News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

வசமாக சிக்கிய தில்லுமுல்லு தேவநாதன். அப்ரூவரானால் அண்ணாமலைக்கும் ஆபத்து..?

பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். 50 கோடி வரை மோசடி நடைபெற்றதாக 140-க்கும் மேற்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர். இவர் கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் இவரிடம் பெரும் நிதி வாங்கிக்கொண்டே தேர்தலில் நிற்க அண்ணாமலை அனுமதி கொடுத்ததாகக் கூறப்பட்டது. இத்தனைக்கும் […]

ஆளுநர் விருந்தில் ஓ.பி.எஸ்.சுடன் அ.தி.மு.க. பங்கேற்பு.. புதிய கூட்டணிக்கு அச்சாரமா?

சுதந்திர தினத்தையொட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்வது மரபு. ஓ.பன்னீருக்கு ஆதரவாக இருப்பதும் முக்கியத்துவமும் கொடுக்கும் ஆளுநர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்க இருப்பதாக வந்திருக்கும் செய்தி தொண்டர்களை விரக்தியடையச் செய்திருக்கிறது. நாளை 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதை தொடர்ந்து அன்று மாலை அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு தெரிவிக்கும் […]

சவுக்கு சங்கருக்கு நல்ல நேரமடா… கை கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி?

இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் சிக்கியிருக்கும் சவுக்கு சங்கருக்கு சவுக்கு சங்கருக்கு மீண்டும் இடைக்கால நிவாரணம் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம். அனைத்து வழக்குகளிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சவுக்கு சங்கர், ‘என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு தி.மு.க அரசு இருக்கிறது. அதனால்தான் என் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது” என்று ஆவேசம் காட்டினார். இதையடுத்து […]

இதுக்கே பயந்துட்டாங்களா..? சீமான் கட்சியினருக்கு அவசரக் கட்டளை.

சவுக்கு சங்கருக்கு மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டிருக்கிறது. சீமான் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சீமான் கட்சியினர் கைது செய்யப்பட்டதும் ஒட்டுமொத்த நாம் தமிழர் கூடாரமும் கதிகலங்கிப் போயிருக்கிறது. இனிமேல் எச்சரிக்கையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கட்சி கட்டளை போட்டிருக்கிறது. சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட நேரத்தில் அவரது செல்போனில் இருந்து மயிறு, பிசிறு போன்ற ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில், திருச்சி எஸ்.பி. வருண்குமார் பற்றி சீமான் மேடையில் எக்குத்தப்பாக […]

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் போலீஸ் எஸ்.ஐ.

தப்பிச்சென்ற பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.யின் துணிகர செயலை சென்னை காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டினார்.   ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி வருகின்றனர்.   அந்த […]

விஜய் கட்சியின் ஆரம்பமே கத்திக்குத்து. சினிமா பாணியில் அடிதடி, பஞ்சாயத்து

தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அத்தனை கட்சியிலும் பதவி வாங்குவதற்கும் தங்கள் எல்லையை ஆட்சி புரியவும் பெரிய அக்கப்போரே நடக்கும். இந்த விவகாரத்தில் அவ்வப்போது எல்லை மீறி கொலை நடக்கும். ஆளும் தி.மு.க. உட்கட்சி பூசலுக்கு அதிகாலை வாக்கிங் படுகொலை படு ஃபேமஸ். இந்த நிலையில் இன்னமும் கட்சிக்கு கொடியைக் கூட அறிமுகம் செய்யாத நிலையில் நடிகர் விஜய்யின் கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல் நடந்திருப்பதும் கத்திக்குத்து நடந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் படங்களில் வன்முறை கொடி […]

செந்தில் பாலாஜி ரிலீஸுக்கு உதயநிதியின் துணை முதல்வர் பதவி வெயிட்டிங்… செம அரசியல் கணக்கு

  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை உதயநிதி தலைமையில் வெல்வதற்கு தி.மு.க. அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதனாலே துணை முதல்வர் பதவி வழங்கப்படும் முடிவில் இருக்கிறார்கள். வரும் 19ம் தேதி பதவியேற்பு விழா இருக்கலாம் என்று சொல்லப்படும் நிலையில், செந்தில்பாலாஜி வெளியே வந்ததும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் நேரத்தில் தான் உதயநிதிக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது. அமலாக்கத்துறை வழக்கில் சமீபத்தில் டெல்லி அமைச்சர் மனீஷ் சிசோடியாவுக்கு கிட்டத்தட்ட 17 […]

கோர்ட்டாவது கூந்தலாவது…. சவுக்கு சங்கருக்கு அடுத்த ரவுண்ட் குண்டர் சட்டம்.

பெண் போலீஸார் மீது அவதூறு குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பல்வேறு ஊர்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெவ்வேறு ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பதிவு செய்யப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பியதான குற்றச்சாட்டில் தான் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் […]

நடிகர் ரஞ்சித் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்!

ஆணவக் கொலை குறித்து நடிகர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.   கடந்த 9ம் தேதி வெளியான கவுண்டம்பாளையம் படத்தை நடித்து இயக்கியுள்ளார் ரஞ்சித். 90ஸ் கால நடிகரான இவர் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவுண்டம்பாளையம் இசை வெளியீட்டு விழாவில் நான் சாதிவெறியன்தான் என்று வெளிப்படையாக பேசி செய்தியாளர்கள் சந்திப்பை களேபரப்படுத்தினார். நாங்கள் பிள்ளைகளை […]

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீடு! மு.க.ஸ்டாலின் தலைமையில் விழா!

வருகிற 18ம் தேதி (ஆகஸ்ட்) கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணய வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நூற்றாண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக மேற்கொள்ள எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் மத்திய பாதுகாப்புத்துறை […]