News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நீட் தேர்வுக்கு க்ளைமாக்ஸ்..? இணைந்து போராடும் ஸ்டாலின், ராகுல்

நீட் தேர்வுகளில் நடக்கும் குழப்பங்களும் தில்லுமுல்லுகளும் அம்பலமானதை அடுத்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஸ்டாலினும் தேசிய அளவில் ராகுல் காந்தியும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவும், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், […]

மணல் கொள்ளையில் அமைச்சர் துரைமுருகனுக்கு சம்மன்? அமலாக்கத்துறை கைதுக்கு ரெடி

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 23.64 லட்சம் யூனிட் அதிகமாக மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும், 4,730 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் டி.ஜி.பி-க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறப்போர் ஜெயராமன், ‘4730 கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது வெறும் 4.9 ஹெக்டர் நிலத்திற்கு அனுமதி வாங்கி 105 ஹெக்டர் தோண்டி இருக்கிறார்கள் கொள்ளைக்காரர்கள். தமிழ்நாடு அரசு ஒரு […]

சீமானும் எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிட்டாங்க. விக்கிரவாண்டி ஆதரவு கிடைக்குமா?

சகல திராவிடக் கட்சிகளையும் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்துவரும் சீமான், சமீபத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, ‘எங்களுக்கு அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் ஆதரவு தரவேண்டும்’ என்று பேசினார். அதோடு நின்றுவிடாமல் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதம் இருந்தபோது அவருக்கு ஆதரவாக அறிக்கை விட்டதுடன் நில்லாமல் தனது ஆதரவாளர்களையும் அனுப்பி வைத்தார். சீமான் விட்ட அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டுமென்ற அதிமுகவின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, மாண்புமிகு எதிர்கட்சித்தலைவர் ஐயா எடப்பாடி […]

ஆர்.எஸ்.பாரதியிடம் 1 கோடி ரூபாய் கேட்டு அண்ணாமலை நோட்டீஸ்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்துக்கான மூலப்பொருட்கள் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி செய்யும் பாண்டிச்சேரியிலிருந்து தான் தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆகவே, இது தி.மு.க.வின் 40க்கு 40 வெற்றி ஏற்படுத்திய எரிச்சலில் எதிர்க் கட்சிகள் செய்த சதியாக இருக்கலாம் என்று தி.மு.க. தலைவர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில்,  கள்ளச் சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய […]

உலகிலேயே இந்தியா நம்பர் 1. மோடியின் சாதனை இந்த விஷயத்திலா..?

இஸ்லாம் நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொடுமை அதிகம் நடப்பதாக நம்பிவரும் சூழலில், பெண்களுக்கு ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் கொடுத்து அதிர வைத்துள்ளது பெண்களை தெய்வமாக மதிக்கும் நாட்டில் உண்மையில் மாட்டுக்கு இருக்கும் மதிப்பு கூட பெண்களுக்கு இல்லை என்கிறது இந்த ஆய்வறிக்கை. லண்டனில் செயல்பட்டு வரும் தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, பெண்களின் பாதுகாப்பு குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘’இந்தியாவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. அதேபோல், […]

உதயநிதி அடிமைகளை வறுத்தெடுக்கும் ஜெ. அடிமைகள்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் உறுதிமொழி கொடுத்து பதவி ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் நிறைய பேர், ‘உதயநிதி வாழ்க, உதயநிதிக்கு வணக்கம்’ என்று பவ்யம் காட்டினார்கள். இந்த அடிமைத்தனமே திராவிட மாடலா என்று அ.தி.மு.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள். இதுகுறித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ‘’நாடாளுமன்ற தமிழக உறுப்பினர்கள் பதவியேற்ப்பில் தொடர்பில்லாத பிரச்சனைகளை முன்வைத்து தங்களுடைய விசுவாசங்களை காட்டியது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, தவறான நடைமுறையாகும். திமுக எம்பிக்கள் ஒவ்வொருவரும் தவறாமல் தளபதி வாழ்க! என்று சொல்வதோடு “தமிழ்நாட்டின் எதிர்காலம் உதயநிதி” […]

எடப்பாடியிடம் கெஞ்சும் அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி வெற்றி யாருக்கு..?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்திருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று அன்புமணியும் சீமானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி யாருக்கு ஆதரவு தருவார் என்பது இப்போது கேள்வியாக இருக்கிறது. கடந்த காலங்களில் நான் அ.தி.மு.க.வுக்கும் தே.மு.தி.க.வுகும் ஆதரவாக பிரசாரம் செய்திருக்கிறேன். எனவே எனக்கு எடப்பாடி பழனிசாமியும் பிரேமலதாவும் ஆதரவு தர வேண்டும் என்று சீமான் வெளிப்படையாகக் கேட்டு வருகிறார். அதேபோல் அன்புமணியும், ‘உங்களுக்கும் தி.மு.க. எதிரி. அவர்கள் எங்களுக்கும் […]

முதல் நாள் மக்களவையில் சம்பவம் செய்த ராகுல்காந்தி

vபிரதமர் மோடி பதவி ஏற்ற நேரத்தில் அரசியல் சாசன புத்தகத்தைத் தூக்கிக் காட்டி நாடாளுமன்றத்தில் பரபரப்பு உண்டாக்கினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கடந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால், அவரை எம்.பி. பதவியில் இருந்து தூக்கி வீட்டையும் காலி செய்ய வைத்தார் மோடி. ஆனால், இப்போது அவருக்கே பெரும்பான்மை இல்லை. ஆகவே, முதல் நாள் பதவி ஏற்பின் போதே எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார். அதோடு […]

திருமாவளவன் டபுள் ஆக்ட். டாஸ்மாக் மூடலைன்னா தி.மு.க.வுடன் கூட்டணி இல்லையா?

கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகளுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் போராட்டத்துக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றாலும், போராட்டம் நடத்துவோம் என்று வள்ளுவர் கோட்டத்தில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் திருமாவளவன். இந்த கூட்டத்தில் ஆவேசம் காட்டிய திருமாவளவன், ‘’மரக்காணம் கள்ளக்குறிச்சி என்று நச்சு சாராயச் சாவுகள் தொடர்ந்து நடக்கின்றன. ஆகவே, தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்து! டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு’ என்று ஆவேச கோஷம் எழுப்பி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், சட்டசபையில் இவரது எம்.எல்.ஏ.க்கள் என்ன […]

பிரதமர் மோடி முதல் உறுப்பினராகப் பதவியேற்பு. புயல் வீசும் மக்களவை

vஇன்று 18வது மக்களவை கூட்டத்தொடரில் முதல் எம்.பி.யாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தற்காலிகப் பிரதமர் மஹ்தாப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே பேசிய மோடி, ‘’60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க எனக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அவசியம். எதிர்க்கட்சிகள் மக்கள் நலத்திட்டங்களில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த […]