பா.ஜ.க. வீழ்ச்சி… இந்தியாவின் எழுச்சி. ஒன்றிய ஆட்சி மாற்றத்துக்கு கனிமொழி உறுதி

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற கனிமொழியின் பெயரைக்கூட பிரதமர் சொல்லவில்லை என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்த கனிமொழி, மத்திய ஆட்சி மாற்றத்திற்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை முடிவு கட்டும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டரணி. பிரச்சாரக்குழு. சமூக வலைத்தளக் குழு, ஆலோசனைக்குழு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, மாநகர மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் ஆகியோ அடங்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை அடையார் பகுதியில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கத்தில் […]
ஸ்டெர்லைட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர மூடு விழா… வைகோ போராட்டத்துக்கு வெற்றி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக அமைந்துள்ளது. தமிழக அரசு உறுதியாக இருந்தது என்றாலும் இதனை வைகோவின் வெற்றியாகவே கொண்டாடுகிறார்கள். இதுகுறித்து வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என்று 1996 ஆம் ஆண்டில் […]
ஸ்டாலினுக்கு 71வது பிறந்த நாள் கொண்டாட்டம்… பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து மழை

இன்று 71வது பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அத்தனை கூட்டணிக் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.க.வினர் ஸ்டாலின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் மோடி அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் […]
தருமபுரி ஆதினத்துக்கு ஆபாச வீடியோ மிரட்டல்… பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம் கைது

இந்துக்களை பாதுகாக்கும் கட்சி என்றும் கோயிலை அரசிடம் இருந்து மீட்க வேண்டும் என்றும் குரல் கொடுத்துவரும் பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் ஒருவர் ஆதினத்தை பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் படு சர்ச்சையை ஏற்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரி ஆதினத்தை பணம் கேட்டு மிரட்டியதோடு, ஆதினத்தின் ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுட்டு விடுவேன் என்று மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க. நிர்வாகி மிரட்டுவதாக ஆதினத்தின் சகோதரர் விருத்தகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து […]
மீண்டும் தமிழகத்துக்கு மோடி விசிட்… எடப்பாடிக்கு இரட்டை இலை மிரட்டல்..?

பல்லடம், மதுரை, குலசேகரப்பட்டணம் என்று ஒரு ரவுண்ட் அடித்து திரும்பியிருக்கும் மோடி கடும் அப்செட் என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் கூட்டணித் தலைவர்கள் யாரும் உடன் நிற்கவில்லை. இதனை சரிக்கட்டும் வகையில் மீண்டும் சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி. மார்ச் 4ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட இருக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருக்கிறார். இதற்கு பூமி பூஜை நேற்று போடப்பட்டது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி […]
இரண்டு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்ஃபர்… காரணம் தெரியுமா..?

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக பல்வேறு துறைகளின் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழ்நாட்டில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காகர்லா உஷா மற்றும் சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். ஆகியோர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். டூரிசம் துறையில் இருந்த காகர்லா உஷா ஹவுசிங் துறைக்கும் ஹவுசிங் துறையில் இருந்த சமயமூர்த்தி டூரிசம் துறைக்கும் மாற்றம் […]
கஞ்சா சாக்லேட்… கடத்தல் பெண்கள்… ஒரே வாரத்தில் 41 கிரிமினல்களை கைதுசெய்த தனிப்படை போலீஸ்

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், விற்பனையாளர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி, ‘போதை தடுப்பு நடவடிக்கை’ எடுப்பதற்காக கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்படையினர் கடந்த 21.2.2024 முதல் 27.2.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா போதை பொருட்கள் […]
பல்டி அடிப்பாரா வேலுமணி..? அ.தி.மு.க.வுக்குள் கசமுசா

அண்ணா தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் எப்படியாவது கூட்டணி சேர்த்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வில் சிலரே முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களில் வேலுமணி முதன்மையானவர் என்று சொல்லப்படும் நிலையில், முதன்முதலாக வேலுமணி இதுகுறித்து வாய் திறந்து பேசியிருக்கிறார். எஸ்.பி.வேலுமணி இது குறித்து, ‘’தற்போதைய அரசியல் சூழலில்சமூக வலைதளங்களில் பல்வேறுதகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுகின்றன. இதற்காக திமுக மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவை பாராட்ட வேண்டும். இல்லாததை இருப்பதைப் போலவும், இருப்பதை இல்லாதது போலவும் அவர்கள் காண்பிக்கின்றனர். திமுக – […]
பெற்ற தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றாமலே சாந்தன் மரணம்… வேதனையில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் உடல் நலம் தேறிவருகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று காலை காலமானார். கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் […]
பல்லடத்தில் மோடி செம ஹேப்பி.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்தது எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காகவா..?

அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்த மோடி ரொம்பவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதனாலே அண்ணாமலையின் முதுகில் தட்டி தன்னுடைய பாராட்டைத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. […]

