News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பா.ரஞ்சித், கிருஷ்ணசாமிக்கு திருமாவளவன் எச்சரிக்கை. தி.மு.க.வை காப்பாற்றும் முயற்சியா..?

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையில் தி.மு.க. சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் உள்ளிட்ட எதிரணிகள் கடுமையாக எதிர்ப்புகளை பதிவு செய்த நேரத்தில், திருமாவளவன் நேரடியாக ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு மரியாதை செலுத்த முதல் நபராக வந்து சேர்ந்தார். சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று சொன்ன திருமாவளவனே இப்போது சரியான திசையில் தி.மு.க. செயல்படுவதாக பாராட்டு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பா.ரஞ்சித் நடத்தும் பேரணி மற்றும் […]

பொம்பள சீமான் காளியம்மாளுக்கே இந்த கதியா..? நாம் தமிழர்களை அலறவிடும் ஆடியோக்கள்

தினம் ஒரு ஆடியோ வெளியாகி சீமான் கட்சியினரை பதற வைத்துக்கொண்டு இருக்கிறது. சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், அவருடைய செல்போன் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அதிலிருந்து தகவல்கள் லீக் ஆவதாகவும் இடும்பாவனம் கார்த்தி ஒரு பதிவு போட்டார். இந்த நிலையில் இடும்பாவனம் கார்த்தி ஒரு பெண்ணை ஏமாற்றி கைவிட்டதாக  திருச்சி சூர்யா பேசினார். இந்த பெண் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்தது சீமானும் துரைமுருகனும் இடும்பாவனம் என்று சில ஆதாரங்களையும் வெளியிட்டார். இதையடுத்து […]

நிதி ஆயோக் புள்ளிவிபரத்துக்கு தி.மு.க. பாராட்டு. அண்ணாமலை அட்டாக்

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023 -2024ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சிப் பட்டியலில் தமிழகம் மாபெரும் சாதனை படைத்துள்ளதாக தி.மு.க.வும், வேதனைப் பட்டியல் என்று அண்ணாமலையும் எடுத்துக் காட்டியிருப்பது குழப்பதை உருவாக்கியுள்ளது. தி.மு.க.வினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, ’ஓட்டுமொத்த இந்தியாவின் சராசரி வளர்ச்சிக் குறியீடு 71 புள்ளிகள் என்ற நிலையில், 78 புள்ளிகளை பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு. இந்தியாவின் சராசரி வறுமை ஒழிப்பில் 72 என இருக்கும் நிலையில் தமிழ்நாடு 92 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. […]

கவர்னர் ஆர்.என்.ரவி கோரிக்கை நிராகரிப்பு..? தோல்வி அடைந்த டெல்லி விசிட்

மூன்றாவது முறையாக பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற பிறகு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு ரீதியாக பிரதமர் மோடியை சந்திக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே, ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ரவி, திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்பாகவே சென்னை திரும்பியதையடுத்து, அவரது பயணம் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2021, செப்டம்பர் 18-ம் தேதி ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தமிழகத்துக்கு முன்பாக நாகாலாந்தின் ஆளுநராக […]

கர்நாடக வேலை கன்னடியர்களுக்கு சட்டத்தால் சித்தராமையாவுக்கு சிக்கலோ சிக்கல்

கர்நாடக அரசுக்கு இருக்கும் துணிச்சல் தமிழ்நாட்டுக்கு இல்லை, தமிழகத்திலும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே இடம் என்று சட்டம் இயற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் குரல் கொடுக்கும் வேளையில், இந்த சட்டத்தைக் கொண்டுவந்த சித்தராமையா, உடனடியாக இதை வாபஸ் வாங்கியது மட்டுமின்றி கடும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார். தனியார் நிறுவனங்களில் கன்னடியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டம் இரண்டு நாட்கள் முன்பு கர்நாடகா அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றிருந்தது. மேனேஜர்களுக்கான இடங்களில் 50% மற்றும் இதர இடங்களில் 70% கன்னடியர்களுக்கு […]

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அ.தி.மு.க. மலர்க்கொடியை அடுத்து பா.ஜ.க. புள்ளி..?

கடந்த 5ம் தேதி சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 8 பேர் காவல் துறையில் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பலரும் குரல் கொடுத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட ரவுடி திருவேங்கடம் கடந்த 14ம் தேதி சென்னை மாதவரம் […]

சாட்டை துரைமுருகன் ஆடியோ லீக்… சூர்யாவுடன் என்ன தொடர்பு?

சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த ஆடியோ எப்படி வெளியே போனது என்று கேள்வி எழுப்பியிருக்கும் இடும்பாவனம் கார்த்திக்கு, எக்கச்சக்க எதிர்க்கேள்விகள் கேட்கப்படவே, நாம் தமிழர் தம்பிகள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். இடும்பாவனம் கார்த்தியின் பதிவில், ‘’பல காலமாக அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் உலவிய ஒரு பாடலை அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்கள் பொதுக்கூட்ட மேடையில் பாடியதற்கு சாதிய உள்நோக்கம் கற்பித்து, அவரைக் கைதுசெய்து, சிறையிலடைக்க முற்பட்டது திமுக அரசு. நாம் தமிழர் கட்சி சார்பில், அண்ணன் மணிசெந்தில் […]

சசிகலா மீண்டும் டூர் கிளம்பியாச்சு.  எடப்பாடி மீண்டும் நோ சொல்லியாச்சு.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குப் போனது குறித்து கேட்டநேரத்தில், ‘சசிகலாவை மட்டுமாவது கட்சியில் சேர்க்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், சசிகலா மீண்டும் சுற்றுப்பயண பாலிடிக்ஸை தொடங்கியிருக்கிறார். சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சியை ஒப்படைத்துவிடுவார் என்று கணக்குப் போட்டார். அப்படி நடக்கவில்லை என்றதும் ஆன்மிக டூர் கிளம்பினார். அந்தந்த பகுதிக்குச் செல்லும்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் […]

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி: தலித் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்த பா.ரஞ்சித்!

பகுஜன் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் படுகொலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், மற்ற 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். […]

வீட்டில் இருந்தபடியே பீர், ஒயின் ஆர்டர் செய்யலாம்! ஸ்விக்கி, சொமாட்டோ முடிவு!

மக்கள் டோர் டெலிவரி என்ற வார்த்தைக்கு முழுவதும் அடிமையாகிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். உணவு, மளிகைப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என்று அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் காலம் மற்றும் பணவிரயம் தவிர்க்கப்படுகிறது என்று மக்கள் எண்ணுகின்றனர். மக்களின் இந்த எண்ணத்தால் நாளுக்கு நாள் ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதோடு இந்நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவாக்கமும் செய்து வருகின்றன. அந்த வகையில் […]