ஸ்டாலின் 3 கி.மீ. வாக்கிங். உடல்நிலை வதந்திக்கு அமைதிப் பேரணி பதிலடி

எதிர்க் கட்சியாக இருந்தபோதும், பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் கருணாநிதி நினைவு நாளில் இப்படியொரு அமைதிப் பேரணியை மு.க.ஸ்டாலின் நடத்தியதே இல்லை. இந்த ஆண்டு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது ஏன் என்பதற்குப் பதில் கிடைத்திருக்கிறது. சென்னை அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்திருக்கும் கருணாநிதி சிலையில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை கிட்டத்தட்ட 3 கி.மீ. நடந்தே சென்றுள்ளார் ஸ்டாலின். இதன் மூலம் அவருடைய உடல்நிலை பக்கா ஃபிட் என்பதை […]
வயநாடு நிலச்சரிவு: சேதமடைந்த தற்காலிக பாலம்!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகமான பெய்லி பாலம் சேதமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நீர் மற்றும் சேறு சகதியால் சூழப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சூரல்மலை முண்டகை இடையே நிவாரணப் பணிகள் தொய்வடைந்தன. அதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை ஆற்றை கடந்து செல்ல முடியாத […]
பெட்ரோல் குண்டுவீச்சு! முதலமைச்சரை விமர்சனம் செய்த எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தின் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது என்று ஆளும் […]
தாஜ்மகாலில் இந்து அமைப்புகள் செய்யும் களேபரம்!

மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் கட்டிய காதல் சின்னம் தான் இந்த தாஜ்மகால். காதலர்கள் பெரும்பாலும் தனது துணைக்கு கொடுக்கும் பரிசுகளில் முக்கியப் பங்கு வகிப்பது இந்த தாஜ்மகால் உருவம் பொறித்த பரிசுப் பொருட்கள் தான். காதல் திரைப்படம் என்றால் இயக்குனர் உடனடியாக ஆக்ராவுக்கு படையெடுப்பார்கள். மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்த தாஜ்மகாலுக்குள் ரகசிய அறைகள் உள்ளன என்றும் இதற்கு முன்னர் அந்த இடத்தில் சிவன்கோவில் இருந்தது என்றும் பலர் சர்ச்சைகளை கிளப்பியது அனைவருக்கும் […]
பெண்களை கொச்சைப்படுத்தும் சீமான் தலைமைக்கு ஏற்றவரா..? வெளியேறும் பெண் நிர்வாகிகள்

தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்கு தேர்தலில் 50% இடம் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் சீமானே இப்படி பெண்களை கொச்சைப்படுத்திப் பேசலாமா என்று கட்சிக்குள்ளும் வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள் தோன்றியிருப்பதால், நிறைய பெண் நிர்வாகிகள் வெளியேறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் பேசிய சீமான், ‘’விஜயலட்சுமி என் மேல பாலியல் குற்றம் சுமத்திய பின் தான் தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு என் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இவனுக்குள்ளும் ரொமான்ஸ் இருந்திருக்கு பாரேன் என்று பல பெண்கள் இப்பொழுது எனது fans […]
வைரமுத்துக்கு முத்தமிழ் பேரறிஞர் விருது அவுட். தி.மு.க.வினர் செம ஹேப்பி

கலைஞர் கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை வைரமுத்து ஏற்கக்கூடாது என்று தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சுப.வீரபாண்டியன் வைரமுத்துக்கு நேரடியாகவே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார். இந்த நிலையில், முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை முத்தமிழ் பெருங்கவிஞர் என்று மாறுதல் செய்து பெற்றுக்கொண்டுள்ளார் வைரமுத்து. இதுகுறித்து வைரமுத்து, ‘’பொன்விழாக் காணும் மதுரைத் தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்ற பட்டத்தை எனக்கு வழங்கியது அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டயமும் பொற்கிழியும் வழங்கினார். […]
வங்கதேசத்தில் அடங்காத வன்முறை. இந்தியாவுக்குத் திரும்பும் 1 கோடி இந்துக்கள்?

இந்தியாவிற்கு தப்பிவந்திருக்கும் ஷேக் ஹசீனா இன்னும் இரண்டு நாட்கள் இங்கு தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்பதால் லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஐக்கிய அரபு அமீரகத்திடமும் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த நிலையில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு ஆபத்து நிலவுவதாகவும் அவர்களை இந்தியாவில் குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. வங்க தேசத்தில் இருக்கும் இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என்று அங்கு இஸ்லாமியர்கள் கூறிவந்தாலும் சில இடங்களில் வன்முறை […]
தப்பியோடிய ஷேக் ஹசீனா! இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாரா?

வங்கதேச பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசீனா தப்பியோடியுள்ள நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1971ம் ஆண்டு வங்கதேசத்தில் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் மாணவர்களின் போராட்டம் […]
வயநாடு நிலச்சரிவு: பேரழிவிலும் அதிர்ச்சி சம்பவம்!

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சம்பவம் அனைத்து மாநில மக்கள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 30ம் தேதி அதிகாலை 1 மணியில் இருந்து 3 மணிவரை தொடர்ந்து 4 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வயநாடு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அட்டமலை, வெள்ளரிமலை, பூஞ்சிரித்தோடு ஆகிய குக்கிராமங்களில் என […]
தமிழ்நாட்டில் கனமழை: எந்தெந்த இடங்களில் தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்க கனமழையும், விட்டுவிட்டும் மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், […]

