பொன் மாணிக்கவேல் கைது செய்யப்படுவாரா? வீட்டில் சி.பி.ஐ. விசாரணை

சிலை கடத்தல் விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மாஜி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். பொய் வழக்கு பதிவு செய்து சிலைக் கடத்தல் பிரிவு முன்னான் டிஎஸ்பி காதர் பாட்சாவை கைது செய்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அது என்ன வழக்கு..? விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆலப்பட்டியில் கடந்த 2008-ல் ஆரோக்கியராஜ் என்பவர் விவசாய நிலத்தில் ஆறு ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை […]
பத்து நாட்கள் கழித்து வயநாட்டில் பிரதமர் மோடி. பேரிடர் நிதி எவ்வளவு?

நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள நாட்டுக்கு பத்து நாட்களுக்குப் பிறகு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பேரிடரை நேரில் பார்த்து தேசியப் பேரிடராக அறிவித்து நிதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். […]
உதயநிதியின் கார் பந்தயத்துக்கு மீண்டும் ஆப்பு..? உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தியே தீரவேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடத்த இருந்த ரேஸ் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு இம்மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ரேஸ் கார் பந்தயம் விதிமுறை மீறி நடத்தப்படுகிறது என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு தொடுத்துள்ளது. இதனை அவசர வழக்காக பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் […]
சுதந்திர தினம்: பிரதமர் மோடி மக்களுக்கு புது வேண்டுகோள்!

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்கு எக்ஸ் பக்கம் வாயிலாக புது கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. வியாழக்கிழமை சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார், அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கிய வேண்டுகோள் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக […]
மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய். ஸ்டாலினின் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆரம்பம்.

மாணவிகளுக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாய் கொடுக்கிறீர்கள், எங்களுக்கு இல்லையா என்று கேட்ட மாணவர்களுக்காகவே தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆரம்பமாகிறது என்று கோவையில் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் அவர் பேசுகையில், ‘’எல்லா மாணவர்களும் உயர்கல்வி படிக்கனும், நல்ல வேலைவாய்ப்புகளை பெற வேண்டும், இதுதான் என்னுடைய கனவு மாணவர்கள் கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது, அதற்கு வேண்டிய உதவிகளை செய்ய நான் இருக்கிறேன், திராவிட மாடல் அரசு இருக்கிறது’ என்று […]
அண்ணாமலை சொன்னது என்னாச்சு..? மீண்டும் தமிழக மீனவர்கள் கைதுக்கு கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு நியாயம் கேட்பதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மீனவர்களை அழைத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த ஜூன் 16ம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பாண்டில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது […]
பால் கனகராஜ் சம்மனுக்கு ஆஜர். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த கைது பா.ஜ.க. நிர்வாகி..?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியே இன்னமும் நீங்காத நிலையில், பா.ஜக.வின் வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகி இருப்பது கிடுகிடு திருப்பமாக கருதப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக அஞ்சலை, அதிமுக மலர்கொடி உள்ளிட்ட 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் […]
சவுக்கு சங்கரின் உக்கிரத் தாக்குதல் மீண்டும் ஆரம்பம்..? குண்டர் சட்டம் ரத்து

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மற்ற வழக்குகளிலும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில் சவுக்கு சங்கர் வெளியே வரப்போகிறார், முன்பை விட வீரியமாக அவரது தாக்குதல் இருக்கும் என்று ஆதரவாளர்கள் வரவேற்புக்குத் தயாராகி வருகிறார். பெண் போலிசார் குறித்து அவதூறாக பேசியதாக யூட்டியூபர் சவுக்கு சங்கர் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக கன்னியாகுமரி, திண்டுக்கல், […]
கமலுக்குப் பதிலாக பிக்பாஸ் சிவகார்த்திகேயன்..? விடாமல் துரத்தும் சூர்யா, சிம்பு

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் கசப்பான நிகழ்வுகள் நடந்தேறின. அதனால், இந்த ஆண்டு அவர் பிக்பாஸ் தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்தவர் யார் என்று பெரிய குடுமிப்பிடி சண்டையே நடந்துவருகிறது. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. கடந்த சீசனில் சிம்பு தலை காட்டியிருந்தார். அதனால், அவர் நடத்துவார் என்று சொல்லப்பட்டு வந்த நேரத்தில், கமல்ஹாசன் சாய்ஸ் சிவகார்த்திகேயன் என்று […]
இங்கிலாந்து கலவரத்தால் அண்ணாமலை படிப்பு அரோகரா..? குஷியில் தி.மு.க.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. எனவே, அவரை மாற்ற வேண்டும் என்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இம்மாதம் இறுதியில் அண்ணாமலை இங்கிலாந்து நாட்டுக்குப் படிக்கச் செல்வதாகவும் அதுவரை இடைக்காலத் தலைவர் நியமனம் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்படுவதற்கு விரும்புகிறார். எனவே, இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தை சுட்டிக்காட்டி படிப்பை […]

