டெல்லியில் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அதற்கேற்றவாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முதல் காவல்நிலையத்தில் பணியாற்றிய […]
அண்ணாமலை அரசியல் அம்புட்டுத்தானா..? லண்டனுக்கு பேக்கப்.

அரசியல் படிப்பதற்காக அண்ணாமலை லண்டனுக்குச் செல்வதாக கூறப்படும் விவகாரம், அவரை தமிழக அரசியலில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தும் விஷயம் என்று சீனியர்கள் குஷியில் இருக்கிறார்கள். ஆனாலும், ‘அண்ணாமலை லண்டன் கோர்ஸ் முடிச்சதும் தமிழகம் திரும்பி புதிய ஸ்கெட்ச் போட்டு தமிழக முதல்வரா ஆயிடுவார்’’ என்று அவரது வார் ரூம் தினமும் புதுப்புது தகவல்களை வெளியிட்டு அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், […]
தேர்தல் வந்துட்டா அன்புமணியை கையில் பிடிக்க முடியாது. இடஒதுக்கீடு போராட்டம்.

பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் என ஏதாவது வந்துவிட்டால் உடனே டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த வகையில் இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அன்புமணி வன்னியர் ஓட்டுகளை வளைப்பதுடன் அ.தி.மு.க. வாக்குகளுக்கும் அடி போடுகிறார். இத்தனை நாட்களும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களை கண்டுகொள்ளாத அன்புமணி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதிக்குள் அடங்கியிருக்கும் பாப்பனப்பட்டி நினைவுத் தூணில் மலர் அஞ்சலி செலுத்தினார். சாணிமேடு கிராமத்தில் பிரசாரம் செய்த […]
மோடி சட்டத்துக்கு எடப்பாடியும் எதிர்ப்பு. மீண்டும் இந்தித் திணிப்பு..?

ஜூலை 1 முதல் அறிமுகமாகியிருக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தமிழகத்தில் ஸ்டாலின் அரசும் எடப்பாடி பழனிசாமியும் இந்த விஷயத்தில் ஒரே நேர்க்கோட்டில் நிற்பது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கில், ‘இந்தி, சமஸ்கிருதம் தெரியாத வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். […]
பாட்ஷாவாக மாறிய பப்பு ராகுல். மோடி, அமித் ஷா திணறல்

கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சி இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவந்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வினரால் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்ட ராகுல்காந்தி, நேற்றைய தினம் மக்களவையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை கிழிகிழியென கிழித்து எறிந்துவிட்டார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய ராகுல் காந்தி, ”உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. ஒட்டுமொத்த […]
பானிபூரியில் புற்றுநோயை உருவாக்கும் அமிலங்கள்! அதிர்ச்சி தகவல்கள்!

ஒவ்வொரு தெருமுனையிலும் பானிபூரி கடைகளை எளிதாகக் பார்க்க முடிகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் தயாரிக்கும் பானிபூரிக்கென்றே வாடிக்கையாளர்கள் அலைமோதுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. சிறியவர்கள் முதியவர் பெரியவர்கள் வரை பானிபூரியை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அப்படி சாலையோரம் விற்பனை செய்யப்படும் பானிபூரிகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்கிற கேள்வி எழுந்தாலும், அதை சற்றும் பொருட்படுத்தாமல் பானிபூரியை வாங்கி சுவைப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமற்று இருப்பதாக உணவுப் […]
இனி 45 நாட்களில் தீர்ப்பு வந்துவிடுமா..? அறிமுகமாகும் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு

இன்று முதல் அமலாகும் புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் கிரிமினல் வழக்குகள் விசாரணை முடிந்த நாளில் இருந்து 45 நாட்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமே இல்லை என்று வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த சட்டம் குறித்து ப.சிதம்பரம், ‘இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, […]
விக்கிரவாண்டிக்கு ஏர்போர்ட், ஹார்பர்? செளமியா அன்புமணி தாறுமாறு வாக்குறுதி.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து செளம்யா அன்புமணி, மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது பா.ம.க. ஜெயித்துவிட்டால் டாஸ்மாக் மூடப்படும் என்று வித்தியாசமான ஒரு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெயிப்பதன் மூலம் எப்படி டாஸ்மாக்கை மூடுவார்கள் என்பது சிதம்பர ரகசியமாக இருக்கிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ், ‘’தி.மு.க.வினர் இப்போதே வன்முறை, தேர்தல விதிமீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதை தட்டிக் கேட்கும் பா.ம.க. மற்றும் அ.தி.மு.க.வினர் […]
சபாஷ் ரோஹித், சூப்பர் கோலி, மாஸ் பும்ரா

– இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி ஐசிசி உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று இந்திய மக்களுக்கு பெரும் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றிக்குக் காரணம் கேப்டன் ரோகித், அதிரடி மன்னன் விராட் கோலி மற்றும் ஆட்டத்தை மாற்றிக் காட்டிய பும்ரா. இந்தியாவின் வெற்றி ஆட்டம் எப்படியிருந்தது என்று பார்க்கலாம். டாஸ் வென்றதும் தன்னுடைய பாணியில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா. முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து இந்திய அணிக்கு […]
தமிழிசைக்கு ரூட் கிளியர்… அண்ணாமலை லண்டன் போகிறார்

மேடையில் வைத்து தமிழிசை செளந்தரராஜனை திட்டித் தீர்த்த அமைச்சர் அமித் ஷா, அவரை திடீரென டெல்லிக்கு வரவழைத்துப் பேசியிருக்கிறார். இதன் பின்னணியில் மீண்டும் அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி கிடைக்கப்போவதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதிபடுத்துவது போன்று, லண்டனுக்குச் சென்று அண்ணாமலை சர்வதேச அரசியல் பற்றி படிக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் “சர்வதேச அரசியல்” என்ற தலைப்பிலான படிப்பை பயில்வதற்கு அண்ணாமலை தேர்வாகி […]

