சவுக்கு சங்கர் விவகாரத்தில் மாஜி அ.தி.மு.க. அமைச்சருக்கு சிக்கல்..?

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சமூகவலைதளங்களில் அ.தி.மு.க.வினரே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க. வழக்கறிஞர்களே சவுக்கு சங்கர் சட்டத்தின் பிடியிலிருந்து வெளியே வருவதற்கு உதவி செய்து வருகிறார்கள். இதற்கு என்ன பின்னணி என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மூன்று விஷயங்களில் அ.தி.மு.க.வுடன் சவுக்கு சங்கர் கூட்டணி வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் முதலாவது, ஓ.பன்னீர்செல்வம் மீது அளவுக்கு அதிகமாக விமர்சனம் செய்து அவரை அரசியல் கோமாளியாக மாற்ற வேண்டும் என்ற விவகாரம். இதனை […]
மோடி ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ். உடைக்கப்படுமா?

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு ஊழல்வாதியும் வெளியே இருக்க முடியாது, எல்லோரையும் சிறையில் தள்ளுவோம் என்று தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரத்த குரலில் பேசி வருகிறார் பிரதமர் மோடி. அதேநேரம், அடுத்து பிரதமராக நரேந்திர மோடி வந்தால், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்கப்படும் அல்லது உடைக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே எச்சரிக்கை செய்திருக்கிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவரது பதவியை விரைவில் ஆர்.எஸ்.எஸ். பறித்துவிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு குண்டு போட்டார். அதன் தாக்கம் […]
விஜய், த்ரிஷாவுக்கு போதைப் பொருள் பரிசோதனை..?

சினிமா நட்சத்திரங்கள் பங்குகொள்ளும் பார்ட்டிகளில் எல்லாம் கொக்கைன் சப்ளை செய்யப்படுகிறது என்று பாடகியும் நடிகையுமான சுசித்ரா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் விஜய், த்ரிஷா ஆகியோருக்கு போதைப் போதைப்பொருள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கோரிக்கை வைத்திருப்பது கடும் அதிர்வு ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் ஒரு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீரலட்சுமி, ‘’போதைப்பொருளின் தீமைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை […]
மோடியின் ஆபரேஷன் துடைப்பம்… கேஜ்ரிவால் போராட்டம்

ஆம் ஆத்மி கட்சியை அழிப்பதற்காக பிரதமர் மோடி. ‘ஆபரேஷன் துடைப்பம்’ என்ற சதித் திட்டம் தீட்டியிருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது தேர்தல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேரணியாக சென்றார். இந்த பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘எதிர்காலத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய போட்டியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் என்பதை அந்த கட்சி உணர்ந்துள்ளது. அதன்காரணமாக இப்போதே ஆம் ஆத்மியை முழுமையாக அழிக்க பிரதமர் […]
சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

ஈழத்தில் பிரபாகரன் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த நேரத்தில் நீ என்னுடன் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று எல்லோருக்கும் புரியும்படி சொல்லிவிட்டேன். இனியும் நீ ஈழம் வாங்கிக் குடுப்பே, இட்லி, சட்னி வாங்கித்தருவேன்னு திரியுறானுங்களே என்று நாம் தமிழர் சீமானையும் அவரது தம்பிகளையும் நடிகை விஜயலட்சுமி திட்டித் தீர்த்து அடுத்த வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பியிருக்கிறார். நடிகை சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விஜயலட்சுமி, திடீரென அந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு கர்நாடகா போய்விட்டார். சமீபத்தில் ஒரு […]
தி.மு.க.வில் உதயநிதி ஆதரவாளர்களுக்குப் பதவி. இனி, 117 மாவட்டச் செயலாளர்கள்?

முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இப்போது தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் பெரிதாக தலையிடுவது இல்லை. முக்கிய முடிவுகளை சபரீசனும் உதயநிதியுமே சேர்ந்து எடுத்துவருகிறார்கள். தி.மு.க.வில் அமைச்சர்கள் பதவிகளுக்கு இணையாக பார்க்கப்படும் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 117 ஆக உயர்த்த திட்டமிட்டுக்கிறார்கள். இதற்காகவே உதயநிதி இப்போது இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசும் உதயநிதி ஆதரவாளர்கள், ‘’இப்போது திருச்சி, விழுப்புரம், வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற பல மாவட்டங்களில் மூத்த கட்சித் தலைவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறது. […]
திருவேற்காடு மக்களுக்கு சீமான் சட்டப்போராட்டம் நடத்துவாரா..?

திருவேற்காட்டில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் நாம் தமிழர் சீமான். ‘’கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் வீடுகளை இடித்து, திமுக அரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது. மூன்று தலைமுறைகளாக வீடுகள் கட்டி வாழ்ந்து வரும் மக்களை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளர்களெனக்கூறி அகற்ற முற்படுவது கொடுங்கோன்மையாகும். திருவேற்காட்டில் கூவம் ஆற்றுக்கு அருகில் பெருமாள் […]
சவுக்கு சங்கருக்கு மரண பயத்தைக் காட்டிட்டாங்களா..?

’கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்’ என்றும் தன்னை பெண் போலீஸார் தாக்கினார்கள் என்றும் தொடர்ச்சியாக சொல்லிவந்த சவுக்கு சங்கர் திடீரென, ‘நான் துன்புறுத்தப்படவில்லை’ என்று வாக்குமூலம் கொடுத்திருப்பது அவரது ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு நாள் போலீஸ் காவலுக்குச் சென்றுவந்த சவுக்கு சங்கர், ‘போலீஸ் விசாரணையில் நான் எந்த துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை’ என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு தகவல்கள் உலாவருகின்றன. சவுக்கு சங்கர் வாங்கிய சொத்து விபரங்கள் மற்றும் பெண்களை ஏமாற்றி பணம் […]
ராஷ்மிகா மந்தனா வந்தாச்சு. மோடி ஆர்மிக்கு குஷி

கங்கனா ரனாவத் மட்டுமே பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், திடீரென நடிகை ராஷ்மிகா மந்தனா களத்தில் இறங்கி பரபரப்பு கிளப்பியிருக்கிறார். கண்ணைத் திறந்து பாருங்க, இந்தியா எத்தனை பெரிய வளர்ச்சி அடைஞ்சிருக்கு. கார் போறதுக்கு எப்படியெல்லாம் பாதை போட்டிருக்காங்க என்று புளங்காகிதம் அடைந்து பேசும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதையடுத்து பா.ஜ.க.வினர் படு குஷியாகியிருக்கிறார்கள். ஒரு நடிகைக்குத் தெரிந்தது கூட மக்களுக்குத் தெரியவில்லை. ராஷ்மிகா சொல்வதைக் கேட்டு ஓட்டுப் போடுங்கள் என்று பேசி வருகிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் […]
எடப்பாடி பழனிசாமியை காட்டிக் கொடுப்பாரா சவுக்கு சங்கர்..?

பெண் போலீஸாரை ஆபாசமாக பேசியதில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக பல வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு அவரது வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் எல்லாம் ரெய்டு நடந்திருக்கிறது. இந்த நிலையில் சவுக்கு சங்கரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் காவலில் விசாரிக்க, சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் […]

