News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

போலி பேராசிரியர்களை பிடிச்சு ஜெயிலில் போடுங்க. சீமான் ஆவேசம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் ஊழலை அறப்போர் இயக்கம் அம்பலபடுத்தியிருந்தது. இதனை கண்டறிய குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாம் தமிழர் சீமான், ‘’அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் நியமன ஊழல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஊழல் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காமல், வழக்கம்போல குழு அமைத்து கிடப்பில்போட்டுள்ள திமுக அரசின் மெத்தனப்போக்கு […]

அண்ணாமலை வசூலை அம்பலப்படுத்தும் திருச்சி சூர்யா. உதயநிதிக்கு இப்படி ஒரு ஆதரவு

அமைச்சர் உதயநிதி கார் பந்தயம் நடத்துவதற்காக கட்டாய நன்கொடை செய்கிறார் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இதற்கு திருச்சி சூர்யா வெளியிட்டிருக்கும் பதிவு செம வைரலாகிறது. திருச்சி சூர்யா இது குறித்து, ‘’Formula 4 Car Race: தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி திமுக பணம் பறிக்கிறது என்று அண்ணாமலை கூறலாமா? வேதம் ஓதுவதற்கு சாத்தானுக்கு தகுதி உண்டா? அண்ணாமலையின் செல்லப்பிள்ளை, பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில துணைத்தலைவராக இருக்கக்கூடிய அலிஷா அப்துல்லாஹ் […]

நிரம்பி வழியும் சவக்கிடங்கு. சவப்பெட்டியான கேரளம். அரசியல் செய்யும் அமித் ஷா… ஓடிவந்த ராகுல்

கேரளத்தில் நடந்திருப்பது தேசியப் பேரிடர் மட்டுமல்ல, உலகளாவியப் பேரிடர். மீட்புப் பணியினர் ஒவ்வொரு நிமிடமும் ஒரு உடல் தோண்டி எடுப்பதும், உயிர் மீட்பதும் நடந்துவருகிறது. சவக்கிடங்குகள் நிரம்பிவழிகின்றன. அடையாளம் காணப்படாமலே உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. பொதுவாக நிலச்சரிவு சில நூறு மீட்டர் வரை தான் பாதிக்கும். ஆனால், வயநாட்டில் ஊரிலிருந்து 7 கீமீ தூரத்தில் நள்ளிரவு 2 மணிக்கு காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாறைகள் சேறு சகதி ஆறாக பெருக்கெடுத்து வழியில் இருந்த பல சிறு சிறு […]

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீர் நெஞ்சுவலி!

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாகவும், காரில் கஞ்சா கடத்தியதாகவும் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   தி.மு.க. அரசை தொடர்ந்து விமர்சித்து வந்ததால்  சவுக்கு சங்கர் கட்டம் கட்டப்பட்டுள்ளார் என்று அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கிடையில் சவுக்கு சங்கர் கைது செய்து அழைத்து வரப்பட்ட கார் விபத்துக்குள்ளானதும், அவரது கையில் மாவுக்கட்டு போட்டது என தொடர்ந்து பரபரப்பு நிலவியது. இதற்கிடையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு […]

வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசின் எச்சரிக்கையை நிராகரித்ததா கேரளா?

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் எங்கு பார்த்தாலும் தற்போது மரண ஓலம் கேட்டு வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 4 மணி முதல் ஏற்பட்ட அடுத்தடுத்த 3 நிலச்சரிவுகளில் 500 குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளது. சூரல்மலை, முண்டக்கை, மெம்ப்பாடி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.   நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மீட்புப்பணி இன்று  தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகிறது. அதன்படி பலி எண்ணிக்கை தற்போது 200ஆக உயர்ந்துள்ளது. […]

தனியார் நிறுவனம் நடத்தும் கார்பந்தயம்! முனைப்பு காட்டும் தி.மு.க.வின் பின்னணி!

தனியார் நிறுவனம் நடத்த உள்ள பார்முலா4 கார்பந்தயம் சென்னையில் ஆகஸ்டு மாத இறுதியில நடைபெற உள்ளது. இதனை நடத்துவதற்காக தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருவது ஏன்? என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் மற்றும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.   தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு (2023) பார்முலா4 கார் பந்தயத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது.   இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 30ம் தேதி தொடங்கும் […]

உதயநிதியின் கார் பந்தயத்துக்கு முரட்டு வசூல்..? ஆதாரம் காட்டும் அண்ணாமலை

அமைச்சர் உதயநிதியின் முயற்சியின் காரணமாக சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் பார்முலா – 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அப்போதே இந்த போராட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இனி, போட்டி நடைபெறாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 முதல் சென்னையில் ரேஸ் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், […]

சீமானின் டோல்கேட் போராட்டம். உடன்பிறப்புகள் கிண்டலோ கிண்டல்

மதுரை மாவட்டம், கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகிறார்கள். அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர் உதயகுமாரும் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினரும் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு கடும் ஆட்சேபம் எழுப்பியிருக்கும் சீமான், ‘கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராடிய நாம் தமிழர் கட்சி உறவுகளை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை வன்மையான கண்டனத்துக்குரியது. திருமங்கலம் பகுதி மக்கள் நீண்ட காலமாக சுங்க […]

நிவாரண முகாம்களில் நிலச்சரிவு, கட்டுக்கடங்காத உயிர்ப் பலி. வயநாடு கொடூரத்துக்கு காரணம் இது தான்.

கேரள மாநிலம் வயநாட்டில்  மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலச்சரிவினால்  வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள்  மண்ணுக்குள் புதைந்து போயின. பேய் மழை, பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்ட மலைச்சரிவால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்களும், பொருள் சேதங்களும் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 178 பேர் இதுவரை பலியாகி இருப்பதாக சொல்லப்படுவது ரொம்பவே குறைவு என்கிறார்கள். ஏனென்றால் தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்துக்கொண்டே இருப்பது பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது. இறந்தவர்களின் […]

ரூ.70 கோடி போதைப் பொருள் கடத்தல்: வசமாக சிக்கிய தி.மு.க. பிரமுகர்!

தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருகட்களை கடத்திய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக எடுக்கப்படும் இந்த சோதனை நடவடிக்கைகளில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்குகின்றன.   அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு மெத்தா பெட்டமைன் எனப்படும் போதைப் […]