தமிழகத்தில் புதுமையான அல்வா போராட்டம்… தி.மு.க.வின் கிண்டலுக்கு பாயும் பா.ஜ.க.

உரிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாயிலிருந்து 26 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள். கர்நாடகாவிற்கு 16 பைசாவும் தெலுங்கானாவுக்கு 40 பைசாவும், கேரளாவுக்கு 62 பைசாவும் ஆந்திராவுக்கு 50 பைசாவுக் கொடுக்கிறார்கள். அதேநேரம் 1 ரூபாய் கொடுக்கும் மத்திய பிரதேசத்துக்கு 1ரூபாய் 70 காசும், […]
அண்ணாமலை கையில் 40 வேட்பாளர்கள் பட்டியல்..! அமித் ஷா அனுமதி கொடுப்பாரா..?

தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அமித் ஷா அறிவித்திருக்கிறார். ஆனால் எடப்பாடியோ, ‘இப்படி ஒரு பேட்டியை நான் பார்க்கவே இல்லை’ என்று நழுவுகிறார். ஆக, பா.ஜ.க. கூட்டணியில் சேரும் விருப்பம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்றே தெரியவருகிறது. இப்படி ஒரு சூழலை கணக்கிட்டு அண்ணாமலை 40 தொகுதிகளுக்கும் ஒரு உத்தேச பட்டியல் தயார் செய்திருக்கிறார். அண்ணாமலை கணக்குப்படி தமிழகத்தில் பா.ஜ.க. 17 தொகுதிகளில் போட்டியிடுகிரது. அடுத்தபடியாக ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 […]
சைபர் கிரைம் பண மோசடிக்கு 1930க்கு போன் செய்யுங்க… சென்னை போலீஸ் எச்சரிக்கை

இப்போது யாரும் மணி பர்ஸில் பணம் வைப்பதில்லை, அதனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சீட்டிங் செய்து பணம் சம்பாதிப்பவர்கள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பிறரை சுரண்டுவதற்கு அதிநவீன யுக்திகளை பலரும் கையாள்கிறார்கள். மூத்த அரசு அதிகாரிகள், தனிநபர் போன்று போலியாக சுயவிபரங்களை, அடையாள அட்டையை உருவாக்கிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த மோசடிகள் பெரும்பாலும் சமூக ஊடக கணக்குகள் அல்லது தனிநபர்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் பிற […]
கேப்டனுக்கு கோயில்… மாவட்டம் தோறும் சிலை. அண்ணியார் பிரேமலதாவுக்கு முழு அதிகாரம் – தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்ட தீர்மானங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்டுவதற்கும் விஜயகாந்த் மறைவு அனுதாப ஓட்டுகளை வாங்கவும் தே.மு.தி.க. தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணிப் பேச்சுகள் விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கேப்டன் மறைவுக்கு வருத்தம் தெரிவித்தும், அஞ்சலிக்கு திரண்டுவந்த அரசியல் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்த மோடிக்கு நன்றி […]
விஜய்யைப் பார்த்து பயந்துவிட்டாரா விஷால்..? கட்சி அறிவிப்பு தள்ளிவைப்பு

விஜய் பாணியில் இன்று நடிகர் விஷாலும் கட்சி அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், இன்று ஒரு கடிதம் மட்டும் போட்டுவிட்டு கப்சிப் ஆகியிருக்கிறார் நடிகர் விஷால். அந்த கடிதத்தில், ‘எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக, உங்களில் ஒருவனாக அங்கீகாரம் கொடுத்த தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் நற்பணி இயக்கமாக செயல்படுத்தி வருகிறோம். என் தாயார் பெயரில் […]
டி.ஆர்.பாலு எம்.பி. பதவி பறிக்கப்படுமா..? அமைச்சர் எல்.முருகனுடன் அன்ஃபிட் மோதல்

மோடி என்றால் திருடர் என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி வைத்த விவகாரம் ஜாதி விவகாரமாக மாற்றப்பட்டு, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அதனை நீதிமன்றத்துக்குச் சென்று மீட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பட்டியலின அமைச்சரை அவமானப்படுத்திய டி.ஆர்.பாலுவின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என்று பா.ஜக.வினர் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் தமிழக வெள்ளப் பாதிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பேசிய டி.ஆர்.பாலு, ‘மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள […]
முதல்வர் ஸ்டாலின் சென்னை ரிடர்ன்… குவியும் முதலீடு… பிரதமர் மோடி, நடிகர் விஜய்க்கு விமர்சனம்..!

ஜனவரி 27ம் தேதி முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் சென்றனர். ஸ்பெயின் நாட்டில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் இன்று சென்னைக்குத் திரும்பி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டாலின், ‘’என்னுடைய ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது. முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் உள்ள தொழில் முதலீடு வாய்ப்புகளை எடுத்துரைத்தேன். ஸ்பெயின் […]
பா.ஜ.க. ஆட்சியை மாற்றப்போகும் தி.மு.க. தேர்தல் அறிக்கை..! விரைவில் வெளியிட கனிமொழி தீவிரம்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணியில் தி.மு.க. அதிவேகம் காட்டிவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று நாகர்கோவில் தேரேகால்புதூர் பகுதியில் அமைந்துள்ள கெங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில் கூடியது. இதில் திமுகவின் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய ஆகிய 6 திமுக […]
ராமதாஸை தேடிப்போன சி.வி.சண்முகம்… அ.தி.மு.க.வின் கூட்டணி வேட்டை

அது ஒரு காலம். போயஸ் தோட்டத்து வாசலில் டெல்லி தலைவர்கள் கால் கடுக்க காத்திருந்தார்கள். ராமதாஸ், வைகோ தொடங்கி எல்லா கூட்டணித் தலைவர்களும் ஜெயலலிதாவை பார்க்க வரிசையில் நிற்பார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி தொடர்ந்து பேசி வருகிறார் என்றாலும் ஒரே ஒரு கட்சி கூட இதுவரை தானே முன்வந்து பேசவில்லை. தி.மு.க. கூட்டணியும் உடைவது போல் தெரியவில்லை. இப்போது எஸ்.டி.பி.ஐ., புரட்சி […]
தமிழகத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் ரெடி..! பாண்டிச்சேரியில் நிர்மலா சீதாராமன்.. சென்னையில் குஷ்பு..!

தமிழகத்திற்கு நரேந்திரமோடி இம்மாதம் 25ம் தேதி வரயிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் மேடையேற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தீவிரம் காட்டிவருகிறது. தற்போது பா.ஜ.க.வில் பன்னீர், டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே.பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார்,, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி இன்னமும் உறுதி கொடுக்காமல் இழுத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க விரும்புபவர்கள் பட்டியல் […]

