மோடி 3.0 அமைச்சரவையில் இத்தனை வாரிசுகளா..? வைரலாகும் பட்டியல்

வாரிசு அரசியல் இந்தியாவில் தலை தூக்கவே முடியாது. வாரிசு அரசியலை ஒழித்துக் கட்டுவதே எங்கள் முக்கிய இலக்கு என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் வீரவசனம் பேசிய பிரதமர் நரேந்திரமோடியில் 20 பேர் வாரிசு அரசியல் மூலம் இடம் பிடித்திருப்பது தேசிய அளவில் வைரல் ஆகியிருக்கிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூட, ‘எங்கப்பா பேரு கருணாநிதி இல்லீங்க’ என்று கிண்டல் செய்தார். வாரிசு அரசியல் பேசிக்கொண்டே வாரிசை வளர்க்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி பட்டியல் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. […]
செல்வப்பெருந்தகை பதவிக்கு ஆபத்து? ராகுலிடம் தி.மு.க. புகார்

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலிமையாக இருப்பதாலே தொடர் வெற்றி பெற்று வருகிறது. இந்த கூட்டணியை உடைக்கும் வகையில் செல்வப்பெருந்தகையின் பேச்சு இருப்பதாக தி.மு.க.வினர் கோபம் காட்டுகிறார்கள். செல்வப்பெருந்தகையை தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும் என்று புகார் அனுப்புவதாக சொல்லப்படுகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ‘தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். தொடர்ந்து கூட்டணியில் இருந்தால் நமக்கான இலக்கை அடைய முடியாது’ என்று செல்வப்பெருந்தகை பேசினார். இதற்கு அந்த கூட்டத்திலேயே இ.வி.கே.எஸ். […]
மீண்டும் களம் இறங்கும் செளமியா அன்புமணி… விக்கிரவாண்டி திருப்பம்

தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட செளமியா அன்புமணி தோல்வி அடைந்துவிட்டார். அந்த தோல்வி அனுதாபத்தை வெற்றியாக மாற்றுவதற்கு ராமதாஸும் அன்புமணியும் அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஏற்கெனவே 2016ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த சமயத்தில் அன்புமணி இங்கே நின்று தோற்றுப் போயிருக்கிறார். இங்கு பா.ம.க.வுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் வாக்குகள் இருந்தாலும் அ.தி.மு.க.வுக்குத் தான் அதிகம் உள்ளது. ஆகவே செளமியாவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு தூது போக இருக்கிறார்களாம். இந்த இடைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி […]
டி.ஆர்.பாலு பதவிக்கு வேட்டு வைத்த கனிமொழி

இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கனிமொழிக்கு முக்கிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பான்மை பெற முடியவில்லை என்றாலும் மைனாரிட்டி ஆட்சியை மோடி அமைத்துவிட்டார். இந்த நிலையில் தி.மு.க.விற்கு நாடாளுமன்ற குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வழக்கமாக டி.ஆர். பாலுக்குக் கிடைக்கும் தலைமைப் பொறுப்பு இந்த முறை கனிமொழி கைக்குப் போயிருக்கிறது. இதனால் டி.ஆர். பாலு தரப்பு அப்செட் ஆகியிருக்கிறது. ஸ்டாலின் அறிவிப்பு படி, மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் […]
மோடியின் அமைச்சரவையில் முஸ்லீமுக்கு இடமே இல்லை

முஸ்லீம்கள் அதிக பிள்ளைகள் பெறுகிறார்கள், இந்துக்களின் தாலியைப் பிடுங்கி அவர்களுக்கு காங்கிரஸ் கொடுத்துவிடும் என்றெல்லாம் தேர்தல் நேரத்தில் பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி. முஸ்லீம்கள் மீதான நரேந்திரமோடியின் கோபம் இன்னமும் தீரவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக அவரது மந்திரி சபை அமைந்திருக்கிறது. ஆம், ஒரே ஒருவர் கூட முஸ்லீம் அமைச்சராக இல்லை. மூன்றாவது முறை அமைக்கப்பட்டுள்ள மோடியின் அமைச்சரவையில் உள்ள 71 உறுப்பினர்களில் 5 பேர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் சீக்கியர்கள், இருவர் பவுத்தர்கள், ஒருவர் […]
இந்த மாதம் வெளியே வருகிறார் நடிகர் விஜய்… குஷியில் ரசிகர்கள்

அறிக்கை மூலமாக மட்டுமே அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் நடிகர் விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து பாராட்டுவதற்காக வெளியே வருகிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, […]
தமிழகத்தின் சமூக நீதி. இதோ 40 எம்.பி.க்களின் ஜாதி பட்டியல்

கட்சி ரீதியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதாக சொல்லப்பட்டு வந்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட தொகுதியில் அதிக வாக்குகள் எந்த சமூகத்திற்கு இருக்கின்றன என்பதைப் பார்த்தே நிறுத்தப்படுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமின்றி நாம் தமிழர் கட்சி வரையிலும் ஜாதி பார்த்தே நிறுத்துகிறார்கள். இந்த நிலையில் தமிழ் நாட்டில் வெற்றிபெற்ற எம்.பி.க்கள் என்னென்ன ஜாதியினர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கத்தை விட இந்த முறை வன்னியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்குலத்தோர் மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அடுத்த இரண்டாவது இடங்களில் இருக்கிறார்கள். […]
எடப்பாடி பழனிசாமியுடன் இணையத் துடிக்கும் பன்னீர் டீம்

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி அடையவில்லை என்றாலும் அதிக சதவிகித வாக்குகளை வாங்கியிருக்கிறா. அதேநேரம், ஓ.பன்னீர், தினகரன் ஆகியோருக்கு உருப்படியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆகவே பன்னீர் அணியில் இருந்த ஜே.சி.டி. பிரபாகரன், பெங்களூரு வா.புகழேந்தி ஆகியோர் வெளியேறி ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாகக் கூறினார்கள். ஏற்கெனவே இந்த அணியில் இருந்து வெளியேறிய கு.ப.கிருஷ்ணன் இவர்களுடன் இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கி மெரினாவில் செய்தியாளர்களை […]
பிரதமர் மோடி 3.0 பதவியேற்பு விழாவில் பரபரப்புக் காட்சிகள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற 1952, 1957, 1962 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இவரை அடுத்து 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மத்திய அமைச்சர்கள் 31, இணை அமைச்சர்கள் 5 (Ind Charge), […]
அண்ணன் சீமானும் தம்பி விஜய்யும் கொஞ்சுறாங்கப்பா…

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, அவருக்கு பாராட்டு தெரிவித்தார் நடிகர் விஜய். அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கும் வாழ்த்து கூறியிருந்தார். சீமானும் விஜய்யும் 2026 தேர்தலில் கூட்டணி சேரப்போகிறார்கள் என்று தம்பிகளும் விஜய் ரசிகர்களும் பேசி வருவது போலவே நடிகர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி தெரிவித்திருக்கிறார் சீமான். அவர், ‘மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி! உளமார பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்த ஆருயிர் தம்பிக்கு நன்றி’ […]

