மேட்ரிமோனியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றிய பெண்! கைதானது எப்படி?

மேட்ரிமோனியலில் மணமகன் மற்றும் மணமகள் தேவை என்று மணம் முடிப்பவர்கள் ஏராளம். சொந்தத்தில் இருந்து பெண் மற்றும் மாப்பிள்ளை எடுப்பது அரிதாகிவிட்டது. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஒரு பெண் தன்வலையில் போலீஸ் எஸ்.ஐ. உள்ளிட்ட பல்வேறு ஆண்களை தன் காதல் வலையில் வீழ்த்தி பல லட்சம் ரூபாய் பணம் நகைகளை சுருட்டிய சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பொய்னாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 35 வயதான ஸ்ருதி என்ற பெண்ணை சமீபத்தில் […]
இளங்கோவனை திருப்பியடிக்கும் கார்த்தி சிதம்பரம். மீண்டும் காங்கிரஸ் கோஷ்டி மோதல்

காங்கிரஸ் கட்சிக்குள் கொஞ்ச நாட்களாக எட்டிப்பார்க்காமல் இருந்த கோஷ்டி மோதல் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது ஒரு பெரும் பிரச்னையாக உருமாறியது. எனவே தி.மு.க. மேலிடத்திடம் சமாதானம் செய்யவேண்டிய நிலைமை உருவானது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சுக்கு எதிராக இவிகேஎஸ். இளங்கோவன் கடுமையான சூடு போட்டுள்ளார். ‘’தி.மு.க. இல்லை என்றால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான காங்கிரஸ் வேட்பாளர் காத்தி […]
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆலோசகர் ஆகிறார் பிரஷாந்த் கிஷோர்..? குஷியில் அ.தி.மு.க.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கடந்த 20 நாட்களாக தொகுதி வாரியாக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று திருப்பூர் மற்றும் கடலூர் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அனைவரும் கூட்டணி குறித்து பேசினார்கள். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘’கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நிர்வாகிகள் […]
தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது! கைவிரித்த சென்னை உயர்நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரேஷ் என்பவர் பொது நல மனு ஒன்று தொடுத்தார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷசாராயம் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விஷசாராயம் காய்ச்சிய […]
ஒலிம்பிக் விழா நடக்காமல் செய்ய சதி? குழப்பத்தில் சர்வதேச நாடுகள்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். போட்டி தொடருக்கு முன்னதாக அனைத்து விளையாட்டு வீரர்களையும் 600 படகுகளில் செய்ன் நதியில் ஊர்வலமாக அழைத்து செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. போட்டிகள் தொடங்க இன்னும் சிறிது […]
நீதிமன்ற உத்தரவை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்! மக்கள் அவதி!

ஆம்னி பேருந்துகளை போரூர் சுங்கச்சாவடியில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த உத்தரவை மதிக்காமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் திக்கித்திணறுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். தென்மாவட்டங்களுக்கு பயணமாகும் ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேடு முதல் செங்கல்பட்டு மார்க்கமாக இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளை உடனடியாக இயக்காமல், இருக்கைகள் நிரம்பும் வரை நிறுத்தி வைத்து இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் […]
பொட்டி பிரேமலதா… வாய்க்கொழுப்பு பேச்சுக்கு வைச்சு செய்யும் உடன் பிறப்புகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அவரால் வேஷ்டி கட்டுவதற்கு முடியவில்லை. பேண்ட் போட்டு கையை உள்ளே வைத்துக்கொண்டு அதனை மறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அவர் உடனே பதவியை தகுதியுள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திடீரென குரல் எழுப்பியிருக்கிறார் பிரேமலதா. இந்த பேச்சு உடன்பிறப்புகளுக்கு டென்ஷன் ஆக்கியுள்ளது. ஆகவே, ‘பொட்டி பிரேமலதா’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி பிரேமலதாவின் வாய்க்கொழுப்பு பேச்சுக்களை தொடர்ந்து கடுமையாகப் பேசி வருகிறார்கள். சமூகவலைதளங்களில் பிரேமலதா குறித்து, ‘’நடக்க முடியாத,பேச முடியாத […]
சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கே ஒற்றுமை இல்லையே. கேலி செய்யும் எடப்பாடி நிர்வாகிகள்

சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கே ஒற்றுமை இல்லையே. கேலி செய்யும் எடப்பாடி நிர்வாகிகள் அ.தி.மு.க.வை கைப்பற்றும் சசிகலாவின் கடைசி முயற்சியும் தோல்வியை சந்தித்திருக்கிறது. ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்கிற பெயரில் தென்காசி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் தன் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும் சசிகலாவுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் எதுவும் கிடைக்கவில்லை. அ.தி.மு.க தொண்டர்களைச் சந்திப்பதற்கான பிரமாண்டப் பயணம் என அவருடைய ஆதரவாளர்கள் ஆனந்தப்பட்டாலும் பொதுமக்களும், கட்சிக்காரர்களும் அவரை சந்திக்கவே இல்லை. பில்டப் செய்யப்பட்ட கூட்டம் […]
விஜயகாந்துக்கு பத்மபூஷன், ராமதாஸ்க்கு பத்மஸ்ரீயாவது குடுங்க. மோடியிடம் கெஞ்சும் அன்புமணி

இன்று டாக்டர் ராமதாஸ்க்கு 86ம் ஆண்டு பிறந்த நாள் விழா. விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கி கெளரவித்தது போன்று டாக்டர் ராமதாஸ்க்கு இப்போதே பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று மோடி அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறாராம் அன்புமணி. டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அன்புமணி, ‘’ஆயிரம் பிறை கண்டும் அயராத ஆலமரம் மருத்துவர் அய்யா அவர்களின் 86-ஆம் பிறந்தநாளில் சமூகநீதி காக்க உறுதியேற்போம்! அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு இலக்கணமாய் […]
விடுதலைப்புலிகள் தடைக்கு எதிராக வைகோ மனு ஏற்பு, சீமானை காணவில்லை

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்படுகிறது. இந்த முறையும் தடைக்கு எதிராக மனு கொடுத்திருக்கிறார் வைகோ. விடுதலைப்புலிகள் குறித்தும் மாவீரன் பிரபாகரன் குறித்தும் தினமும் பேசிவரும் சீமான் இந்த தடைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள […]

