News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா இன்று கைது..?

கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவு இருப்பதை வைத்து இத்தனை நாட்களும் போலீஸாருக்கு கண்ணாமூச்சு ஆடிவந்த பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் களேபரம் முடிந்திருக்கும் நிலையில் இன்று கைதாவார் என்று தெரியவருகிறது. இது குறித்து பிரஜ்வல் ரேவண்ணா வெளியிட்டிருக்கும் வீடியோவில், ‘’‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 […]

வாக்கு மையத்தில் தி.மு.க. தில்லுமுல்லு செய்வாங்க. எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

தில்லுமுல்லு செய்வதில் தி.மு.க.வினர் கை தேர்ந்தவர்கள் எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த விழிப்போடு கண்காணிக்க வேண்டுமென அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 4.6.2024 அன்று, கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, […]

கோ பேக் மோடி, பபூன் மோடி – 2024 தேர்தல் கிளைமாக்ஸ்

ஜூன் 1ம் தேதியுடன் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணமும் காந்தி பேச்சும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன. பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பதால், இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாவுத்துறை, கோவளம், சின்னமுட்டம், புதுகிராமம், ஆரோக்கியபுரம் கிராமங்களில் 1,000 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]

வைகோவுக்கு டைட்டானியம் பிளேட் அறுவை சிகிச்சை. 40 நாட்கள் ரெஸ்ட்

நெல்லை திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற வைகோ கால் தடுமாறி கீழே விழுந்ததில் தோள் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மிகுந்த வேதனையில் விழுந்தார். இதையடுத்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். சென்னையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு தன்னுடைய உடல் நிலை குறித்து வைகோ பேசியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது. இதுகுறித்து துரைவைகோ, ‘இன்று தலைவர் வைகோ அவர்களுக்கு […]

நடிகர் விஜய் பிரியாணி விருந்து மெகா சக்சஸ்..?

உலகப் பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுக்க ஏழை மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று அவரது தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுக்க பிரியாணி விருந்து மெகா சக்சஸ் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.   தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வில் ரசிகைகள் […]

தேர்தல் ரிசல்ட்டுக்குப் பயந்து ரஜினிகாந்த் எஸ்கேப்?

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரஜினிகாந்தை களத்தில் இறக்குவதற்கு எத்தனையோ முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொண்டது. அவற்றில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இந்த நிலையில் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வருவதையொட்டி, இங்கிருந்து எஸ்கேப் ஆகி இமயமலைக்குப் போகிறார் ரஜினிகாந்த். தமிழகத்தில் இருந்தால் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து வெளியிட வேண்டியிருக்கும். பா.ஜ.க.வுக்கு தோல்வி ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு கருத்து தெர்விப்பது சிக்கலாக மாறிவிடும் என்பதாலே அவசரம் அவசரமாக இமயமலைக்குப் […]

மோடி கன்னியாகுமரி தியானத்துக்குத் தடை..?  காங்கிரஸ் போர்க்கொடி

தேர்தல் விதிமுறையை மீறி பிரதமர் நரேந்திர மோடி 1ம் தேதியன்று மெளனப் பிரச்சாரம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் மே 30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பிரசாரம் முடிவுக்கு வந்த பிறகு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பிரதமர் […]

சாவர்க்கருக்கு அஞ்சலி, தனி மாநாடு. தி.மு.க.வுடன் மோதும் கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக தி.மு.க. அரசுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் உச்சபட்ச மோதல் நடந்துவருகிறது. கவர்னரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் இருக்கிறது. சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு கடிதம் எழுதி மன்னிப்புக் கோரியவர் என்று தி.மு.க.வினர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அவரது பிறந்த நாளை ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி கொண்டாடி இருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இதுகுறித்து கவர்னர் ஆர்.என்.ரவி, ‘பாரதத் தாயின் மிகச்சிறந்த மகனான சுதந்திர வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதைகள். […]

சீமானுக்கு அண்ணாமலை 50% தள்ளுபடி

தமிழக அரசியலில் சீமான், அண்ணாமலை ஆகிய இருவரும் என்ன பேசினாலும் அது வம்புச்சண்டைக்கு வழி வகுத்து விடுகிறது. அப்படித்தான் ’நடிகை விஜயலட்சுமிக்கும், சீமானுக்கும் ஏதாவது பிரச்சினை வந்தால், உடனே என்னிடம் சீமான் வம்பிழுப்பார்’ என்று அண்ணாமலை கூறியிருப்பது நாம் தமிழர் தம்பிகளை சூடேற்றியிருக்கிறது. சமீபத்தில் அண்ணாமலை, ‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக பாஜக உருவாகும்’ என்று கூறியிருந்தார். இதுபற்றி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘ஜூன் 4-ம் தேதிக்கு […]

ஜூன் 3 கலைஞர் 100. ஜூன் 5 கனிமொழி பதவியேற்பு..?

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு வரும் ஜூன் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்காக தமிழகம் முழுக்க கொண்டாட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கு ஸ்டாலின் விடுத்திருக்கும் அழைப்பில், ‘தமிழ் நாடெங்கும் கொண்டாட்டங்களாலும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளாலும் நிறையட்டும் கழக இருவண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும். ஜூன -4 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கொடி ஏற்றி தன்னிகரில்லாத் தமிழினத் தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்.’ என்று கூறியிருக்கிறார். […]