News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

களை எடுக்கப்பட்ட கோவை, நெல்லை மேயர்கள் பின்னணி. அடுத்த டார்கெட் மதுரை..?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெல்லை, கோவை தி.மு.க. மேயர்களிடம் ராஜினாமா கடிதம் வாங்கி அதிரடி காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உட்கட்சி பூசல் கொடி கட்டிப் பறக்கும் மதுரை மேயரிடமும் விரைவில் ராஜினாமா கடிதம் வாங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. கோவை தி.மு.க.வுக்கு பொறுப்பாக செந்தில்பாலாஜி இருந்த காலத்தில், அவரது பரிந்துரையின் பேரில் மேயர் ஆனவர் கோவை மாநகராட்சி 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். இவரிடம் ராஜினாமா வாங்கியதற்கு முக்கியக் காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் இவரது ஏரியாவில் […]

விக்கரவாண்டியில் வேட்டி, சேலை விநியோகம்! கொந்தளித்த அன்புமணி!

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் இம்மாதம் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி திடீரென்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.   அதன் அறிவிப்பின்படி வருகிற 10ம் தேதி விக்கிரவாண்டியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக தேர்தலை சந்திக்கிறார். அ.தி.மு.க. தேர்தலை […]

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய்! பாராட்டிய கட்சி பிரமுகர்கள்!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இன்று (ஜூலை 3ம்தேதி) நடைபெற்ற விஜய் விருதுகள் வழங்கும் விழா 2.0வில் கலந்து கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவ, மாணவிகளுக்கு தொகுதி வாரியாக சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   கடந்த ஜூன் 28ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய விஜய், போதைப் பொருட்கள் வேண்டாமென்று மாணவ, மாணவிகளை உறுதிமொழி எடுக்க வைத்தார். அதே போன்று தமிழகத்திற்கு […]

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்! லேப் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தின் ஓலம் இன்னும் அடங்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் தெருவுக்கு தெரு இறுதிச்சடங்குகள் நடந்து பார்ப்பவர்களை கலங்கச் செய்தது.   இதற்கிடையில் விஷசாராயம் விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், பல அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டும் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.   மருத்துவமனையில் போதிய மாற்று மருந்து மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் […]

தங்க கடத்தலில் அண்ணாமலைக்குத் தொடர்பு..? லண்டன் பயணத்துக்குச் சிக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தோல்வியை சந்தித்த அண்ணாமலையை தமிழகத்தில் இருந்து அனுப்புவதற்கு திட்டமிட்டு லண்டன் படிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் நெருங்கிய கூட்டாளி தங்கக் கடத்தலில் சிக்கியிருப்பதை அடுத்து அண்ணாமலைக்கும் சிக்கல் வரும் என்றும் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை போடப்படும் என்றும் சொல்லப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் சமீபகாலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், பரிசுப் பொருட்கள், பொம்மை […]

அன்புமணியை கதறவிடும் எடப்பாடி பழனிசாமி. குஷியில் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும், அந்த கட்சிக்கு 36% வாக்கு வங்கி இருக்கிறது. இந்த வாக்கு யாருக்குச் செல்லும் என்பது தான் இப்போது கேள்வியாக மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் சீக்ரெட் மூவ் அன்புமணிக்கு ஆப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுகவினர் கட்சிக் கரை கட்டிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. அதோடு, அன்புமணியும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களை போட்டு மாம்பழத்துக்கு வாக்கு […]

போலே பாபாவின் காலடி மண்ணுக்கு 120 உயிர்கள் பலி. ஹத்ராஸ் பரிதாபம்.

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிகச் சொற்பொழிவாளரின் காலடி மண்ணை எடுக்க வேண்டும் என்று முண்டியடித்த கூட்டம் ஒருவர் மீது ஒருவர் விழுந்து 120க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவில் மேம்படாத தேசம் இப்படித்தான் இறந்துகொண்டிருக்கும் என்று வைரமுத்து கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிக்கிய 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றிருக்கிறார்கள். சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும்தான் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள். இது கோயில் திருவிழா அல்லது கும்பமேளா அல்ல. ஒரு சாமியார் […]

ஒன்றிய அரசு, நீட் எதிர்ப்பு. விஜய் டெரர் அரசியல்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பரிசு வழங்கி பாராட்டும் விழா இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘’இன்று நான் நீட் தேர்வு பற்றி பேசவேண்டி இருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்த தேர்வு நியாயமானதாக இல்லை’’ என்று முதன்முதலாக மத்திய அரசு மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். குறிப்பாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அதோடு, […]

ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து! சென்னையில் பரபரப்பு!

சென்னை அடையாறில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டீசல் பேருந்துக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் எரிவாயு பயன்படுத்தி அரசு பேருந்துகளை இயக்க சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறைவான விலையில் பேருந்துகள் இயக்கப்படுவதுடன் அதிக மைலேஜ் கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை அடையாறு பணிமனையில் இருந்து பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை பயணிக்கும் தடம் […]

சென்னை யூடியூபர் கடத்திய 267 கிலோ தங்கம்! அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ அளவுக்கு  தங்கம் கடத்தல் நடந்திருக்கும் சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளின் தலையை சுற்றவைத்துள்ளது.   பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கடத்தும் கடத்தல் கும்பல் பல்வேறு யோசனைகளை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் அவை பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு […]