பிரதமர் மோடி 10ம் தேதி வயநாடு பயணம்!

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு சேதங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்டு 10ம் தேதி வயநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 30ம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தது. அதிகாலை நேரம் என்பதால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினன் மேற்கொண்டுவரும் […]
தாயின் நகைகளை திருடிய 9ம் வகுப்பு மாணவன்! என்ன செய்தான் தெரியுமா?

காதலியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட 9ம் வகுப்பு மாணவன் செய்த காரியம் டெல்லி போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 3ம் தேதி (ஆகஸ்ட்) டெல்லி நஜாப்நகரை சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டில் இருந்த நகைகள் காணவில்லை என்று டெல்லி போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதாவது தனது வீட்டில் இருந்த 2 தங்க சங்கிலிகள், ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு மோதிரம் காணாமல் போனதாக அந்த புகார் மனுவில் […]
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னொரு அவமானம். வீரர்களை விட அதிக அதிகாரிகள் அனுப்பப்பட்ட கொடுமை.

வினேஷ் போகத் விவகாரத்தின் காயமும், வேதனையும் ஆறுவதற்குள் மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் மற்றும் அவருடனான ஒட்டுமொத்த குழுவும் பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. அதேநேரம், வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் பிற ஊழியர்கள் அனுப்பப்பட்ட தகவலும்ம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இந்தியா செலவளித்த தொகை 13.13 கோடி ரூபாய். இந்த பாரீஸ் போட்டிகளுக்கு 33.68 கோடி ரூபாய். இதில் வேதனை என்னவெனில், இந்தியாவின் சார்பில் சென்ற விளையாட்டு வீரர்களின் […]
வினேஷ் போகாட் ஓய்வு அறிவிப்பு. சதி செய்தது அம்பானியின் டாக்டரா?

நூறு கிராம் எடை வித்தியாசம் காரணமாக இறுதிப்போட்டியில் பங்கேற முடியாமல் போனதுடன், வெள்ளிப் பதக்கமும் பறிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், அவரது சதிக்குக் காரணம் என்று அம்பானி மருத்துவமனையின் டாக்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வினேஷ் போகட், “மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001 – 2024 மல்யுத்தத்துக்கு […]
காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்கள்! தேர்தல் தேதி அறிவிப்பு!

செப்டம்பர் மாதம் 3ம் தேதி காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த மத்திய மந்திரிகளான பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதற்கிடையில் தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக மராட்டியம், மத்தியபிரதேசம், அசாம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகாத்!

2024 ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாத் தற்போது பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (ஆக.6) நடைபெற்ற பெண்கள் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் கியூபா நாட்டு வீராங்கனையை எதிர்த்து விளையாடிய வினேஷ் போகாத், 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வானது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் மல்யுத்த வீராங்கனை […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! கைது செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது அஸ்வத்தாமன் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். யார் இந்த அஸ்வத்தாமன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் தனதுவீட்டு கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கட்சி பிரமுகர் என்ற அடையாளத்தையும் […]
வினேஷ் போகத் திடீர் தகுதி நீக்கம். அதிர்ச்சியில் இந்தியா

ஒலிம்பிக் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் இருந்தார். இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை […]
பெண் சிங்கம் வினேஷ் போகத்துக்கு ராகுல் பாராட்டு. மோடிக்கு தரமான பதிலடி

இறுதிப் போட்டியில் தங்கத்திற்கு அருகில் நிற்கும் வினேஷ் போகத்திற்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்திருக்கிறார். ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா போன்ற மாபெரும் தேசத்துக்கு பதக்கப்பட்டியலில் மரியாதைக்குரிய இடம் கிடைக்கவே இல்லை. இதற்குக் காரணம் பிரிஜ்பூஷன் போன்ற பா.ஜ.க. தலைவர்கள் தான் என்பது அம்பலப்பட்டுள்ளது. வினேஷ் போகத் பெற்றிருக்கும் வெற்றி சாதாரண ஒன்று அல்ல. தொடர்ந்து 82 சர்வதேசப் போட்டிகளில் வெற்றியைக் காணாத, நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை, முன்னாள் உலகச் […]
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல். தி.மு.க.வுக்கு நீதிமன்றம் குட்டு.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி, லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், அவர்கள் இருவரையும் விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்த விடுவிப்புக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி […]

