News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு! எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Cதமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு என்று அறிவுரை கூறியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.   சென்னை பெரம்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உண்மையான கொலையாளிகள் கிடையாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். […]

இடைத்தேர்தலுக்கு தயாரான விக்கிரவாண்டி!

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நாளை (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.   தி.மு.க.சட்டமன்ற வேட்பாளர் புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.   அந்த வகையில் தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம்  தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேர்தல் அறிவிப்பு […]

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! 2 பேர் பலி!

சிவகாசி அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9ம்தேதி) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. முருகவேல் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.   4 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 தொழிலாளர்கள் பட்டாசு மருந்து கலந்து கொண்டிருந்தனர். கோப்பையில் நிரப்பப்பட்டு இருந்த […]

நீட் வினாத்தாள் கசிவு உண்மைதான்! ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து அதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன.   அதன்படி இத்தேர்வில் 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. அதே போன்று வினாத்தாள் கசிவு, பல […]

சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடமாற்றம்! யார் இந்த அருண்!

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (ஜூலை 8ம்தேதி) திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக புதிய ஆணையராக ஏ.டி.ஜி.பி. அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக முதலில் 8 பேர் பின்னர் 3 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை […]

அண்ணாமலையைத் திட்டுனா பன்னீருக்கு வலிக்குது. எடப்பாடிக்கு கடும் கண்டனம்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைதான் முதுகில் குத்தும் துரோகி என்று கடுமையாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கும் நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாக நிற்கும் ஓ.பன்னீர்செல்வம் கடுமையான கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் வார்த்தைப் போர் நடைபெற்றுவருகிறது. இதுவரை அ.தி.மு.க.வின் மற்ற தலைவர்கள் மட்டுமே அண்ணாமலை மீது விமர்சனம் செய்துவந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியும் நேரடியாக தாக்கத் தொடங்கியிருக்கிறார். ’’எங்கள் கட்சித் தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஆகியோரை பற்றி […]

கேரளாவில் மூளை தின்னும் அமீபா, கர்நாடகாவில் டெங்கு… உஷார் தமிழகம்

  கேரளா மாநிலத்தில் மூளையைத் தின்று உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அமீபா தொற்று பரவல் காரணமாக 14 வயது சிறுவன், 13 வயதான சிறுமி மற்றும் 5 வயது குழந்தை ஆகியோர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கர்நாடகாவில் டெங்கு காய்ச்சலுக்கு 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. அக்கம்பக்கத்தில் பரவும் நோய்கள் தமிழகத்தில் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கேரளாவில் பிரைமரி அமிபிக் மென்கோன்செப்ஹாலிடிஸ் எனப்படும் தொற்று […]

நள்ளிரவில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம். சீமான் இப்படிச் சொல்லிட்டாரே

கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூா் மாவட்டம் பொத்தூரில் திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது படுகொலை விசாரணை குறித்து சீமான் கூறியிருக்கும் கருத்து கடும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வசித்து வந்த பெரம்பூர் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டது. ஏரியாவைச் சேர்ந்த பொதுமக்கள், கட்சியினர், ஆதரவாளர்கள் […]

ஆம்ஸ்ட்ராங் உடலை புதைப்பதில் என்ன பிரச்னை..? நீதிமன்ற உத்தரவு வந்தாச்சு

கருணாநிதி உடலை பொது இடமான மெரீனாவில் அடக்கம் செய்யலாம் என்றால் ஆம்ஸ்ட்ராங்கை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்வதில் என்ன பிரச்னை என்று அவரது ஆதரவாளர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் திருமுருகன் காந்தி, ‘’தோழர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது உடலை அவரது சொந்த நிலத்தில், அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி இதுவரை தராமல் ஏன் திமுக அரசு காலம் தாழ்த்துகிறது? அரசு மருத்துவமனையில் காவல்துறையை குவித்து இந்த துயரமான சூழலில் எதை சாதிக்க நினைக்கிறது திமுக […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு..? தமிழ் நியூஸ் நவ் எக்ஸ்க்ளூசிவ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு சிக்கல் தரும் வகையில் இரண்டு மிகப்பெரும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை அடுத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடைபெற்றுள்ளது. இந்த இரண்டுமே பட்டியலின மக்கள் தொடர்புடையதாக இருப்பதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் தி.மு.க.வுக்கு எதிராக ஒன்று திரண்டிருப்பதும், அரசியல் கோணத்திலும் சிந்திக்க வைக்கிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா உதயசூரியன் சின்னத்திலும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி மாம்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா மைக் சின்னத்திலும் நிற்கிறார்கள். […]