ஸ்டாலின் வழியில் இங்கிலாந்தில் ஸ்டார்மர் வெற்றி. சீமான் வழியில் உமா குமரன் வெற்றி

பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 412 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதற்கு, அவர்கள் தி.மு.க. கொள்கையைப் பின்பற்றியது தான் காரணம் என்று ஸ்டாலின் அறிவிப்பு செய்திருக்கிறார். பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த காலகட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக போரிஸ் ஜான்சன், லிஸ்டிரஸ் என பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். கடைசியாக5-வது நபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், மொத்தம் […]
சி.பி.ஐ.க்குப் போகிறதா ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..? கொலையாளிகளுக்கு என்கவுண்டர்..?

பகுஜன் சமாஜவாதியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. அவரது உடற்கூராய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்ற வேண்டும், அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம், மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சட்டக் கல்வியை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2000-ம் ஆண்டு முதல் தீவிர […]
தயாராகுங்கள்! வெளியானது நீட் முதுநிலை தேர்வு தேதி!

ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலைத் தேர்வுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வர்கள் ஆயத்தமாக உள்ளனர். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் நிலவி வருகிறது. வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்திய முறை குறித்தும் பல்வேறு தரப்புகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையில் கடந்த மாதம் (ஜூன்)23ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக […]
விஜயகாந்த்தை ஏ.ஐ. மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள்! பிரேமலதா எச்சரிக்கை!

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தமிழகமே திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக அரசு இறுதி மரியாதையுடன் அவரது உடல் தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலை தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணியில் சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கேப்டனின் மூத்த மகன் விஜயபிரபாகரன் வெறும் 4ஆயிரத்து சொச்ச்ம வாக்கு […]
விஷசாராய நிவாரணம் திருப்பி வாங்கப்படுகிறதா?

கள்ளக்குறிச்சி விஷசாராய மரண செய்தி கேட்ட உடனேயே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரணம் என்று அறிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும் பல சலுகைகளை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தீ விபத்து உள்ளிட்ட விபத்துகளில் உயிரிழந்வர்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷசாராயம் குடித்து பலியானவர்களுக்கு எதன் அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை. எனவே […]
விக்கிரவாண்டி தேர்தலுக்குத் தடை? பணம், டோக்கன் விளையாட்டு ஆரம்பம்.

வரும் 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில், நேற்று முதல் தி.மு.க.வினர் பணம், டோக்கன், இலவசப் பொருட்கள் என்று அள்ளிக்கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதை காரணமாக வைத்து எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்துவருகிறார்கள். தி.முக.வின் 10 அமைச்சர்களும் முக்கியப் புள்ளிகளும் விக்கிரவாண்டியில் தங்கி தீவிர பரப்புரை செய்கிறார்கள். வீட்டுக்கு வீடு சென்று நோட்டீஸ் கொடுக்கும் சாக்கில் பணம், டோக்கன் கொடுக்கிறார்கள். திண்ணைப் பிரசாரம் செய்கிறார்கள். கடைசி நேரத்தில் இன்னமும் அதிக பணம் கொடுக்கப்படும் […]
அண்ணாமலை வாயில் வடை சுடுகிறார். எடப்பாடி பழனிசாமி நேரடி அட்டாக்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை பா.ம.க. பயன்படுத்தி வாக்குகள் வாங்குவதற்கு முயற்சி செய்வதும் அதற்கு அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு கொடுத்திருக்கும் நிலையில், முதன்முதலாக எடப்பாடி பழனிசாமி நேரடியாக, அண்ணாமலை வாயிலேயே வடை சுடுகிறார் என்று நேரடியாக அட்டாக் செய்திருப்பது பெரும் திருப்பமாகக் கருதப்படுகிறது. கோவை செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்தவே கட்சி நடத்துகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிட்டிருந்தால் நான்காவது இடத்துக்குப் போயிருக்கும் என்று கூறியிருப்பது அவரது அறியாமையைக் […]
பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆந்திர மாநிலத்திற்கான தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பிரதமராக ஆட்சியமைக்க பெரும் பங்கு வகித்தது ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றிதான். இந்நிலையில் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் முறையாக டெல்லி […]
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: கைது செய்யப்பட்டவர்களின் பகீர் வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்துல விஷசாராயம் குடிச்ச 65 பேர் உயிரிழந்த நிலையில, 229 பேர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று படிப்படியாக வீடு திரும்பி வருகிறார்கள். இருப்பினும் இன்னும் 14 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கு குறித்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுக்கரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய […]
இடைத்தேர்தல் ஹோட்டல் செலவுக்கு திரள்நிதி..? சீமான் வசூல் வேட்டை

நாம் தமிழர் சீமானும் அவருக்கு நெருக்கமான சிலரும் பாண்டிச்சேரி ஸ்டார் ஹோட்டலில் தங்கிவிட்டு இடைத்தேர்தல் பிரசாரம் செய்வது கடும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சீமான் திரள்நிதி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தேர்தல்ல ஜெயிக்கிறோமா, தோற்கிறோமாங்கிறது முக்கியமில்லை. போராடுவது தான் நமக்கு முக்கியம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம், மிகப்பெரிய மாநாடு நடத்தி பணத்தை செலவு செய்ய மாட்டோம் என்று ஆவேசமாக பேசும் சீமான் இடைத்தேர்தல் செலவுக்கு திரள்நிதி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘’மற்ற […]

