இரட்டை இலையை முடக்கத் துடிக்கும் பன்னீர்… எடப்பாடி பதிலடி தீவிரம்

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று நினைப்பது போன்று அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையில் நின்று போட்டியிடுவோம் என்று அறிவித்திருப்பது எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘எடப்பாடி பதவிக்கு வந்த பின், 8 தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்து உள்ளது. எனவே நிலைமையை புரிந்து கொண்டு பழனிசாமி அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும். இரட்டை […]
கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை ரம்பா, கலா மாஸ்டர்!

தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கேப்டனின் மறைவை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திலும், சாலி கிராமத்தில் உள்ள கேப்டனின் இல்லத்திலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் மறைந்த போது வெளிநாடுகளில் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருந்த பல்வேறு நடிகர்கள் தற்போது நினைவிடத்திற்கும், சாலி கிராமத்தில் உள்ள கேப்டனின் […]
பாதுகாப்பில் சென்னை நம்பர் 1… 265 கோடி ரூபாய் சொத்து மீட்பு… போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆக்ஷனுக்கு பொதுமக்கள் பாராட்டு

சென்னை மாநகர காவல்துறையில் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கடந்த 2023ம் ஆண்டு மட்டும் 3,337 சவரன் தங்கம், 50 கிலோ வெள்ளி, ரூ.3.60 கோடி பணம் மற்றும் மத்திய குற்றப்பிரிவில் ரூ.265 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை மாநகர காவல் எல்லையில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை கட்டுப்படுத்தவும், திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது […]
வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை…. அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி சாத்தியமா..?

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கும் விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில் அண்ணாமலை பேசியபோது, ‘இதுவரை யார் குடும்பத்துக்கு அரசு வேலை கிடைக்கவில்லையோ, அவர்களுக்கு எல்லாம் வீட்டைத் தட்டி அரசு வேலை கொடுக்கப்படும். இது அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமை. அவர்களுக்கு நிச்சயம் வழங்கப்படும்’ என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. சீமான் போலவே […]
சீமானின் நாம் தமிழர் கட்சிக்குத் தடை வருகிறதா..? எல்.முருகன் அதிரடி குற்றச்சாட்டு

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றது என்.ஐ.ஏ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளதை அடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியிருக்கிறார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி தடை செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள்அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல […]
விஜயகாந்த் டாட்டூ… ஏழு சீட்டு… பிரேமலதாவின் தேர்தல் பிளான்

’விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று தன்னுடைய கையில் கேப்டன் விஜயகாந்த்தின் உருவத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறார் பிரேமலதா. மகிழ்ச்சியுடன் விஜயகாந்த் படத்தை பச்சை குத்திக்கொள்ளும் பிரேமலதாவின் வீடியோ இப்போது வைரலாக வலம் வருகிறது. இப்போது தினமும் விஜயகாந்த் சமாதிக்கு மக்கள் வந்துபோகிறார்கள். பிரதமர் மோடி தொடங்கி லோக்கல் அண்ணாமலை வரையிலும் விஜயகாந்த் புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே, இந்த செல்வாக்கையும், அனுதாப ஓட்டுகளையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை […]
அண்ணாவுக்கு ஸ்பெயினில் ஸ்டாலின் ஸ்பெஷல் அஞ்சலி… செவ்வந்தி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொ.ப.செ. த்ரிஷா இல்லைன்னா கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவில் நடித்தால் மட்டும் போதும், அரசாங்கத்தை எதிர்த்து வீர வசனம் பேசினால் போதும், சிலருக்கு திருமண மண்டபத்தில் வைத்து நலத்திட்ட உதவிகள் கொடுத்தால் போதும் தமிழகத்துக்கு முதல்வர் ஆகிவிடலாம் என்று கணக்கு போட்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் நிறைய அரசியல் தலைவர்கள் கருத்து சொல்லிவருகிறார்கள். 2026 தேர்தலில் நான் முதல்வர் ஆகவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன், இப்போது விஜய் குறுக்கே வந்து இடைஞ்சல் செய்கிறார் என்று சரத்குமார் கோபம் […]
பா.ஜ.க.வுக்கு விஜய் 1 வருட கால்ஷீட்… 1000 கோடி ரூபாய் பட்ஜெட் அரசியல்

குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டு, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் அறிவித்திருக்கும் கட்சிக்குப் பின்னே அமித் ஷாவின் தேர்தல் கணக்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய எந்த ஒரு விஷயம் குறித்தும் இதுவரை நடிகர் விஜய் கருத்து கூறியது இல்லை, ஒரே ஒரு மக்கள் போராட்டத்தில் கூடகலந்துகொண்டது இல்லை. ஒரே ஒரு பிரஸ் மீட் வைத்து செய்தியாளர்களை சந்தித்தது இல்லை. இந்த நிலையில், ஒரு புதிய படத்தின் அறிவிப்பு போன்று தமிழக வெற்றிக் […]
விஜய் சினிமாவுக்கு முழுக்கு, முழுநேர அரசியல் தலைவர்… தமிழக வெற்றி கழகத்துக்கு 2026 இலக்கு…

விஜய் சினிமாவுக்கு முழுக்கு, முழுநேர அரசியல் தலைவர்… தமிழக வெற்றி கழகத்துக்கு 2026 இலக்கு… அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற குழப்பத்துக்கு விடை கொடுப்பது போன்று இன்று கட்சிப் பெயரை அறிவித்து அடுத்த கட்டத்துக்கு அடியெடுத்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தன்னால் இயன்ற வரை சேவைகளை செய்துவருறோம் என்றாலும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர தன்னார்வ அமைப்பினால் முடியாது என்பதாலே கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். தமிழக […]

