கோவையில் எய்ம்ஸ்… விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய். எடப்பாடி பழனிசாமியின் அட்டகாச வாக்குறுதிகள்….

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் இருக்கும் பல விஷயங்கள் இதிலும் அப்படியே இருக்கிறது. குறிப்பாக, ஆளுநர் பதவி நியமன முறையில் மாநிலங்களின் கருத்தை கேட்டு நியமித்தல், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்தல், மகளிர் உரிமைத் தொகை, வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவை அப்படியே இருக்கின்றன. இதுதவிர, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்த வலியுறுத்தல், குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றியதை கைவிட வலியுறுத்தல், சென்னை உயர் […]
எடப்பாடி பழனிசாமியின் இரண்டாவது லிஸ்ட்… வி.ஐ.பி.கள் யாருமே இல்லையேப்பா…

ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி மீதமுள்ள தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். ஆனால், இந்த தேர்தலில் ஆட்சி நேரத்தில் ஆளுமையுடனிருந்த அமைச்சர் பெருமக்கள் யாருமே நிற்கவில்லை என்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள், முக்கிய வி.ஐ.பி.கள், முன்னாள் அமைச்சர்கள் யாருமே போட்டியிட முன்வராத காரணத்தால் சாதாரண நபர்களையே நிறுத்த வேண்டிய சூழலுக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். இதோ எடப்பாடி வெளியிட்ட இரண்டாவது பட்டியல். கோவையில் சிங்கை ராமச்சந்திரனுக்கு செல்வாக்கு குறைவாக இருக்கும் நிலையில், அவரை நிறுத்தியிருக்கிறாரே என்று […]
போலி சாமியார் ஜக்கி வாசுதேவுக்கு மட்டும் அப்பல்லோ அலோபதி…. ஈஷா சீடர்களுக்கு ஆயுர்வேதமா..?

அதனை நம்பக்கூடாது என்று மக்களுக்குப் பாடம் எடுத்த ஜக்கி வாசுதேவ், தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். ஜக்கியின் பேச்சைக் கேட்டாலே பரவசமாக இருக்கும். பாதரசம் உண்பது, பாம்பு விஷம் குடிப்பது, போலி மருத்துவத்தை பரப்புவது, ஆயுர்வேதாவும், சித்தாவும் மட்டுமே சரியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தனக்கு ஒரு பிரச்னை என்றதும் அப்பல்லோ மருத்துவமனையில் போய் சிகிச்சை எடுத்துக்கொண்டார். மூளையில் ரத்த கசிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை […]
மீண்டும் அமலாக்கத்துறை ரெய்டு… விஜயபாஸ்கர், ஜி ஸ்கொயர் பாலா சிக்குவார்களா..?

தேர்தல் காலத்தில் அமலாக்கத்துறை அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வையும் தி.மு.க.வையும் குறி வைக்கும் வகையில் இன்று ரெய்டு ஆரம்பமாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக 7 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை சட்டமன்ற உறுப்பினராகவும், புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். சமீபகாலமாக கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்காமல அமைதியாகவே இருந்துவருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள சி.விஜயபாஸ்கர் வீட்டில் […]
பன்னீருக்கு இந்த அவமானம் தேவையா..? மகனுக்காக ஒண்ணே ஒண்ணு

எடப்பாடி பழனிசாமி கூட்டணியே முடிவாகி வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் குழப்பமோ குழப்பம் கும்மியடிக்கிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் ஓ. பன்னீர்செல்வம் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. பன்னீர் 3 தொகுதிகளை கேட்ட நிலையில், ஒரே ஒரு தொகுதி அதுவும் ரவீந்திரநாத்துக்கு மட்டும்தான் தர முடியும் என்று அண்ணாமலை உறுதியாக நிற்கிறார். அதேபோல் ஜி.கே.வாசனுக்கும் ஒரே ஒரு தொகுதி என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது. அதற்கு மேல் தர முடியாது என்பதைக் கேட்டு ஜி.கே.வாசனும் பதறி […]
பொன்முடி மகனுக்குப் பதிலாக நேருவின் மகன்… தி.மு.க.வில் கழட்டிவிடப்பட்ட சிட்டிங் எம்.பி.க்கள்..!

தஞ்சையில் பழனி மாணிக்கத்திற்குப் பதிலாக முரசொலிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் சண்முகசுந்திரத்திற்குப் பதிலாக கே.ஈஸ்வரசாமிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் சிட்டிங் எம்.பி. பார்த்திபனுக்குப் பதிலாக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரான செல்வ கணபதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சிட்டிங் எம்.பி. கெளதம சிகாமணிக்குப் பதிலாக தே.மலையரசனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பொன்முடி மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருக்கு பெரம்பலூர் தொகுதி கிடைத்துள்ளது. தென்காசியில் சிட்டிங் எம்.பி. தனுஷ்குமாருக்குப் பதிலாக டாக்டர் ராணியின் பெயர் இடம் […]
இந்தியா முழுக்க மகளிர் உரிமைத் தொகை… ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி மற்றும் 21 வேட்பாளர் பட்டியல்

இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு அம்சங்களை பட்டியலிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் சில சிறப்பம்சங்கள் மட்டும் இங்கே. உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும். புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும். ஒன்றிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். இந்தியா முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் […]
ஜெ. பாணியில் தி.மு.க.வுக்கு முன்பாகவே வேட்பாளரை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

எல்லா தேர்தல்களிலும் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிப்பது ஜெயலலிதாவின் பாணி. அந்த வகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பழனிசாமி. அவர் வெளியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இதுதான். 1. சென்னை வடக்கு – ராயபுரம் மனோ 2. சென்னை தெற்கு – ஜெயவர்தன் 3. காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர் 4. அரக்கோணம் – ஏ.எல்.விஜயன் 5. கிருஷ்ணகிரி […]
ஏழு நாளில் 60 கஞ்சா கிரிமினல்கள் கைது… காவல் ஆணையாளர் உத்தரவில் தொடர்கிறது அதிரடி வேட்டை

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனைகள் மேர்கொள்வதற்கு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில் துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடத்தி […]
பா.ஜ.க. கூட்டணியால் ராமதாஸ்க்கு ஆறு வழியில் அமோக லாபமா..? வன்னியர்களுக்கு ராமதாஸ் மோசடியை அம்பலப்படுத்தும் சி.ஆர்.ராஜன்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக பா.ம.க. அறிவிப்பு செய்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ராமதாஸின் சுயநல முடிவு என்றும் இதன் மூலம் வன்னியர் உள் ஒதுக்கீட்டு ஆபத்து என்றும் எச்சரிக்கை பதிவு வெளியிட்டிருக்கிறார் வன்னியர் சத்தியர் சாம்ராயத்தின் தலைவரான சிஆர்.ராஜன். அவரது பதிவில், ‘டாக்டர்.ச.இராமதாஸ் அவர்கள் .வன்னியர் 10.5% யை அழித்த வன்னிய விரோதிகள் உள்ள பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். வன்னியர் 10.5% க்கு எதிராக குரல் […]

