சசிகலா திடீர் கொந்தளிப்பு. காரணம் இது தானா..?

சிறைக்குப் போய்விட்டு வெளியே வந்த சசிகலா அதன் பிறகு சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அமைதி காத்தார். இந்த நிலையில் திடீரென போயஸ் கார்டனில், ‘நான் வெளியே வந்துட்டேன், இனிமேலும் பொறுத்துக்க முடியாது. 2026ல் ஆட்சியைப் பிடிக்கப் போகிறேன்’ என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதியைக் காக்கவில்லை என்பதும் பா.ம.க.வுடன் ரகசியக் கூட்டணியுமே இந்த கொந்தளிப்புக்குக் காரணம் என்கிறார்கள். இத்தனை காலம் அமைதி காத்த சசிகலா செய்தியாளர்களிடம், ‘’கொடநாடு கொலை வழக்கினை வைத்து […]
எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – தமிழ் நியூஸ் நவ் சொன்னது நடந்தது

பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதை தமிழ் நியூஸ் நவ் முதலிலேயே சொன்னது. அதன்படியே எடப்பாடி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார். தொடர்ந்து 10 தோல்விகள் சந்தித்திருப்பதால், இந்த தேர்தலில் தோல்வி அடைவது மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். மேலும், பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வினர் அதிக பணம் கொடுக்கும் பட்சத்தில் மூன்றாம் இடத்துக்கு அ.தி.மு.க. போகவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, இந்த இடைத்தேர்தலை […]
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கே பாதுகாப்பு இல்லையா? நெல்லை ஜாதி கொடூரம்

ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி. சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது […]
தமிழிசை காலில் விழுந்தாரா அண்ணாமலை..? பரபர ரிப்போர்ட்

‘முன்னாள் கவர்னர், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர் என்றாலும் அண்ணாமலையிடம் அடிபணிந்து நடக்கவில்லை என்றால்…’ எனும் ரீதியில் பா.ஜ.க. வார் ரூம் அட்டாக்கிற்கு ஆளான தமிழிசையின் காலில் விழுந்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டதாக பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சீனியர்களை அவமானப்படுத்துவதை பொறுக்கொள்ளவே மாட்டேன் என்று முதன் முறையாக அண்ணாமலை வார் ரூமுக்கு எச்சரிக்கை கொடுத்தார் தமிழிசை. இதையடுத்து தமிழிசை மீது அட்டாக் அதிகம் நடந்தது. இந்த நிலையில் தான் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித் ஷா தமிழிசைக்கு […]
மீண்டும் கருப்புக்கொடி, கோ பேக் மோடி..? 20ம் தேதி பிரதமர் வருகை

மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 20ம் தேதி, சென்னை – நாகர்கோவில் தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க சென்னை வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதனை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், […]
எடப்பாடி 11வது தோல்விக்கு ஆசையா..? விக்கிரவாண்டிக்கு பன்னீர் தூது

ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளர் போன்று நின்று, படுமோசமாக தோற்றுப்போன ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தொடர் வெற்றியை விமர்சனம் செய்திருப்பது அ.தி.மு.க.வினரை கோபமூட்டியுள்ளது. பிரதமர் மோடிக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் ஓ.பன்னீர்செல்வம் எப்படியாவது அ.தி.மு.க.வில் மீண்டும் நுழைந்துவிட வேணும் என்று துடிக்கிறார். அதேநேரம், அவருக்கு சொந்த செல்வாக்கும் இல்லை, அவரது சமூகத்திலும் செல்வாக்கு இல்லை என்பதை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அவரை சேர்ப்பதற்கு விரும்பவில்லை. ஆனாலும், மீண்டும் மீண்டும் ஒருங்கிணைப்பு […]
தமிழிசைக்கு இந்த அவமானம் சாதாரணமப்பா…

தமிழிசை செளந்தரராஜனை பொதுமேடையில் வைத்து அமித் ஷா கண்டித்ததைப் பார்த்த அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்தார்கள். வசுந்தரா ராஜே, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி போன்றவர்களிடம் இப்படி பேசுவதற்கு அமித் ஷாவுக்கு தைரியம் இருக்குமா என்று பலரும் கேள்வி கேட்டார்கள். இதைவிட, ஒரு பெண் தலைவரை அதுவும் முன்னாள் கவர்னராக இருந்த ஒருவரை ஒரு வயதான பெண்மணியை இப்படி அவமானப்படுத்துவது தான் பா.ஜ.க. பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா என்று கடுமையாக விமர்சனம் எழுந்தது. நாடார் சங்கத்தினர் தமிழிசைக்கு […]
மறு வாக்கு எண்ணிக்கைக்கு அடம் பிடிக்கும் விஜயபிரபாகரன்.

விருதுநகர் தொகுதியில் வெற்றிக்கு அருகே வந்து தோற்றுப் போன விஜயபிரபாகரன் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு மனு கொடுத்திருக்கிறார். இதையடுத்து பேசிய விஜயபிரபாகரன், ‘தோல்வியைக் கண்டு பயப்படுகிறது கட்சி தே.மு.தி.க. அல்ல, மறு வாக்கு எண்ணிக்கையில் தோல்வி அடைந்தால் மார் தட்டி வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன். கஷ்டப்பட்டு உழைத்து அங்கீகாரம் கிடைக்காததால் ஏற்பட்ட வலியின் வெளிப்பாடு இது’ என்று பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் திடீரென நாம் தமிழர் அணியினர் தே.மு.தி.க. மீது பாய்ந்திருக்கிறார்கள். நாம் […]
விக்கிரவாண்டிக்கு ஒன்பது அமைச்சர்கள்… விட்டுக்கு வீடு ஆயிரம் ரூபாய்?

மக்களவைத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தில் இருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எந்தக் காரணம் கொண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சிறு சறுக்கலும் நடந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவே உஷாராக இருக்கிறார். அதற்காகவே 9 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்திருக்கிறார். விக்கிரவாண்டியில் வன்னியர்களும் ஆதி திராவிடர்களும் அதிக அளவில் இருக்கிறார்கள். இந்த வாக்குகளை குறிவைத்து அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் களம் இறங்கக் காத்திருக்கின்றன. ஆளும் கட்சி மீதான அதிருப்தியை வைத்து எப்படியாவது தி.மு.க.வை சாய்த்துவிடத் துடிக்கிறார்கள். அப்படி […]
அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி. தமிழிசைக்கு களம் இறங்கும் நாடார்கள்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள வீடியோ, தமிழகம் முழுக்க பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலையைத் தவிர வேறு எந்த தலைவர்களும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவதில்லை. இதை மீறும் வகையில் தமிழிசை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, அண்ணாமலையின் ஐடி விங் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்தார். மேலும் தமிழிசை சவுந்தரராஜன், “அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தால் பாஜக வெற்றி பெற்றிருக்கும். 2026 தேர்தலிலும் […]

