News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள்! உரிமையாளர்களுக்கு புது உத்தரவு பிறப்பித்த சென்னை மாநகராட்சி!

பரபரப்பான சாலைகள் மற்றும் குறுக்கு தெருக்களில் கால்நடைகள் அதிகளவில் நடமாடுகிறது. அவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் முட்டி தாக்குகிறது. இதனால் சில உயிரிழப்புகளும், பலத்த காயங்களும் ஏற்படுகிறது.     கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் பள்ளி முடித்து தாயுடன் சென்ற சிறுமியை 2 மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கியது. அப்போது மாடுகளிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற நீண்ட நேரம் முயற்சித்து பின்னர் மீட்டனர். இது குறித்த பரபரப்பான […]

திருப்பூரில் அண்ணாமலைக்கு கடைசி கூட்டம்..? பா.ஜ.க.வில் திகுதிகு திருப்பங்கள்

தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை ஆகஸ்ட் 11ம் தேதி திருப்பூரில் பா.ஜக. மாவட்டத் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த கூட்டத்தில் அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து புதிய தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் 28ம் தேதி லண்டன் புறப்பட்டு செல்கிறார். அதற்கு முன்னர் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் […]

ராகுலுக்குப் பயந்து மோடி ஆப்சென்ட்? நிர்மலா சீதாராமனுக்கு செம சூடு

மத்திய நிதி நிலை அறிக்கை குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நேற்று ஆவேசமாக உரை நிகழ்த்தினார். எதிர்க் கட்சிகளின் சார்பில் ராகுல் பேச இருப்பது தெரிந்ததும் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. இதைக் குறிப்பிட்ட ராகுல், ‘நான் பேசுவது தெரிந்தாலே இனி மோடி வரவே மாட்டார்’ என்று வெளிப்படையாகப் பேசினார். அதோடு, ’’இந்தியாவில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. அந்த அச்சம் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளது. பா.ஜ.க ஆட்சியில் […]

வயநாட்டில் மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள். ஆற்றில் மிதக்கும் உடல்கள். நெஞ்சை பிழியும் சோகம்.

கேரள நாட்டின் வயநாட்டில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 300 மி.மீ. மழை பதிவானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா அருகே உள்ள மலைப்பகுதிகளில் இன்று  அதிகாலை 1 மணியளவில் தொடங்கி 3 மணி வரையில் அடுத்தடுத்து நான்கு  நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றாலும் மழையின் காரணமாக […]

2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்! வெண்கலம் வென்ற மனுபாக்கர்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரிசில் கடந்த 26ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச நாடுகளில் இருந்து மொத்தம் 10,714 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 117 விளையாட்டு வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.   இந்நிலையில் இன்று (29ம்தேதி) நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 10 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாக்கர் 3வது இடத்தை பிடித்தார். அதன்படி 2024ம் ஆண்டு ஒலிம்பிக் […]

நீட் தேர்வு எழுதிய மாணவி! பிறந்தநாளில் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை நீட் தேர்வு முறையால் நடைபெறுவதால் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.   சமீபத்தில் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் கூட பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. கடைசியில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது நேர்மையாக நீட் தேர்வை எழுதிய தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.   நீட் தேர்வில் […]

பிரதமர் மோடியை கேடி என்று விமர்சனம்! தயாநிதி மாறனுக்கு வரும் சிக்கல்!

பிரதமர் மோடியை கேடி என்று பகிரங்கமாக விமர்சித்த தி.மு.க.  எம்.பி. மீது கைது நடவடிக்கை பாயும் சூழ்நிலை உருவாகியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2024& 2025 மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு முற்றிலுமாக ஒதுக்கிவிட்டது. ஆந்திரா, பீகாருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில், தமிழ்நாட்டுக்காக எந்த அறிவிப்பும், சலுகையும் வெளியாகாதது அரசியல் களத்தில் பல்வேறு விமர்சனங்கள எழச்செய்தது.   இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சர் […]

அண்ணாமலையை மாத்தினால் அம்புட்டுத் தான். மோடிக்கு ஐ.டி. விங் வார்னிங்

ஆகஸ்ட் மாதம் அண்ணாமலையை அரசியல் படிக்க அனுப்பிவிட்டு, தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், அண்ணாமலையை மாற்றினால் தமிழகத்தில் பா.ஜ.க. அழிந்தே போகும் என்று அவரது ஐ.டி. விங் டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் நிறைய பதிவுகள் வெளியிடத் தொடங்கியுள்ளன. அந்த பதிவுகளில், ‘அண்ணாமலை இல்லையென்றால் ஒருசில தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொள்ளும் நிலை உருவாகிவிடும். அதன் பிறகு […]

புதிய அரசியல் கட்சி தொடங்கும் பிரஷாந்த் கிஷோர். அ.தி.மு.க.வுக்கு வேலை செய்வாரா..?

2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமரவைப்பதற்காக பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் அ.தி.மு.க. தொடர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அவர் தொடங்கி நடத்திவரும், ‘ஜன சுராஜ்’ அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் பிரஷாந்த் கிஷோர் நேரடியாக அடுத்த ஆண்டு பீகார் தேர்தலை சந்திக்க இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஐபேக் எனும் அமைப்பு மூலம் இந்தியாவில் தேர்தல் திட்டமிடுதலுக்கு அடிக்கல் போட்டவர் பிரசாந்த் கிஷோர். பாஜக, ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், […]

9 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள். ஆர்.என்.ரவிக்கு என்னாச்சு?

பலரும் எதிர்பார்க்கப்பட்ட ஆளுநர்கள் நியமனம் நேற்று நள்ளிரவு நடைபெற்றுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 9 மாநிலங்களில் ஆளுநர் மாற்றத்திற்கு உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு சி.பி.ராதாகிருஷ்ணன் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய நியமிக்கப்பட்டுள்ள கே.கைலாசநாதன் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் 18 ஆண்டுகள் பணியாற்றியவர். மேலும் ஓய்விற்கு பின்னரும் 11 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இவரது நியமனம் பலத்த […]