News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினர்! முதலமைச்சரிடம் வாழ்த்து!

தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் பொன்னுசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோன் மன்றத்தின் புதிய உறுப்பினரான சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.   அவருடன் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களான மாறன், ரத்தினசாமி, புஷ்பராணி, பொன்னுசாமி, சரவணன், சாத்துக்குட்டி, மல்லிகா, வீரலட்சுமி, ராஜசேகரன் செல்வம், குணசேகரன், தெய்வம், […]

நாகூர் கந்தூரி விழா! 45 கிலோ சந்தனக்கட்டை வழங்க முதலமைச்சர் அரசாணை வெளியீடு!

நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை எந்தவித கட்டணமும் இன்றி வழங்குவதற்கான அரசாரணையை இன்று (டிச.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகூர் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினார்.   உலகப்பிரசித்தி பெற்ற நாகூர் கந்தூரி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்காவில் கந்தூரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.   இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 45 கிலோ எடை கொண்ட […]

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதி! ரூ.3 கோடி வழங்கிய எம்.ஆர்.எப். நிறுவனம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை வழங்கி […]

போதைப்பொருள் விழிப்புணர்வு காணொலி பாடல்: காவல்துறை சார்பில் வெளியீடு!

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கவும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பாடல் காணொலி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இசையப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவும், அவற்றை தடுக்கவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழக அரசின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநிலத்தில உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் […]

பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்! சர்வதேச மாநாடு!

பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள்! சர்வதேச மாநாடு! தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் உலகளாவிய போக்குகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது.   சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், 20 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பார்கள் கலந்து கொண்டனர். மேலும் கனிமொழி கருணாநிதி எம்.பி., அமைச்சர்கள் ரகுபதி, கீதாஜீவன், சமூக நலன் மற்றும் […]

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பலி! மத்தியபிரதேசத்தில் சோகம்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் அருகே காண்டலா தெவ்ரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்திற்காக 20 அடி ஆழத்தில் ஆழ்துளை ஒன்று தோண்டப்பட்டிருந்தது. இது தெரியாமல் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். விளையாட சென்ற மகன் நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் […]

பொங்கல் பண்டிகை: அரசு விரைவு பேருந்துகளில் தொடங்கிய டிக்கெட் முன்பதிவு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.   தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (2024 ஜனவரி) 15ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய நாளான 14ம் தேதி போகி பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் 17ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.   தொடர் விடுமுறை காரணமாக பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை மண் மணம் மாறாமல் […]

மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் மரணம்! பணியில் இருந்த போது விபரீதம்!

  மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   மதுரை மாவட்டம்  திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான குமார் என்பவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரராக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களாக காமராஜர் துறைமுக […]

கேரளாவில் தீவிரமடையும் கொரோனா பரவல்! பொதுமக்கள் அச்சம்!

கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.   உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று பரவல் பல லட்ச உயிர்களை பலி கொண்டதோடு கோடிக்கணக்கான மக்களை பாதித்தது. இதைத்தொடர்ந்து கிருமிநாசினி பயன்படுத்துவது, மாஸ்க் அணிவது என பழக்க வழக்கங்களை கடைபிடித்தார்கள் பொதுமக்கள். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பரவல் சிறிய அளவில் குறைந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு திரிபு நிலைகளில் மாற்றமடைந்தது. கொரோனா 2வது மற்றும் 3ம் அலைகள் […]

இஸ்லாமியர்கள் விடுதலைக்கு தடையாக இருக்கிறதா தி.மு.க..?

நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை எல்லாம் தி.மு.க. அரசு விடுதலை செய்யவேண்டும் என்பது இஸ்லாமியர்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. பல்வேறு காரணங்களால் இந்த பிரச்னை நீண்டுகொண்டே வருகிறது. இந்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாதம் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.  மூன்று இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி “அரசே விடுதலை செய்ய […]