News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

40 டெபாசிட் காலி. ஆனாலும் சீமானுக்கு மகிழ்ச்சி

சீமான் ஒரு போதும் பேச்சு மாறுவதே இல்லை. கடந்த எல்லா தேர்தல்களிலும் நடந்தது போன்று இந்த தேர்தலிலும் அத்தனை தொகுதியிலும் தோற்றுப் போயிருக்கிறார். இந்த தேர்தலிலும், ‘வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி’ என்று வழக்கம்போல் சிரிக்கிறார். அதேநேரம், சீமானின் நாம் தமிழர் கட்சி இந்த முறை 8.22% வாக்குகள் பெற்றுள்ளது ஆச்சர்யமான விஷயம். இத்தனைக்கும் அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டு அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே […]

அண்ணாமலை ராஜினாமா…? தலைமைக்குப் போட்டியிடும் சரத்குமார்

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அத்தனை தொகுதியிலும் டெபாசிட் இழக்கும் என்று வீர வசனம் பேசிய அண்ணாமலை அவரது கோவை தொகுதியிலே படு மோசமாகத் தோல்வி அடைந்திருக்கிறார். அரசியல் கணக்கு போடத் தெரியாத அண்ணாமலையை இப்போது பதவியை விட்டு தூக்கிவிட்டு புதிய தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய கணக்குப் படி, ‘தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் இருந்த போது பாஜக கன்னியாகுமரி தொகுதியை வென்றிருந்தது. அடுத்து எல்.முருகன் பாஜகவிற்கு தலைவராக இருந்த […]

எடப்பாடி பழனிசாமிக்கு 10வது தோல்வி. பன்னீருக்கு மட்டும் அழைப்பு..?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக அத்தனை தொகுதிகளையும் இழந்து ஒரு மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி தழுவியிருக்கிறது. வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும் தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழந்திருக்கும் விவகாரம் ரொம்பவே அவமானமாக பார்க்கப்படுகிறது.   தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட, அ, தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் 1,72,491 பெற்றார். கன்னியாகுமரியில் போட்டியிட்ட பசிலினை நஸ்சிர்த் 1,72,491 வாக்குககள் பெற்றார். […]

மோடி தற்காலிக பிரதமர். ஆறு மாதத்தில் புதிய பிரதமர்?

–    ஆர்.எஸ்.எஸ். சீக்ரெட் கணக்கு அசுர பலத்துடன் ஆட்சியில் மூன்றாவது முறையாக அமர்ந்து பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கும் திட்டத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.க்கு கூட்டணி ஆட்சி என்பது மிகப்பெரும் அதிர்ச்சி. அதனால் இப்போதைக்கு மோடியை பிரதமர் பதவியில் அமர வைத்தாலும் விரைவில் அதிரடி ஆட்டம் ஆடுவதற்கு கணக்கு போடுவதாக சொல்லப்படுகிறது. மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர இருக்கும் மோடி பிரமாண்டமான ரோடு ஷோவை தவிர்த்துவிட்டு வெற்றி விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர், ‘’மக்களவைத் தேர்தலில் […]

ஸ்டாலின் 40க்கு 40 – தமிழ் நியூஸ் நவ் கணிப்பு அப்படியே நடந்தது..!

–    எம்.ஜி.ஆர்., ஜெ. கருணாநிதியை தாண்டிய வெற்றி தமிழ் நியூஸ் நவ் சார்பில் தமிழகம் மற்றும் புதுவைக்கான 40 தொகுதிகளுக்கு எக்ஸ்க்ளூசிவ் தேர்தல் கணிப்பு கடந்த ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. இந்த தேர்தல் கணிப்பில் தி.மு.க. 38 தொகுதிகளில் எளிதாக வெற்றி அடையும். இரண்டு தொகுதிகளில் கடுமையான போட்டியை சந்திக்கும் என்றாலும் அவற்றிலும் வெற்றி அடைவதற்கு வாய்ப்பு அதிகம் என்று எழுதியிருந்தோம். தமிழ் நியூஸ் நவ் கணிப்பு அப்படியே நடந்திருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் […]

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி..?

இதுவரை அரசியல் சாணக்கியர் என்ற பெயரில் பா.ஜ.க.வுக்கு ஆள் பிடிக்கும் வேலையை அமித் ஷா செய்து வந்தார். இப்போது கார்கே அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 400 தொகுதிகள் இலக்கு என்று சொல்லிவந்த பா.ஜ.க.வுக்கு இப்போது தனிக் கட்சியாக அறுதிப் பெரும்பான்மை கிடைக்கப்போவது இல்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை நம்பியே ஆட்சி அமைக்கும் நிலையில் மோடி இருக்கிறார். ஆகவே, இப்போதே சந்திரபாபு […]

கட்சியைக் கலைக்கப் போகிறாரா சீமான்..?

இன்று வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் தி.மு.க. ரொம்பவே ஹேப்பி. அண்ணாமலை தோற்றுப் போவதைக் கண்டு சீனியர் பா.ஜ.க. தலைவர்கள் ரொம்பவே ஹேப்பி. யார் தோற்றால் எனக்கென்ன செளமியா அன்புமணி மட்டும் எப்படியாவது ஜெயித்தால் போதும் என்று டாக்டர் ராமதாஸும், எப்படியாவது நீ மட்டும் ஜெயிச்சுடு கண்ணு என்று பிரேமலதாவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அதேநேரம், எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்றாலும் நாம் தமிழர் தம்பிகள் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தாலும் […]

மோடிக்கு தென்னிந்தியா சூப்பர் சர்ப்ரைஸ், கதறவிடும் வட இந்தியா

நரேந்திர மோடிக்கு எப்போதுமே வட இந்தியா மட்டுமே கை கொடுக்கும் ஆனால், தென்னிந்தியாவில் 10 தொகுதிகள் கூட கிடைக்கவே கிடைக்காது என்று பலரும் சவால் விட்டு உறுதியாகக் கூறியிருந்தார்கள். ஆனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பல ஆச்சர்யம் நடந்திருக்கிறது. கர்நாடகாவில் ஒரே ஒரு சீட் கூட கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியின் சிவகுமார் சவால் விட்டிருந்தார். ஆனால், கர்நாடகாவில் 20 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. அதேபோல் கேரளாவில் பா.ஜ.க.வுக்கு ஒரு சீட் கிடைக்கவும் வாய்ப்பு இல்லை […]

மோடி கண்ணுல விரல் விட்டு ஆட்டுறாங்கப்பா…

மோடி கண்ணுல விரல் விட்டு ஆட்டுறாங்கப்பா… முழுமையான தேர்தல் முடிவுகள் இன்னமும் வரவில்லை என்றாலும் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை நடைபெற்ற மூன்று சுற்றுகளிலும் தொடர்ந்து பின்னடைவு சந்தித்திருக்கிறார் என்பது மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கிறார். வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராஜ்க்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து சரிவிலேயே இருக்கிறது. ஐந்தாவது சுற்று முடிவில் இரண்டாயிடம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி பின்னடைவில் இருக்கிறார். கடந்த 2014, 2019 ஆகிய தொகுதிகளில் நரேந்திர மோடி இந்த […]

அண்ணாமலை பிறந்த நாளில் இப்படி ஒரு வேதனை செய்தி!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் மட்டும் வாழ்த்துச் சொல்லி, ‘இன்று வெற்றி பெறுவார்’ என்று ஆருடம் கூறியிருக்கிறார். ஆனால், காலை 9 மணி நிலவரப்படி அண்ணாமலையை விட கண்பதி ராஜ்குமாரே தொடர்ந்து முன்னிலையில் நீடிக்கிறார். இங்கு மட்டுமின்றி தமிழகம் முழுக்கவே பா.ஜ.க. கூட்டணி பின் தங்கியே இருக்கிறது. நெல்லையில் நயினார் நாகேந்திரனும் தர்மபுரியில் செளமியா அன்புமணியும் சற்று நேரம் முன்னிலையில் வகித்தாலும் மீண்டும் தி.மு.க. வேட்பாளர் அதை தாண்டியிருக்கிறார். எல்லோரும் […]