News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இடும்பனின் தமிழச்சிக்கு திருச்சி சூர்யா ஸ்பெஷல் அட்வைஸ்

நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கும் மோனிஷ் ராய் எனப்படும் தமிழச்சிக்கும் இடையிலான பஞ்சாயத்தை திருச்சி சூர்யா அம்பலப்படுத்தியிருந்தார். இவர்களை சேரவிடாமல் சீமானே தடுத்தார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழச்சி, ‘’நாம் தமிழர் கட்சி மீது அவதூறு பரப்ப என்னை பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம். நான் எப்போதும் அண்ணன் சீமானின் தங்கைதான்; நாம் தமிழர் கட்சிதான்! உங்க அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள்! தயவுசெய்து என்னை விடுங்கள்’’ என்று கூறியிருந்தார். இடும்பாவனம் கார்த்தியும் இதுகுறித்து, ‘பாதிக்கப்பட்ட பெண் […]

பேராசிரியர்களே ஃபிராடுகளாக இருந்தால்..? அறப்போர் அம்பலப்படுத்தும் மோசடி

தமிழ்நாட்டின் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணிபுரியும் 13,891 பேராசிரியர்கள் முறையான ஐ.டி. இல்லாமல் பணிபுரிவதாகவும், மேலும், ஒரே நேரத்தில், ஒரே ஆசிரியர்கள் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப்பணியாளர்களாக இருக்கும் மோசடியையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு ஆசிரியர் ஒரு கல்லூரியில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆனால், அண்ணா யுனிவர்சிட்டியில் மாரிச்சாமி, முரளிபாபு, அரங்கராஜன், வெங்கடேசன், வசந்தா சுவாமிநாதன் ஆகியோர் 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. அறப்போர் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக […]

கவர்னர் ரவி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழினத் துரோகிகள் பட்டம்? பட்ஜெட் கலாய்ப்புகள்

தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தை கூட இடம்பெறாத மோடி அரசின் பட்ஜெட்டை தமிழ்நாட்டில் இருந்து பா.ஜ.க.வைத் தவிர இரண்டே இரண்டு பேர் முழுமையாக வரவேற்றுள்ளனர். அவர்கள் இருவரையும் தமிழினத் துரோகிகள் என்று சமூகவலைதளங்களில் செம கலாய் செய்துவருகிறார்கள். பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்தாலும் பா.மக.வின் ராமதாஸ், டி.டி.வி.தினகரன் ஆகியோர், தமிழகத்திற்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், […]

பட்ஜெட்டில் முற்றிலும் ஒதுக்கப்பட்ட தமிழகம்! பா.ஜ.க.வின் திட்டம்தான் என்ன?

2024- 2025ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23ம்தேதி) தாக்கல் செய்தார். சுமார் 80 நிமிடங்கள் கால அவகாச எடுத்து மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த இந்த அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தை ஒரு இடத்தில் கூட இடம்பெறாதது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆளும் பா.ஜ.க. கூட்டணியில்லாத மாநிலங்கள் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டுள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்போன் உள்ளிட் பொருட்கள் […]

மீண்டும் மீண்டும் கைது. தமிழக எம்.பி.க்கள் மீது ஆவேசத்தில் மீனவர்கள்.

கடந்த 35 நாட்களில் மட்டும் 89 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழக எம்.பி.க்களும் குரல் கொடுக்கவில்லை என்பது கடலோர மாவட்டங்களில் பெரும் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 600 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் […]

ஆந்திராவுக்கு நிதி, பீகாருக்கு ரோடு, தமிழகத்துக்கு அல்வா. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அலசல்

2024 – 25ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டுட்டுக்கு முறைப்படி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து பட்ஜெட்டை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதில் சில முக்கிய […]

பட்ஜெட்டுக்கு முன்னரே மோடிக்கு ஸ்டாலின் பட்டியல். போராட்டத்துக்கு ரெடி?

கடந்த 10 ஆண்டுகளாக மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதே இல்லை. பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போடாத மாநிலங்களுக்குக் குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு பட்ஜெட் வெளியான பிறகும், ‘நிதி ஒதுக்கவில்லை’ என்று கண்டனம் செய்வதற்குப் பதிலாக, பட்ஜெட்க்கு முன்பாகவே எங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து ஒரு புதிய எச்சரிக்கை ஒலி எழுப்பியிருக்கிறார். அவரது கோரிக்கைகள் நியாயமானவையே. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று, ‘’நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024 பட்ஜெட்டில் கடந்தமூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் […]

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை: தாயகம் திரும்பிய 1000 மாணவர்கள்!

வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் முதல்கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வங்காளதேசத்தில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு என்பது 44 சதவீதம் தகுதி அடிப்படையிலும், விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீதம் அடிப்படையிலும், பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 10 சதவீதமும், பெண்களுக்கு 10 சதவீதம் என்ற நிலையில் சிறுபான்மையினருக்கு 5 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் […]

எல்லாமே வதந்திதான் நம்பாதீங்க& அமைச்சர் உதயநிதி எதை சொல்கிறார்?

அமைச்சர் உதயநிதி தன் பாணியில் எப்போதும் போல கலகலப்பாக பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   சென்னை தேனாம்பேட்டையில் தி.மு.க. இளைஞர் அணியின் 45ம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி உரை நிகழ்த்தினார்.   அவர் பேசும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு 40க்கு 40 வெற்றியை பரிசாகக் கொடுத்த மக்களுக்கு […]

என்னாது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி இல்லையா? அவரே சொன்ன பதில் இது.

இன்று தி.மு.க. இளைஞரணி 45ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின், ‘இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்! கழகக் கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச் சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன்’’ என்று பாராட்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உறுதி என்று கூறிவந்தார்கள். இந்த நிலையில் இன்று நடைபெற்ற […]