15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம்! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு உத்தரவின்படி இன்று (ஜூலை16ம் தேதி) 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். *தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், உள்துறை செயலாளராக இருந்து வந்த அமுதா ஐ.ஏ.எஸ். தற்போது வருவாய் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். *உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். *சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். *சிட்கோ இயக்குனராக இருந்த மதுமதி ஐ.ஏ.எஸ். பள்ளி […]
விஜயபாஸ்கரை பிடிச்சுட்டாங்க. கேரளாவில் அடைக்கலம் கொடுத்த மாஜி

கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர், உறவினர் பிரவீன் உள்பட 7 பேர் மிரட்டி எழுதி வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை ₹100 கோடி மதிப்பில் போலி ஆவணம் தயாரித்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் கொடுத்தார். […]
10 ஆயிரம் கோடி கொள்ளை..? திருச்சி சூர்யா புகாருக்கு அண்ணாமலை அமைதி

பா.ஜ.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட திருச்சி சூர்யா ஆரம்ப நாட்களில் அண்ணாமலை தவிர்த்த மற்ற பா.ஜ.க. தலைவர்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவந்தார். இப்போது நேரடியாக அண்ணாமலை குறித்து புகார் கூறத் தொடங்கியிருக்கிறார். அதுவும் அண்ணாமலை 10 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருப்பதாக ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் நிலையிலும் அண்ணாமலை வாய் திறக்காமல் அமைதி காப்பது பா.ஜ.க.வினரை பதற வைத்திருக்கிறது. திருச்சி சூர்யா கூறிவரும் புகார் குறித்து பா.ஜக.வில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் கல்யாணராமன், ‘’10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக […]
காவிரி விவகாரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!

தமிழக அரசு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து காவிரி விவகாரத்தில் உடனடி தீர்வு காண மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான அழைப்பைவிடுத்துள்ளார். காவிரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக அரசு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மையிடமும், […]
ஆளுநரை சந்திக்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி? முக்கிய பின்னணி!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று ஆளும் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியதை தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் […]
சவுக்கு சங்கர் விவகாரம்: அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை விடுவிக்கக் கோரி அவரது தாயார் மனுதாக்கல் செய்துள்ள விவகாரத்தில் தமிழக அரசை உச்சநீதிமன்றம் கேள்விக்கணைகளால் வெளுத்து வாங்கியுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியதாகவும், காரில் கஞ்சா கடத்தியதாகவும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 294(பி), 353, 509 உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முசிறி துணை எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் ஐ.டி.67 சட்டம் மற்றும் பெண்கள் துன்புறுத்தல் சட்டத்தின் […]
எடப்பாடி பழனிசாமி செல்லூர் ராஜூ மோதல் முற்றுகிறது. தெனாவெட்டு பதிலடி

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அ.தி.மு.க.வில் சரவணன், பா.ஜ.க. கூட்டணியில் ஸ்ரீனிவாசனும் போட்டியிட்டனர். இதில் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 2 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்குகளும், அதிமுகவின் சரவணன் 2 லட்சத்து 04 ஆயிரத்து 804 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி 92 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்றது. அண்ணா தி.மு.க.வின் […]
காவிரி நீருக்காக ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம். போராட்டம் ஆரம்பம்

காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு தினமும் 11,500 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 8,000 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளோம்’ என அறிவித்தார். இதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அனைத்துக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு காவிரி நீருக்குப் போராட ஸ்டாலின் முன்வந்திருக்கிறார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், […]
அம்பானி வீட்டுத் திருமணத்தில் ஓ.பி.எஸ். ஓசி சோறு..? ரெண்டு பேருக்கும் என்ன டீலிங்..?

மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் திருபாய் அம்பானி அவர்களின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நம்ம ஊரு ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஒரு லோக்கல் டான்ஸ் ஆடியது, அவரது ரசிகர்களையே அதிர்ச்சி அடைய வைத்தது. ஏனென்றால் அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு டான்ஸ் ஆடுபவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய பணப்பரிசு வழங்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. ரஜினிகாந்துக்கும் இப்படி பணத்துக்கு ஆசைப்பட்டு ஆட்டம் போடலமா என்று அவரது ரசிகர்களே மனம் […]
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாத்துங்க. கல்வித் திருநாளில் ஸ்டாலின் அடுத்த போராட்டம்

பெருந்தலைவர் காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் போன்று தன்னுடைய காலை உணவுத் திட்டம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2022ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளிகளில் மட்டும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை […]

