News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாநில அவசரகால செயல்பாட்டு மையம்! முதலமைச்சர் காணொலியில் ஆய்வு!

சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கால செயல்பாட்டு மையத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.   குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் […]

விஷால் போராளி… மாரி செல்வராஜ் வில்லங்கமா.? நெல்லை சர்ச்சை

தென் மாவட்ட வெள்ளத்தை சமாளிப்பதற்கு தங்கை கனிமொழியையும், மகன் உதயநிதியையும் அனுப்பிவிட்டு, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுவிட்டார். களத்தில் உதயநிதியுடன் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் செயல்பட்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கியதால், அமைச்சர் உதயநிதியும் அவரது படத்தின் ஹீரோவுமான உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார். அன்றைய இரவே உதயநிதி அந்த கிராமத்துக்குச் செல்ல முயன்றும் முடியாமல் போயிருக்கிறது. அடுத்த […]

தூத்துக்குடியில் அமைச்சர் எ.வ.வேலு! மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. மழைவெள்ளத்தில் சிக்கித் தவித்த பொது மக்களை மீட்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது. இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் […]

மூட்டளவு தண்ணீரில் நடந்து சென்ற அமைச்சர் உதயநிதி! மக்களை சந்தித்து கலந்துரையாடல்!

மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூட்டளவு மழைவெள்ள நீரில் நடந்து சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து […]

பிரதமர்- முதலமைச்சர் சந்திப்பு: தமிழக வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்!

டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் மோடியை சந்தித்துத தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தன. பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர் அவர்களின் பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தின. இதைத்தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்ட தமிழக அரசு அவர்களை […]

தமிழக பேரிடரை பார்வையிட மோடி வரவே மாட்டாரா..? டெல்லி ஸ்டாலின் சந்திப்பு எக்ஸ்க்ளூசிவ்

வட மாநிலங்களில் வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு மட்டும் இதுவரை வருகை தந்ததே இல்லை. எடப்பாடி ஆட்சி நடந்தபோதும் தற்போது மிக்ஜாம் புயலுக்கு சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நேரத்திலும், நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் மோடி எட்டிப் பார்க்கவில்லை.   பிரதமர் நேரில் பார்வையிட்டால் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவரை பார்வையிடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் […]

டெல்லியில் முதலமைச்சர்! அரசின் நடவடிக்கையால் குறைந்த மழை வெள்ள பாதிப்பு!

டெல்லி சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட அதிகளவில் மழை பெய்ததாகவும், அரசின் நடவடிக்கையால் மழை வெள்ள பாதிப்பு குறைந்ததாகவும் பேட்டி அளித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சேதங்களை சரி செய்வதற்காக இடைக்கால நிதியாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் தேவை என்று மத்திய அரசிடம், தமிழக அரசு முறையிட்டிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து […]

செந்தில் பாலாஜிக்கு அடுத்து ஜெயிலுக்குப் போகிறாரா பொன்முடி..? காரிலிருந்து தேசியக்கொடி அகற்றம்

அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என்று தி.மு.க.வினர் தலைகீழாக நின்றும் முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் சூழல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு தி.மு.க.வினர் அரண்டு போயிருக்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் […]

பெருமழையால் துண்டிக்கப்பட்ட திருச்செந்தூர்! கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு!

தென் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழையால் துண்டிக்கப்பட்ட திருச்செந்தூருக்கு சென்ற கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.   தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் […]

தென்மாவட்ட மழை பாதிப்பு! டெல்லியில் இருந்து முதலமைச்சர் காணொலியில் ஆலோசனை!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   இதன் காரணமாக திருநெல்வேலி […]