விஜய் கட்சிக் கொடியில் யானைக்கு ஆபத்து..? பகுஜன் சமாஜ் கடும் எச்சரிக்கை.

உலகமெங்கும் உள்ள தோழர்களின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம், கொடியேற்று விழா இன்று பனையூரில் சிறப்பாக அரங்கேறியுள்ளது. மஞ்சள் கலரில் வாகை மலர் மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவப்பு மஞ்சள் நிறமும் இரண்டு யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கொடியேற்றி வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை நடிகர் விஜய் எடுத்துக்கொண்டார். அப்போது அவர், ‘’நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி […]
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்! விஜய் அறிக்கையால் குஷி!

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், கட்சிக் கொடி அறிவிப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. சரித்திரதின புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படிப்பட்ட வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024ஆகஸ்டு 22. தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும், மாறப்போகும் […]
சி.ஐ.எஸ்.எப். கட்டுப்பாட்டுக்குள் வந்த கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை!

மேற்குவங்காளம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெண்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய அளவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி கிடையாது. பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி பெண் மருத்துவரின் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது […]
அண்ணாமலைக்கு இம்புட்டுத் தான் மரியாதையா..? அரைவேக்காடு என்று கிண்டலடிக்கும் செல்லூர் ராஜூ.

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதிகள் உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு குறித்து வெளியாகி இருக்கும் படம் சனாதனத்தின் வெளிப்பாடு என்று அவரது ஆதரவாளர்களே கொந்தளிக்கிறார்கள். அண்ணாமலையை தரையில் அமர வைத்து ஆசிர்வாதம் தரலாமா… தன்மானமுள்ள அண்ணாமலை இதற்கு எப்படி அனுமதிக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த நிலையில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவும் அண்ணாமலையை அரைவேக்காடு என்று கிண்டல் அடித்திருக்கிறார். தி.மு.க.வுக்கு எதிராக தினம் ஒரு குற்றச்சாட்டு கூறிவந்தார் தமிழக பா.ஜ.க […]
ஜெய் ஷாவுக்கு ஐ.சி.சி. யோகம் அடிச்சாச்சு. ராகுல் காந்தி ரியாக்ஷன் என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சஷாங்க் மனோகர் ஆகியோர் பதவி வகித்திருக்கும் நிலையில், ஐந்தாவது இந்தியராக பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்ட நேரத்திலேயே அதிகாரத்தின் மூலம் அந்த பதவிக்கு வந்ததாக எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில், ஐ.சி.சி. சேர்மனாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போது […]
ஆட்டம் காணும் மம்தா பானர்ஜியின் ஆட்சி! டெல்லி விரைந்த ஆளுநர்!

கொல்கத்தா முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவத்துறை மட்டுமல்லாமல் பொது மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதால் இது நாடு தழுவிய போராட்டமாக மாறியுள்ளது. நான் தான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தேன் என்று இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 33 வயதான சஞ்சோய் ராய், திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியின் உச்சம். அதோடு என்னை தூக்கில் […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குனர் மனைவியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை!

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் பிரபல இயக்குனரின் மனைவி சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அரங்கேறியதுதான் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகாலை. கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி சென்னை பெரம்பூரில் புனரமைக்கப்பட்டு வரும் தனது வீட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்த கொலையாளிகள் சரமாரியாக […]
தனியார் பள்ளிகள் இயக்குனரகம் திடீர் எச்சரிக்கை! என்னவென்று தெரியுமா?

தனியார் பள்ளிகளுக்கு திடீரென்று தனியார் பள்ளிகள் இயக்குனரம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பலரின் ஆதரவை பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் என்.சி.சி. பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சில மாணவிகளை காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான என்.சி.சி. மாஸ்டர் சிவராமன் பாலியல் வன்கொடுமை […]
வாக்காளர் பட்டியலில் தி.மு.க. சதி வேலை..? அ.தி.மு.க. போர்க்கொடி

அதிகாரிகள் துணையுடன் அ.தி.மு.க.வுக்கு அதிக வாக்கு வங்கி உள்ள தொகுதிகளிலும் வார்டுகளிலும் வாக்காளர் பட்டியலில் திமுக சதி வேலை செய்திருப்பதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியிருக்கிறது. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி/ஆணையர் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் […]
3 பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்..? போக்சோ சிவராமனுக்கு ரகசிய நிதி வழங்கிய சீமானுக்கு எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக இருந்த சிவராமன் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில் சிவராமன் மனைவிக்கு நாம் தமிழர் கட்சியில் இருந்து தற்போது ரகசியமாக நிதி உதவி அளிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி உலாவருகிறது. இந்த் செய்தி அந்த கட்சியினரிடமே கரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவராமன் என்.சி.சி. முகாமில் வைத்து சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் என்.சி.சி. சார்பில் எந்த முகாமும் நடத்தப்படவில்லை என்று செய்தி வெளியாகியிருக்கிறது. […]

