News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று மூன்றாவது முறை பிரதமராகிறார் மோடி..! நாயுடுக்கு எத்தனை அமைச்சர்கள்?

இன்று இரவு 7 மணிக்கு டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இதையடுத்து, பல்வேறு நாட்டுத் தலைவர்களும், கட்சித் தலைவர்களும் டெல்லியில் குவிந்துவருகிறார்கள். நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. 240 இடங்களில் வெற்றி பெற்றது என்றாலும் தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை.  அதேநேரம், கூட்டணிக் கட்சியினர் எண்ணிக்கையுடன் சேர்த்து 293 இடங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து நடந்த பாஜக கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், […]

தி.மு.க.வுக்கு மெகா சக்சஸ் உண்மையா..? தேர்தல் முடிவு காட்டும் புதுக் கணக்கு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஒன்றிணைந்து நின்றிருந்தால் தி.மு.க. கப்பல் மூழ்கிப் போயிருக்கும் என்று விதவிதமாக பலரும் கணக்கு காட்டி வரும் நிலையில், தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்று புது கணக்கு ஒன்று காட்டுகிறார்கள். அதன்படி, 39 பாராளுமன்ற தொகுதியில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில் 13 தொகுதிகளில் மட்டும் எதிர்க் கட்சிகள் கூடுதல் வாக்குகள் வாங்கி உள்ளன. 221 தொகுதிகளிலும் திமுகவே கூடுதல் வாக்குகள் வாங்கி உள்ளது என்கிறார்கள். இதை பட்டியல் போட்டும் […]

அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி உறுதி..? மல்லுக்கட்டும் மாஜிக்கள்.

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தோற்றுப்போய் விட்டாலும், தமிழகத்திற்கு என்று யாரையேனும் ஒருவரை அமைச்சர் பதவியில் அமரவைக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உண்டு. இந்த முறை அண்ணாமலைக்குத்தான் அந்த வாய்ப்பு என்று தமிழகம் முழுக்க அவரது ஐடி விங் ஆட்கள் செய்தி பரப்பி வருகிறார்கள். கடந்த 2014 ஆட்சியில் பொன்.ராதாகிருஷ்ணனும், 2019 ஆட்சியில் எல்.முருகனும் அமைச்சராகப் பதவிக்கு வந்தார்கள். இந்த நிலையில் 2024 தேர்தலில் அமைச்சராகப் போகும் நபருக்கான போட்டியில் அண்ணாமலையும் குதித்திருப்பதால் தமிழக பா.ஜ.க.வில் கும்மாங்குத்து […]

பத்த வச்சிட்டியே பரட்டை… அண்ணாமலைக்கு தமிழிசை வார்னிங்

தமிழக பா.ஜ.க.வில் தன்னைத் தவிர வேறு யாரும் வாயைத் திறக்கவே கூடாது என்று கட்டிப்போட்டு வைத்திருந்தவர் அண்ணாமலை. எனவே, சீனியர்களும் அமைதியாக இருந்தார்கள். இப்போது முதன்முறையாக அண்ணாமலைக்கு எதிராக சீனியரான தமிழிசை செளந்தரராஜன் எதிர்க்குரல் எழுப்பியிருப்பது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழிசைக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் முடிந்துவிட்டதால் இனி அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை நினைக்கிறார். எனவே, பரட்டையின் நிலை சிக்கலாகிவிட்டது, எதற்காக கவர்னர் பதவியில் இருந்து வந்தார் என்று பா.ஜ.க.வின் ஒரு ஐ.டி. டீம் […]

30 லட்சம் கோடி ஊழல். மோடி, அமித்ஷா மீது ராகுல் நேரடி குற்றச்சாட்டு

  போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட வைத்து அதன்மூலம் பங்குச்சந்தைகளை ஏற்றியும் இறக்கியும் பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று மிகப் பெரிய குற்றச்சாட்டை ராகுல்காந்தி செய்தியாளர்கள்  முன்பு வைத்திருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ஜூன் 4 ஆம் தேதிக்கு முன் பங்குகளை வாங்கி குவியுங்கள்” என்று சிறிய முதலீட்டாளர்களைத் தூண்டினார் அமித் ஷா. மே 19ம் தேதி,  “ஜூன் 4 ஆம் தேதி பங்குச் சந்தைகள் பழைய சாதனைகளை முறியடித்து […]

ஒரே ஒரு சீட் தர்மம் போடுங்க சாமி… கெஞ்சும் பிரேமலதா

எருமை மாடு மாதிரி பிள்ளைங்க வளர்ந்த பிறகும் என்னுடைய குட்டிப் பையன், செல்லப்பொண்ணு என்று கொஞ்சுவது தாய்மையின் ஸ்பெஷல். அந்த வகையில், ஒரு சின்னப் பையனை ஜெயிக்கட்டும்னு பெரும் தன்மை இல்லாம தி.மு.க. நடந்திருக்கு என்று ஒரு தாயாக பொதுவெளியில் பிரேமலதா கேள்வி எழுப்பியிருப்பது சமூகவலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறது. செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ‘’விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டுள்ளார். சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட […]

தமிழ் நாட்டில் மூன்றாவது இடம் அண்ணாமலையா… சீமானா?

நாற்பது இடத்திலும் தி.மு.க.வுக்கு டெபாசிட் போய்விடும் என்று சவால் விட்ட அண்ணாமலையின் பா.ஜ.க. ஒரு இடம் தவிர எல்லா இடத்திலும் டெபாசிட் இழந்திருக்கிறது. ஆனாலும், வாய் பேச்சைக் குறைக்காமல் நாங்கள் மூன்றாவது பெரிய கட்சி. நிறைய இடங்களில் நாங்களே இரண்டாவது பெரிய கட்சி என்கிறார். இது உண்மையா..? இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியாக பெற்ற வாக்கு சதவீதம் 18.28%. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் பா.ம.க., அ.ம.மு.க., புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், […]

தமிழகத்தின் டாப் 5 சக்சஸ் வேட்பாளர்கள் இவங்க தான்.

நடந்து முடிந்திருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் பல்வேறு மாறுதல் கொண்டுவந்திருக்கிறது. முதன்முறையாக 40 தொகுதிகளையும் தி.மு.க. அள்ளியிருக்கிறது. வழக்கமாக தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. அல்லது தி.மு.க.வின் முக்கியப் பிரபலம் யாரேனும் ஒருவர் வெற்றி பெறுவார். ஆனால், இந்த முறை அந்த பெருமையை காங்கிரஸ் கட்சி தட்டிச் சென்றுள்ளது. அதுவும் முதன் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியிருக்கும் சசிகாந்த் செந்தில் அந்த பெருமையை தட்டிச் சென்றிருக்கிறார். அதன்படி தமிழகத்தில் அதிக வித்தியாசத்தில் முதல் இடம் […]

மீண்டும் எடப்பாடி பழனிசாமி கதவைத் தட்டும் சசிகலா, பன்னீர்

தேர்தல் முடிவுகளைக் கண்டு கலங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக் கதவை மீண்டும் சசிகலாவும் பன்னீரும் தட்டத் தொடங்கிவிட்டார்கள். தங்களை சேர்த்துக்கொண்டால் 2026 தேர்தலை வென்றுவிடலாம் என்கிறார்கள். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். ’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ எனும் மக்கள் திலகத்தின் […]

மோடி பதவியேற்பில் குழப்பம். நாயுடுவை சந்தித்த ஸ்டாலின்

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரும் ஆசையில் இருந்த பா.ஜ.க.வுக்கு மைனாரிட்டி அரசை வழிநடத்தும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கிறது. இதற்கு முழு காரணமும் மோடி என்று சீனியர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2014, 2019 ஆகிய இரண்டு லோக் சபா தேர்தல்களிலும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை  தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.   தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றாலும் பாஜக 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால் கடந்த முறை போல தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க […]