ஒலிம்பிக்கில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான். இப்படி ஒரு மோசமான சாதனை

கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்தது. இதில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னணி இடம் பிடித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் […]
அதானி விவகாரத்தில் மோடிக்கு ராகுல் நெத்தியடி. பதறும் பா.ஜ.க. பதிலடி

அதானி விவகாரம் என்றாலே ராகுலுக்கு அல்வா சாப்பிடுவது போல் இனிப்பானது. இப்போது, அவருக்கு வசமாகச் சிக்கியிருக்கிறது ஹிண்டர்பர்க் அறிக்கை. அதானி பணப் பரிமாற்ற ஊழலில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதாபி பல்லாயிரக்கணக்கான கோடிகளில் பங்குகளை வைத்திருந்ததாக ஹிண்டர்பர்க் நிறுவனம் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. மேலும், “அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை’’ என்றும் கூறியிருக்கிறது. இந்த விவகாரம் நாடு முழுக்க புயல் எழுப்பியிருக்கும் நிலையில், பா.ஜ.க.வினர் மட்டும் […]
ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அணுகுண்டு அட்டாக். மாதாபி தப்பிக்க வழியே இல்லை

அதானி குழுமத்துக்கும் செபி தலைவர் மாதாபி பக் மற்றும் அவரது கணவருக்கும் இடையிலான முதலீடு குறித்து அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டு அலற விட்டுள்ளது. அதன்படி, அமைப்பான செபியின் தலைவர் திருமதி மாதாபி பக் மீதும் அவரது கணவர் தவால் பக் ஆகிய இருவரும் IIFL IPE Plus Fundல் இவர்கள் இருவரும் முதலீடு செய்துள்ளார்கள். இதில் முதலீடு செய்யச் சொன்னது அனில் அகுஜா, அவர் அதானி குழுமத்தின் இயக்குனர்களில் ஒருவர். இந்த […]
சீமானை கூப்பிடாதீங்க தலைவா..? விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் ரசிகர்கள்

திருச்சியில் நடிகர் விஜய் நடத்தயிருக்கும் மாநாட்டில் நாம் தமிழர் சீமானும் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘நமது கட்சியின் மாநாட்டிற்கு மற்ற கட்சி தலைவர்களை அழைக்க வேண்டாம் தலைவா. இங்கே நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை, மாநாட்டில் புகழ்பவர்கள் பின்னாட்களில் இகழலாம். ஆகவே மாநாட்டில் உங்கள் மீது மட்டுமே லைம்லைட் இருக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்துவருகிறார்கள். விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 10 லட்சம் பேர் திரள வேண்டும் என்று […]
துரை உதயநிதிக்கு கொலை மிரட்டல்..? உண்மை காரணம் இது தானா..?

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தற்போது வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படும் விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்பட தயாரிப்பாளராகத் திகழ்ந்தவர். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்திருக்கும் துரை தயாநிதிக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் வசித்துவந்த […]
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதவி பறிப்பு..? ஜெயலலிதா, உதயநிதி சர்ச்சை பேச்சு.

ஆபாசமாகப் பேசுவதில் தி.மு.க. அமைச்சர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு எதிராக அ.தி.மு.க.வினரும் தி.மு.க. இளைஞர் அணியினரும் கொதித்துப் போயிருக்கிறார்கள். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘’நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவாங்க; ஆனா, அவங்களுக்கு அறிவு இருக்காது. அதெல்லாம் எம்.ஜி.ஆரோடு போய்விட்டது. எம்.ஜி.ஆரை வைச்சிருந்ததாலே ஜெயலலிதா அரசியலுக்கு வர முடிந்தது’ என்று கொச்சையாகப் பேசினார். இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் புயல் வீசியிருக்கிறது. இதுகுறித்து அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் ராஜ் சத்யன், ‘’உலகத் தமிழர்கள் அனைவரும் […]
அதானி – மாதாபி பூரி கூட்டுச்சதி பூகம்பம்..? ஹிண்டன்பர்க் அறிக்கையை வேடிக்கை பார்க்கும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை.

கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச் சந்தையில் அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஓர் அறிக்கை வெளியிட்டது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எடுத்துக்கொண்டு தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால், அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. சிபிஐ அல்லது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்பம் கிளப்பியிருக்கிறது ஹிண்டன்பர்க். அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் […]
பெண் பயிற்சி மருத்துவர் கொலை! பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் அம்பலம்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ளது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் இருந்து முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். அரை நிர்வாணமாக கிடந்த பெண் மருத்துவரை பார்த்த சக மாணவ, மாணவிகள் உடனடியாக இது குறித்து […]
வினேஷ் போகாட்டுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்! வலுக்கும் ஆதரவு!

33வது ஒலிம்பிக் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் இந்திய மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகாட் தனக்கு நடந்த அநீதியால் அதிருப்தியடைந்து ஓய்வை அறிவித்தார். பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கியூபா நாட்டு வீராங்கனையை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தார். கடந்த 8 மணி நேரத்தில் 3 சர்வதேச வீராங்கனைகளை வெற்றி கண்ட வினேஷ் போகாத் அமெரிக்க […]
வி.ஜே.சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேம்நாத்துடன் விடுவிக்கப்பட்ட 7 பேர்!

சின்னத்திரை நடிகையும் விஜேவுமாக இருந்த சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சித்ரா, கோழை கிடையாது. அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கருத்து தெரிவித்தனர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த […]

