முஸ்லீம்களுக்கு தனி பட்ஜெட்..? காங்கிரஸ் மீது மோடி அதிரடி

இந்துக்கள், முஸ்லீம்கள் குறித்து பேசினாலே நான் பொதுவாழ்க்கையில் இருக்கும் தகுதியை இழந்துவிடுவேன் என்று சமீபத்தில் பேசியிருந்த மோடி, மீண்டும் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், திண்டோரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “மதத்தின் அடிப்படையில் நாட்டில் பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. மதத்தின் அடிப்படையில் மத்திய பட்ஜெட்டை பிரிக்கவும் அந்த கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதன்படி காங்கிரஸ் சார்பில் இந்துக்கள், முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட் […]
சவுக்கு சங்கருக்கு காலை உடைக்கப் போறாங்க?

காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்து விமர்சனம் செய்ததற்காக வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்துவருகிறார். வழக்கு மேல் வழக்கு என பல ஊர்களில் தொடுக்கப்பட்டதால் குண்டர் சட்டத்தில் போடப்பட்டார். திருச்சி முசிறி டிஎஸ்பி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், கோவை சிறையிலிருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு ஆஜராக போலீசார் அழைத்து வந்தனர். பெண் காவலர்கள் புடை சூழ வேனில் அழைத்துவரப் பட்டார் சவுக்கு சங்கர். இது குறித்து நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர், […]
ரஞ்சிதாவைப் பார்க்க கைலாசாவுக்கு இ-விசா. நித்தி அழைப்பு

நாட்டில் தேர்தல் களேபரம் நடந்துகொண்டிருக்கிறது. விலைவாசி எகிறிக்கொண்டு இருக்கிறது. இந்த அதகளத்துக்கு நடுவிலும் குஜாலாக இருப்பது எப்போதும் நித்தியானந்தா மட்டும் தான். உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்ததாகவும், செத்துப்போனதாகவும் அறிவிக்கப்பட்ட நித்தியானந்தா மீண்டும் இப்போது லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். அது மட்டுமின்றி எங்கே இருக்கிறது என்றே தெரியாத கைலாசாவுக்கு வரச்சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில், ‘உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு நிச்சயமான நிரந்தரமான தீர்வுகளை பெற, கைலாஸாவின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் அளிக்கும் […]
ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர். அகிலேஷ் திடீர் அறிவிப்பு

ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர். அகிலேஷ் திடீர் அறிவிப்பு பிரதமர் மோடியை பிரதமர் வேட்பாளர் என்று என்.டி.ஏ. கூட்டணி அறிவித்து பிரசாரம் செய்துவரும் நிலையில், இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. நான்கு கட்டத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், ‘ராகுல் காந்தியே எங்கள் பிரதமர் வேட்பாளர்’ என்று அகிலேஷ் அறிவித்திருப்பது அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சி […]
தனுஷ் அப்படிப்பட்ட ஆணா ? கொல வெறியில் தனுஷ் ரசிகர்கள்

சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் பாடகி சுசித்ரா பேசுகையில், ‘அவரது முன்னாள் கணவர் கார்த்திக், தனுஷ் போன்றவர்களை ஓரினச் சேர்க்கையாளர்’ என்று பேசியிருந்தார். இதற்கு கார்த்திக் குமார், ‘நான் ஓரினச் சேர்க்கையாளருக்காக குரல் கொடுப்பவராக இருக்கிறேன். இதன் அர்த்தாம் நானும் அப்படிப்பட்ட நபர் அல்ல’ என்று விளக்கம் அளித்திருக்கிறார். இந்த விஷயத்தில் தனுஷ் மீதும் சுசித்ரா கூறியிருக்கும் குற்றச்சாட்டு ஒரு தொலைக்காட்சியில் போடப்பட்டவே, தனுஷ் ரசிகர்கள் கொலவெறியில் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகிறார்கள். அதேநேரம் தனுஷ், ஐஸ்வர்யா […]
விடுதலைப்புலிகள் தடை நீட்டிப்புக்கு எதிராக சீமான் போராட்டம்..?

சவுக்கு சங்கர், ஃபெலிக்ஸ், யானை வழித்தடம் என்று சகல விஷயங்களுக்கும் குரல் கொடுத்துவரும் நாம் தமிழர் சீமான், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிப்புக்கு எதிராக எப்போது போராட்டம் நடத்துவார் என்று தம்பிகள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் எல்டிடிஈ எனப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஒன்றிய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இந்தியா முழுவதும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றன. எல்டிடிஈ அமைப்பின் […]
அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு அழைப்பு… பன்னீரை கட்டம் கட்டிய மோடி

உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல் படி மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. இதில் பெரும்பகுதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள ரூ.2.86 கோடி நிரந்தர வைப்புத்தொகை. கையிலிருக்கும் ரொக்கம் ரூ.52.920. காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை ரூ.80.304. தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9.12 லட்சம் முதலீடு. ரூ.2.68 லட்சம் […]
நயினார் நாகேந்திரன் இனி தேர்தலில் நிற்கவே முடியாதா..?

தேர்தல் சமயத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அந்த குற்றவாளிகள் நயினார் நாகேந்திரனின் எமர்ஜென்சி கோட்டாவைப் பயன்படுத்தி பயணம் செய்தவர்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியவர் நயினார் நாகேந்திரன். இந்த தேர்தலில் ஜெயித்து அமைச்சர் ஆகவேண்டும் என்ற கனவில் நெல்லையில் களம் இறங்கினார். தேர்தல் நேரத்தில் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் என்று சொல்லப்படும் மூவர் 4 கோடி ரூபாயுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் […]
எடப்பாடி பழனிசாமிக்கு செல்வப்பெருந்தகை தனி ரூட்டு… கண் சிவக்கும் தி.மு.க.

காங்கிரஸ் ஆட்சியை இழந்து 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. இனியும் நேரத்தை வீணடிக்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு நேரம் நெருங்கிவிட்டது என்று செல்வப்பெருந்தகை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இணக்கம் நிலவி வந்த நிலையில், சவுக்கு சங்கர் கைது நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கரை வெளியே கொண்டுவருவதற்கு சவுக்கு சங்கரின் உறவினரும் காங்கிரஸ் வேட்பாளருமான சசிகாந்த் செந்தில் தீவிரமாக களம் இறங்கினார். அவருக்காக செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான மோகன் குமாரமங்கலம் பேசினார். […]
லக்னோ ஏர்போட்டுக்கு எத்தனை டெம்போ? மோடியை கிண்டலடிக்கும் ராகுல்

அம்பானி, அதானி குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் நாளுக்கு நாள் அதிக வேகமும், துணிச்சலும் அதிகரித்து வருகிறது. டெம்போக்களில் கருப்புப் பணம் வாங்கும் கலாச்சாரத்தை விடாமல் தொடர்ந்து அடித்து வருகிறார். லக்னோவில் தேர்தல் பரப்புரைக்கு வந்திருக்கும் ராகுல் காந்தி போட்டிருக்கும் ட்வீட் படு வைரலாகிறது. அந்த பதிவில், ‘நான் இப்போது லக்னோ விமான நிலையத்தில் தரை இறங்கப்போகிறேன். இந்த விமான நிலையம் மோடிஜி அவர்கள் தனது நண்பர் அதானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்த […]

