பிரதமர் மோடியின் கோவை ரோடு ஷோவில் பள்ளி மாணவிகள்… குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி சர்ச்சை

பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ பிரமாண்ட வெற்றி என்று அண்ணாமலை தரப்பும் படு தோல்வி என்று தி.மு.க. தரப்பும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், பள்ளி மாணவிகள் கட்டாயமாக கலந்துகொள்ள வைத்ததும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து தி.மு.க.வின் ராஜிவ்காந்தி, ‘கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டெம்போ டிராவலர் வண்டிகளை அரைநாள் வாடகை 5500 ரூபாய் என பேசி முன்பதிவு செய்து இருந்தனர்! ஒரு நபருக்கு 300 ரூபாய் என […]
உதயமாகிறது அ.தி.முக. (ஓ.பி.எஸ்.), எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் இரட்டை இலை சிக்கல்

அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியானது. அதாவது, அ.தி.மு.க.வின் பெயர், கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கூறிய பன்னீர்செல்வத்துக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. […]
மாலையில் மிரட்டல்… காலையில் கையெழுத்து..! பா.ஜ.க.விடம் சரண்டரான ராமதாஸ்

சி.வி.சண்முகம் ஐந்து முறை டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார். சேலம், தர்மபுரி போன்ற ஒருசில தொகுதிகளில் உடன்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இதை அறிந்த பின்னரே பா.ஜ.க. நேரடி மிரட்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர இருக்கிறார். ஆகவே, இனியும் தவறான் முடிவு எடுத்தால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே உடனடியாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்நிலை குழு ஆலோசனை […]
தமிழிசை செளந்தர்ராஜன் திடீர் ராஜினாமா.. புதுவையில் எம்.பி. போட்டி..?

தற்போது தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தர்ராஜன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே மத்திய அமைச்சர் பதவிக்கு கணக்குப் போட்டு காய் நகர்த்திவந்தார் தமிழிசை. அதனாலே ஆளும் தி.மு.க. அரசுடன் நேரடியாக மோதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் புதுவையில் ரங்கசாமி கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டதுமே, அங்கு பா.ஜக. சார்பில் தமிழிசை நிற்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. இதனை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் இன்று […]
ஸ்டாலின் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியல்… கதிர் ஆனந்த், கெளதம சிகாமணிக்கு சீட் உறுதியாம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களில் நிறைய பேர் வாரிசுகள் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக முன்வைத்து வருகிறார்கள். எனவே, சில வாரிசுகளுக்கு சீட் இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், தி.மு.க.வின் உத்தேசப் பட்டியலில் வாரிசு வேட்பாளர்களில் பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை. எனவே, பெரும்பாலான வேட்பாளர்கள் அப்படியே அதே தொகுதியில் நிற்கிறார்கள். கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் நின்றால் தோற்றுவிடுவார் என்று ஐ.டி. விங்க் கொடுத்த ரிப்போர்ட்டை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லையாம். துரைமுருகனை இப்போது தேவையில்லாம உரச […]
பொன்முடியை அமைச்சராக்கவே முடியாது – ஸ்டாலினுக்கு கவர்னர் சவால்

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்ட பிறகும், அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் டெல்லிக்குப் போய்விட்டார். டெல்லியில் இருந்து திரும்பிய பிறகும் அந்த கோரிக்கையை மறுத்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது, குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பு வந்திருக்கலாம். ஆனால் அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கவில்லை, சார்ஜஸ் […]
கனிமொழிக்கு எதிராக ராதிகா..? பா.ஜ.க.வின் முதல் பட்டியலில் 10 வேட்பாளர்கள் ரெடி

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி முடிவாகிவிட்டது என்றாலும் எதிர்க் கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கும் இழுபறி நிலையே நீடிக்கிறது. பா.ம.க. மற்று தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்வதையே விரும்புகின்றன. ஆனால், மத்திய பா.ஜ.க. ஏதேனும் அழுத்தம் கொடுத்து தங்கள் பக்கம் ஏதேனும் ஒரு கட்சியை இழுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகவே, இரண்டு பக்கமும் தேர்தல் கூட்டணி இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் மற்றவர்களுக்கு முன்பாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று […]
பா.ஜ.க.வின் அடிமையா தேர்தல் கமிஷன்..? ஏழு கட்டத் தேர்தலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு

40 தொகுதிகள் கொண்ட தமிழகத்துக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் அதேநேரத்தில் உத்திரப்பிரதேசத்திற்கு மட்டும் ஏழு கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுவதற்குப் பின்னே ஆளும் பா.ஜ.க.வின் அழுத்தம் இருப்பதாக கருதப்படுகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்த பா.ஜ.க. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு வசதியாகவே தேர்தல் நடத்துவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படாததும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இது குறித்து தி.மு.க. சார்பில், ’40 […]
ஸ்டாலினுக்கு அண்ணாமலை திடீர் பாராட்டு… தமிழகத்தில் பா.ஜ.க. கல்வித் திட்டம் நுழைந்துவிட்டதா..?

மத்திய கல்வித் திட்டத்தை எந்த வகையிலும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவந்த ஸ்டாலின் தமிழகத்தில் மத்திய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம். ஸ்ரி பள்ளிகளை செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு 60 சதவிகித நிதியும் மாநில அரசு 40% நிதியும் கொண்டு இந்த பள்ளி செயல்படும். தமிழகம், கேரளா, டெல்லி, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தில் சேராமல் நின்றன. ஆனால், திடீரென அரசு ஆணை மூலம் இந்த பள்ளிகளை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]
யாருய்யா இந்த லாட்டரி கிங் மார்ட்டின்..? எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்

இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் லாட்டரி கிங் என்று அழைக்கப்படும் மார்ட்டின். தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, இவரது பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் தான். இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் இந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை […]

