாரம் தண்டிக்கப்பட்டது. தெருக்களில் காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்தோடிய மழைநீர், வீடுகளுக்குள் புகுந்தது. அதோடு சேர்த்து கழிவுநீரும் புகுந்ததால் மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் குடிநீர், உணவின்றி […]
மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணி: ரூ.3 கோடி கொடுத்த அசோக் லேலண்ட்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரூ.3 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்களை அவதிப்பட வைத்துள்ளது. இதனால் மக்கள் பாதுப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு […]
மிக்ஜாம் புயல் பாதிப்பு! தலைமை செயலாளர் நேரில் ஆய்வு!

மிக்ஜாம் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர். சென்னையில் உலுக்கி எடுத்து மிக்ஜாம் புயல் காரணமாக பொது மக்கள் மழைவெள்ள நீரால் சூழப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டு ஆங்காங்கு […]
மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள்! டி.வி.எஸ். குழும தலைவர் வழங்கிய ரூ.3 கோடி!

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், டி.வி.எஸ். குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் ரூ.3 கோடி ரூபாயை வழங்கினார். சென்னையில் உலுக்கி எடுத்து மிக்ஜாம் புயல் காரணமாக பொது மக்கள் மழைவெள்ள நீரால் சூழப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் பெரியளவில் சேதங்கள் ஏற்பட்டு ஆங்காங்கு மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் சேதமடைந்து பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் உதவித்தொகைகளை […]
களத்தில் நடிகர் விஜய்! கல்யாண மண்டபம் வைத்தும் உதவாத ரஜினி!

நடிகர் விஜய், தன்னோட மக்கள் இயக்க நிர்வாகிகள் எல்லாரும சேர்ந்து மிக்ஜாம் புயலால பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உடனடியா தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யணும்னு அன்பா கட்டளை போட்டு இருக்காரு. இதன் மூலமாக பொதுமக்களின் அன்பை பெற்றால் எதிர்காலத்தில் அரசியல் என்ட்ரி கொடுக்க வசதியாக இருக்கும்னு நினைத்து இப்போது களத்தில் இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர் மன்றத்தினர். கடந்த 2015ம் வருஷம் வந்த வர்தா புயலையே பீட் பண்ணிடுச்சு 2023ம் வருஷம் வந்த மிக்ஜாம் புயல். தாழ்வான பகுதிகள்ல […]
ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளியின் ஆண்டுவிழா! கண்ணை கவர்ந்த மாணவர்கள்!

ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளியின் 45வது ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி கண்ணை கவரும் வகையில் அமைந்தது. சென்னை வடபழனி துரைசாமி சாலையில் ஜே.ஆர்.கே. மேல்நிலை பள்ளி அமைந்துளளது. இங்கு நேற்று (டிச.1) பள்ளியின் 45வது ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெங்களூரைச் சேர்ந்த சங்கீதா மகினினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 4.30 மணியளவில் ஆண்டுவிழா வரவேற்பு நடனத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பாடல்களும், நடனங்களும், நாடகங்களும் பார்வையாளர்கள் மற்றும் […]
கி.வீரமணியின் 91வது பிறந்தநாள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜெகத்ரட்சகன் எம்.பி., திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், […]

