News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

துப்பாக்கிச் சூட்டில் ரத்தம் சொட்டச்சொட்ட உயிர் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், அடையாளம் தெரியாத மர்மநபர் துப்பாக்கியால் சுட்டார். வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த கூட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவே ட்ரம்ப் குனிந்தார். ஆனாலும், அவர் காதை […]

அதிகாலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளி என்கவுன்டர்..? சந்தேகம் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர், இன்று அதிகாலை தப்பி ஓட முயன்ற நேரத்தில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த என்கவுன்டர் குறித்து எடப்பாடி பழனிசாமி சந்தேகம் எழுப்பியிருக்கிறார். கடந்த 5-ம் தேதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே […]

எடப்பாடி பழனிசாமி ஜஸ்ட் எஸ்கேப். சீமான், ராமதாஸ் கூட்டணி சாத்தியமா?

இடைத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறுவதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கும் அ.தி.மு.க.வினர், புத்திசாலித்தனமாக எடப்பாடி பழனிசாமி போட்டி போடாமல் தவிர்த்தார் என்று பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்க் புள்ளிகள், ‘’பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலங்களை கேட்டபின்பும், தேசியக் கட்சியின் மாநிலத்தலைவரின் படுகொலை தலைநகரிலேயே நடந்தபின்பும், பல்வேறு கடத்தல், கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கற்ற அவலங்களை பார்த்த பின்பும் , ஒழுங்கில்லாத சாலைகள் ,ஓடாத பேருந்துகள், முற்றிலும் இல்லாத நிர்வாகம் […]

டாக்டர் ராமதாஸ் ஆசையில் மண்ணு. அன்புமணி அமைச்சர் பதவி அம்புட்டுத்தான்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டாக்டர் ராமதாஸ் நிச்சயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென பா.ஜ.க. பக்கம் சாய்ந்தார். அதாவது, அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலே கூட்டணி அமைந்தது. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி எங்கேயும் வெற்றி பெறவே இல்லை. இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வந்ததும், இதை தன்னுடைய பிரஸ்டீஜ் விஷயமாக ராமதாஸ் எடுத்துக்கொண்டார். விக்கிரவாண்டி எங்கள் கோட்டை என்று டாக்டர் ராமதாஸ் […]

அன்புமணி, சீமானுக்கு டெபாசிட் போச்சு… ஸ்டாலின், எடப்பாடி செம ஹேப்பி

அன்புமணி, சீமானுக்கு டெபாசிட் போச்சு… ஸ்டாலின், எடப்பாடி செம ஹேப்பி இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பார்கள். அந்த அளவுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் இறங்கி வேலை செய்வார்கள். ஆனாலும், அன்புமணிக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது. ‘இது ஈரோடு இடைத் தேர்தல் அல்ல, எங்க ஏரியா… இங்கே உங்களால் ஜெயிக்க முடியாது’ என்று சவால் விட்டார் அன்புமணி. பா.ம.க.வுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக் […]

எஸ்.ஐ.க்கள், டி.எஸ்.பி.க்களுக்கு புது உத்தரவு! அனல் பறக்கும் காவல் துறை!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றிய சந்தீப்ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கூடுதல் டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டார். அதே போல் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமினம் செய்யப்பட்டார்.     கடந்த (ஜூலை)5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இதைத்தொடர்ந்து 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் […]

நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா? அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாக இணையத்தில் செய்தி தீயாக பரவி வருகிறது.   நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று 3வது நாளாக நடைபெற்றது.   கடந்த 10ம் தேதி தொடங்கிய இக்கூட்டத்தில் […]

எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்துக்குக் காரணம் பா.ஜ.க…?

அதிமுகவின் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட ஒரே ஒரு கண்டிஷன், யாரும் ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது என்பது தான். அதனாலே, அத்தனை பேரும் வலுவான கூட்டணி குறித்து வலியுறுத்தினார்கள். இப்போது பன்னீர்செல்வம் மட்டுமின்றி ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கேசி பழனிச்சாமியோடு இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்பதை நிறுவி, ஒன்றிணைப்பு குறித்து தொடர்ந்து […]

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன், அமலாக்கத் துறைக்கு ஆப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, அமலாக்கத் துறைக்கு பெரும் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம், ‘’சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீதான அமலாக்க துறையின் கைது […]

ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு. திருமாவளவன், சீமானுக்கு கமாண்டோ பாதுகாப்பு..?

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த சமயத்தில் முதல் நபராக அங்கே சென்றது மட்டுமின்றி, ‘இப்போது சரண் அடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்று ஆளும் தி.மு.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் திருமாவளவன். கூட்டணிக் கட்சித் தலைவரே பொய்யான நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்த பிறகே தி.மு.க. மீது அனைத்துக் கட்சிகளும் அவதூறு பரப்பின. ஆகவே, இந்த விஷயத்தில் திருமா மீது தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]