News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மும்பை பயணத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்கிறார் ஸ்டாலின்..?

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள, ‘இந்தியா’ கூட்டணியின் 3வது கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் ஆலோசனையை தெரிவிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மம்தா பானர்ஜி, முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, என்சிபி (சரத்சந்திர […]

மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காணுங்கள் அன்புமணி வேண்டுகோள்

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வதும், படகுகளையும் வலைகளையும் சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. மீன் பிடிக்க உரிமையுள்ள இடங்களில் மட்டுமே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தாலும் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக அத்துமீறுகிறது.    சமீபத்தில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.   இதற்கு முன்பாக கடந்த 10-ம் தேதி இதேபோல […]

மோடி ஞானியாக மாறியுள்ளார் அண்ணாமலை பேச்சு

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி நாளை அறிவிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டை எப்படியாவது பா.ஜ.க. வசம் கொண்டுவருவதற்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். திருப்பூர், நெல்லை, சென்னை போன்ற மாவட்டங்களில் நடந்த கூட்டங்களில் இதற்கு முன்பு கலந்து கொண்டார்.    அதைத் தொடர்ந்து இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது பாரதீய ஜனதா கட்சி. அதிலும் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி. முன்னதாக […]

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்… போக்சோவில் சிக்கிய எடியூரப்பா

பாலியல் புகார்கள் அரசியல் தலைவர்கள் மீது அவ்வப்போது எழுவதும், அப்படியே அடங்கிப்போவதும் உண்டு. இப்போது கர்நாடக முன்னாள் முதல்வரும் பா.ஜ.க. முக்கியப் புள்ளியுமான எடியூரப்பா மீது எழுந்திருக்கும் புகாரும் அடுத்து எடுக்கப்பட்டுள்ள போக்சோ நடவடிக்கையும் நாட்டையே அதிர வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி கல்வி உதவித் தொகை தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற ஒரு 17 வயது மாணவியிடம் கூடுதல் தகவல் கேட்க வேண்டும் என்று தனி அறைக்குள் அழைத்து சென்றுள்ளார். அந்த அறையில் […]

தேர்தல் பத்திரம் பணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வழங்கப்படுமா?

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாக தேர்தல் பத்திரங்களை பா.ஜ.க. அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்தது.  இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் ஸ்டேட் வங்கியின்  கிளைகளில் வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் நன்கொடையாக அளிக்கலாம். கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க. அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திர திட்டம்  2018 ஜனவரி 29ம் தேதி முதல் சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தின் […]

முதலில் ரெய்டு… அப்புறம் வசூல்..! பா.ஜ.க. கணக்கில் வாங்கியதே 11,562 கோடி என்றால் பிளாக்கில் எவ்வளவு..?

அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள உரிமை இல்லை என்றும் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு அவசியம் இல்லை என்றெல்லாம் மோடி அரசு தேர்தல் பத்திரங்கள் விசாரணையை முடக்கப் பார்த்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உறுதியாக இருந்த காரணத்தால் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் விஞ்ஞான ரீதியிலான வசூல் வேட்டை அம்பலத்துக்கு வந்துள்ளது.   அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் […]

மோடி வித்தை இங்கே செல்லாது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற பாரதீய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழக மக்களை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.  கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மற்ற கட்சியில் உள்ள ஆட்களை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு விசிட் அடித்துக்கொண்டிருக்கிறார்.  அதிமுக கட்சியுடன் கூட்டணி முறிந்த நிலையில் […]

தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னம் போட்டி.. கொதிக்கும் சீமான் தம்பிகள்

தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று வருகிறார் சீமான். வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது கரும்பு விவசாயி சின்னம் தமிழகம் முழுக்க சென்று சேர்ந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தை அணுகினர். ஆனால், கரும்பு விவசாயி சின்னம் பாரதிய பிரஜா ஐக்யதா என்ற கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. நீதிமன்றத்திலும் சீமானுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதையடுத்து, […]

ராமதாஸ், பிரேமலதாவின் மீது நம்பிக்கை இழந்த எடப்பாடி பழனிசாமி..! மக்களோடு கூட்டணி அறிவிப்பு

தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி அடைவோம் என்று கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், ‘மக்களோடு பலமான கூட்டணி வைத்திருக்கிறோம்’ என்ற புதிய கோஷத்தை எழுப்பியிருக்கிறார். ராமதாஸின் பா.ம.க.வும், பிரேமலதாவும் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வுடனும் பா.ஜ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இன்று தே.மு.தி.க.வுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா மீது முழு நம்பிக்கை வரவில்லை. அதேபோல் ராமதாஸ் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். […]

ஸ்டாலினுடன் மீண்டும் கவர்னர் ஆர்.என்.ரவி நேரடி மோதல்… பொன்முடிக்கு சிக்கலோ சிக்கல்

தமிழக அரசுக்கும் தமிழக கவர்னருக்கும் பல்வேறு விஷயங்களில் மோதல் நடந்துவருகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்குப் பயணம் கிளம்பியிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார். திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சராக பொன்முடிக்கு […]