News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஒடிசாவின் மருமகன் வி.கே.பாண்டியனுக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு..?

–    தமிழனை மிரட்டும் இரண்டு குஜராத்திகள்   நவீன் பட்நாயக்கின் அரசியல் நகர்வுகளுக்கு பின்புலமாக கருதப்படுபவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே.பாண்டியன். இவர் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச் காரணமாகவே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து நவீன் பட்நாயக் நழுவினார் என்று சொல்லப்படுகிறது. நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டதிலிருந்து எல்லா நேரமும் முதல்வருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆகவே, திருமணம் செய்து கொள்ளாத நவீன் இவர் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக களம் இறக்கப்படுவார் என்று தெரிவதாலே பா.ஜ.க.வின் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். இதையடுத்தே ஒடிஷா பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ […]

நான் கடவுள் மோடிக்கு ராகுல் அடிச்ச ரிவீட்டு

பிரதமர் நரேந்திரமோடியின், ‘நான் கடவுள்’ பேச்சு நாடு முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரத்திற்கு ராகுல் காந்தி அவரது பாணியில் சிக்ஸர் அடித்திருக்கிறார். பிரதமர் மோடி, ‘என் அம்மா இருந்தவரை நான் (எல்லாரையும் போல) உடல்-ரீதியில்தான் பிறந்ததாக நம்பிக் கொண்டிருந்தேன். அம்மா காலமானதற்குப் பின்னால் என் வாழ்வின் அனுபவங்களை எல்லாம் சேர்த்துப் பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகியது. என்னை இந்த பூமிக்கு இறைவன் நேரடியாக அனுப்பி இருக்கிறான். இந்த பூமியில் என்னை வைத்து இறைவன் சில […]

பா.ஜ.க. கண்ணில் விரல்விட்டு ஆட்டும் வி.கே. பாண்டியன் யாருங்க..?

‘ஒரிசாவை தமிழரால் ஆள முடியுமா? ஒரியா பேசக்கூடியவர்தான் ஆள வேண்டும்’ என்று ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதை அடுத்து இந்தியா முழுக்க வி.கே.பாண்டியன் என்ற பெயர் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஆகவே, வி.கே.பாண்டியன் பற்றி தெரிந்துகொள்வோம். வி.கார்த்திகேய பாண்டியன் என்பதன் சுருக்கமே வி.கே.பாண்டியன். இவர் ஒரிசாவின் எதிர்கால முதல்வர் ஆகிவிடுவார் என்பதுதான் அமித்ஷாவின் குற்றச்சாட்டு. வி.கே.பாண்டியன் மதுரை மேலூருக்கு பக்கத்தில் உள்ள சின்னஞ்சிறு  ஊரான கூத்தப்பன்பட்டியில் பிறந்தவர். 2000 ஆம் ஆண்டில் ஒரு […]

அதானி டெம்போவை கண்டுபிடித்த ராகுல் காந்தி

அதானி, அம்பானிகளுக்கு பா.ஜ.க. ஆதரவு காட்டிவருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பிய நேரங்களில் எல்லாம் அமைதியாக இருந்தவர் பிரதமர் மோடி. அவரே திடீரென, ‘காங்கிரஸ் கட்சிக்கு அதானி டெம்போவில் பணம் அனுப்புகிறார்’ என்று குபீர் குற்றச்சாட்டு எழுப்பினார். உடனடியாக மோடி சொல்வது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்த சில மணி நேரங்களில் பகிரங்க சவால் விடுத்தார் ராகுல் காந்தி. “மோடி ஜி அவர்களே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் இப்போதே அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறை, […]

அண்ணாமலைக்கும் செல்வத்துக்கும் சோத்துப் போட்டி

தமிழகத்தில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. திராவிடக் கட்சிகளின் முதுகில் சுமந்தே பழக்கப்பட்டவர்கள். அதனால் சாதாரண நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனும் பா.ஜ.க. தலைமையகமான கமலாலயமும் எப்போதும் காத்து வாங்கியே கிடக்கும். இந்த நிலையில் இரண்டு கட்சிகளின் மாநிலத் தலைவர்களான செல்வப்பெருந்தகையும் அண்ணாமலையும் ஆளாளுக்கு அறிக்கை போர் நடத்திவருகிறார்கள். சமீபத்தில் பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் புரி ஸ்ரீகெஜந்நாதர் ஆலய கருவூலத்தின் சாவி தமிழகத்தில் இருப்பதாக பேசியிருந்தார். இது, […]

சவுக்கு சங்கரின் முதலாளி அண்ணாமலை… போலீஸில் காங்கிரஸ் புகார்

சவுக்கு சங்கரை தி.மு.க.வுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகள் கூற வைத்ததும், அவரை இயக்கியதும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்பதால் அவர் மீது விசாரணை நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் காண்டீபன், அமைச்சர்கள், அதிகாரிகள், நிறுவனத்தினரை மிரட்டி பணம் பறித்த சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோருக்கு உடந்தையாக இருந்த சவுக்கு மீடியா ஆசிரியர் முத்தலீப், லியோ, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் […]

பாரா சாம்பியன்ஷிப் தங்கம்… மாரியப்பனுக்கு குவியும் பாராட்டுகள்.

முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன. 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 1,300 பாரா தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 171 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. டி63 பைனலில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தினார். இதன் மூலம் புதிய […]

ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார் செல்லூர் ராஜூ?

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நடக்க இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறிவருகிறது. கட்சி மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பணத்தை நிர்வாகிகளுக்குப் பிரித்துக் கொடுக்காமல் பல பெருந்தலைகள் லவட்டிக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு பா.ஜ.க.வின் ஆதரவுடன் பல மாஜிக்கள் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்ப இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்ச்சைக்குப் பேர் போன மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ சமூகவலைதளத்தில் ராகுல் காந்தியை பாராட்டி ஒரு […]

மோடி ஒரு தெய்வக் குழந்தையாம்… வைரலாகும் சர்ச்சை

ராமருக்குக் கோயில் கட்டினோம் அடுத்து கிருஷ்ணருக்கும் சீதா தேவிக்கும் கோயில் கட்டுவோம் என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி ஒரு பேட்டியில் தன்னை ஒரு தெய்வ அம்சமாக நினைப்பதாகக் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பா.ஜ..க வேட்பாளராக சாம்பித் பத்ராவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமர் மோடி மிகப்பிரம்மாண்டமான வாகன பேரணி நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாம்பித் பத்ரா, ‘புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர்’ […]

முள்ளிவாய்க்கால் துன்ப தினத்தில் சீமான் விழா நடத்தலாமா?

மே மாதம் என்றாலே ஈழத் தமிழர்கள் துக்க மாதமாக அறிவித்து பல்வேறு நிகழ்வுகளை நடத்திவருகிறார்கள். எல்லோரும் துக்கம் அனுஷ்டிக்கும் தருணத்தில் சீமான் சாட்டை அலுவலகத்திற்கு திறப்பு விழா நடத்தி கொண்டாட்டம் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து முன்பு நாம் தமிழர் இயக்கத்தில் பயணித்த வியனரசு, ‘’ சாட்டை அலுவலக திறப்பு வாழ்த்துகள். இந்திய தேசியத்தில் பயணித்த ஐயா. திராவிடம் வழங்கிய தகைசால் தமிழர்விருது சரி ஏற்போம் .தமிழ்த் தேசிய வலையொளி. தமிழ்த் தேசியர்களைக் காணவில்லை. நா.த.க. ஆதரவு […]