கடலூர் வாக்காளர்களுக்கு சாபம் விட்ட தங்கர் பச்சான்.

முதன்முதலாக தேர்தல் களத்துக்கு வந்து கடலூர் தொகுதியில் தோற்றுப்போனவர் இயக்குனரும் நடிகருமான திடீர் வேட்பாளர் தங்கர் பச்சான். அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் வேனில் நின்றபடி வாக்காளர்களைத் திட்டித் தீர்த்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியில் இருந்த பாமக சார்பில் களமிறக்கப்பட்டவர் இயக்குநர் தங்கர்பச்சான். தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் ஜெயிக்கப் போவது உறுதி என்று பேசி வந்த அவர், தேர்தலில் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் […]
ராகுலுக்கு 54 வயசு. குவிகிறது பிறந்த நாள் வாழ்த்துகள்

பப்பு என்று பிரதமர் மோடியில் இருந்து அத்தனை தலைவர்களும் கேலி செய்துவந்த ராகுல் காந்தி, இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார். ’நாங்கள் விரும்பும் வரையில் தான் மோடி ஆட்சியில் இருக்க முடியும்’ என்று தெறிக்க விடும் ராகுலுக்கு நாடு முழுவதும் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிகின்றன. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதற்கு ஒரு தெளிவான சித்தாந்தம் வைத்திருக்கிறார் ராகுல் காந்தி. 30 லட்சம் வேலைகள், ஜாதிவாரி கணக்கெடுப்பு, பெண் முன்னேற்றம், விவசாயிகளுக்கு […]
ராமதாஸ்க்கு மாம்பழம் பஞ்சாயத்து. விக்கிரவாண்டி குழப்பம்

எப்படியாவது மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுவிட வேண்டும் என்று ராமதாஸ் மல்லுக்கட்டினாலும் கடந்த தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. அதனால், மாநிலக் கட்சி வாய்ப்பு பறிபோய்விட்டது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கிடைப்பது கேள்விக்குறியாக மாரியுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைவால் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிரது. கடந்த 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், 21ம் தேதியுடன் […]
60 அரசு கல்லூரிகளில் முதல்வர் இல்லையா..? எப்படி நடக்கும் மாணவர் சேர்க்கை?

மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுத்தி தினம் தினம் புகைப்படம் போட்டுவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசு கல்லூரிகளுக்கு முதல்வர் நியமனத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த பல மாதங்களாக காலியாக உள்ளன. அதனால், கல்லூரியின் அன்றாட நிர்வாகமும் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது என்று டாக்டர் ராமதாஸ் குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து டாக்டர் ராமதாஸ், […]
தமிழகத்தை விட்டு அகதிகளாக வெளியேறும் பரந்தூர் மக்கள்… இது தான் திராவிட மாடலா..?

இந்திய அரசுக்கு சொந்தமாக விமானங்களே இல்லாத நிலையில், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. பரந்தூர் பகுதியைச் சேர்ந்த அத்தனை உள்ளாட்சி அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த விஷயத்தில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, பரந்தூர் மக்கள் தங்கள் சொந்த இடத்தை விட்டு ஆந்திராவுக்கு அகதியாகச் செல்லும் முடிவு எடுத்திருப்பதாகத் தெரிவது அதிர்ச்சி அளித்துள்ளது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி […]
ராகுல் காந்தி வீட்டில் மூன்று எம்.பி.க்கள். அடுத்து ராபர்ட் வதேராவா?

வாரிசு அரசியலை ஒழித்துக்கட்டுவோம் என்று மோடி முழங்கிக்கொண்டே இருக்கிறார். அவர் சொல்வது சரி என்பதை சுட்டிக் காட்டும் வகையில் ராகுல் காந்தியின் குடும்பத்தில் மூன்றாவது நபராக பிரியங்காவும் எம்.பி. ஆவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் […]
சசிகலா சொன்னாலும் கேட்க மாட்டோம். டிடிவி தினகரன் இப்படி சொல்லிட்டாரே

’அ.தி.மு.க.வை ஜாதிக் கட்சியாக மாற்றி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் சதியை முறியடித்து பழைய அ.தி.மு.க.வை உருவாக்கி 2026ல் ஆட்சியைப் பிடிப்பேன்’ என்று சபதம் போட்ட சசிகலாவுக்கு அவரது உறவினர் டிடிவி தினகரனே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். தினகரனையே சமாளிக்க முடியாத சசிகலா அ.தி.மு.க.வை மீட்கப் போகிறாரா என்று அ.தி,மு.க.வினர் கிண்டல் செய்கிறார்கள். சிறையில் இருந்து திரும்பிய சசிகலா இத்தனை காலமும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு தூது அனுப்பிக்கொண்டே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை […]
நீட் கேள்வித் தாள் 32 லட்சம் ரூபாய். மோசடி மோடி ஏன் வாய் திறக்கவில்லை.

நீட் தேர்வில் ஒரே ஒரு முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ஏழை மாணவர்கள் அனைவரும் நீட் மூலம் டாக்டராக முடியும் என்றெல்லாம் பா.ஜ.க.வினர் தொடர்ந்து உறுதி கொடுத்துவந்தனர். ஆனால், அடுத்தடுத்து நீட் தேர்வில் நடந்துவரும் முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கும் நிலையில், பா.ஜ.க.வினர் அமைதி காத்துவருகிறார்கள். இந்த நிலையில் 32 லட்சம் ரூபாய்க்கு NEET கேள்வித்தாளை விற்றோம் என்று பாட்னாவில் கைதான மாபியா கும்பல் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளது. நீட் தேர்வுக்கு 24 மணி நேரம் முன்பாக கேள்வித்தாளை […]
சசிகலா திடீர் கொந்தளிப்பு. காரணம் இது தானா..?

சிறைக்குப் போய்விட்டு வெளியே வந்த சசிகலா அதன் பிறகு சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அமைதி காத்தார். இந்த நிலையில் திடீரென போயஸ் கார்டனில், ‘நான் வெளியே வந்துட்டேன், இனிமேலும் பொறுத்துக்க முடியாது. 2026ல் ஆட்சியைப் பிடிக்கப் போகிறேன்’ என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதியைக் காக்கவில்லை என்பதும் பா.ம.க.வுடன் ரகசியக் கூட்டணியுமே இந்த கொந்தளிப்புக்குக் காரணம் என்கிறார்கள். இத்தனை காலம் அமைதி காத்த சசிகலா செய்தியாளர்களிடம், ‘’கொடநாடு கொலை வழக்கினை வைத்து […]
எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – தமிழ் நியூஸ் நவ் சொன்னது நடந்தது

பாட்டாளி மக்கள் கட்சி இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருப்பதை தமிழ் நியூஸ் நவ் முதலிலேயே சொன்னது. அதன்படியே எடப்பாடி பழனிசாமி தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார். தொடர்ந்து 10 தோல்விகள் சந்தித்திருப்பதால், இந்த தேர்தலில் தோல்வி அடைவது மிகப்பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். மேலும், பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வினர் அதிக பணம் கொடுக்கும் பட்சத்தில் மூன்றாம் இடத்துக்கு அ.தி.மு.க. போகவும் வாய்ப்பு உண்டு. ஆகவே, இந்த இடைத்தேர்தலை […]

