தமிழகத்துக்கு டாட்டா… அமெரிக்க நிகழ்ச்சி நிரலுடன் ஸ்டாலின் உருக்கமான கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவுக்குப் பயணமாகும் நிலையில், ‘கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கும்’ என்று உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார். இன்று ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘முந்தைய ஆட்சிக்காலத்தில் தேங்கிக் கிடந்த தொழில்வளர்ச்சியை மீட்டெடுத்து, அதற்கேற்ற வகையில் முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழிற்கட்டமைப்புகள் வாயிலாக, மாநிலத்தில் பரவலான அளவில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது […]
உதயநிதியின் கார் பந்தயத்துக்கு மீண்டும் ஆப்பு..? நீதிமன்றத்தில் அவசர வழக்கு

உதயநிதியின் கனவான சென்னையில் ஃபார்முலா-4 ரேஸ் பந்தயம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும், இதனை நடத்துவதில் உதயநிதி உறுதியாக இருக்கும் நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்துவதற்கு கடந்த டிசம்பர் மாதமே ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், புயல் காரணமாகவும் கடுமையான எதிர்ப்புகள் காரணமாகவும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் […]
அண்ணாமலை உருவப்பொம்மைக்கு செருப்படி. எடப்பாடிக்கு களம் இறங்கும் சீமான்.

எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. கூவத்தூரில் என்னவெல்லாம் நடந்தது என்று தெரியாமா? பதவியை ஏலத்தில் எடுத்து தவழ்ந்து சென்று காலில் விழுந்த கதை தெரியும் என்று பேசியதற்கு தமிழகம் முழுக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த பேச்சுக்கு மாஜிக்கள், ‘’யார் காலிலும் விழுந்து பதவிக்கு வரவேண்டிய அவசியம் அதிமுகவில் இல்லை. கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்தோம். பாஜக மாதிரி மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை நாங்கள் விலைக்கு […]
உல்லாச மாளிகையான ஜெயில்! பரபரப்பு வீடியோ!

தனது ரசிகர் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் கன்னட நடிகர் தர்ஷன் வீடியோ காலில் பேசியதும், சிகரெட் புகைத்தபடி சக நடிகர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிறைச்சாலையில் வி.ஐ.பி. கைதிகளுக்கு சகல வசதிகளும் கிடைக்கிறதா என்ற சந்தேகம் மேலோங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை நடத்த டிஐஜி தலைமையிலான விசாரணைக்குழுவை சிறைத்துறை ஐ.ஜ. அறிவித்திருந்த நிலையில், சிறை ஜெயிலர் உள்ளிட்ட 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் […]
நாளை ஸ்டாலின் அமெரிக்கா பயணம்… இன்று அமைச்சர்களுடன் அவசர மீட்டிங்கில் நடந்தது என்ன?

முதலீடுகள் ஈர்ப்பதற்காக நாளை அமெரிக்கா புறப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் சீனியர் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில் இன்று கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசிய ஸ்டாலின், ‘’இப்போது மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறோம். எந்தக் காரணம் கொண்டும் வரம்பு மீறி […]
சீமான், சாட்டை துரைமுருகனுக்கு வருண்குமார் சம்மன்..? திரள்நிதிக்கும் வரதட்சனைக்கும் சண்டை.

காக்கிச் சட்டைக்கு என ஒரு கண்ணியம் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவருக்கு என ஒரு மதிப்பு இருக்கிறது. இந்த எல்லைகளைத் தாண்டி இரண்டு பேரும் லோக்கல் ரவுடிகள் போன்று கட்டி உருள்வது வேடிக்கையாக மாறியிருக்கிறது. வருண்குமார் எஸ்.பி. சமூகவலைதளத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று பிரச்னையை முடித்துவைத்தார். அதன் பிறகும் சீமான் அவரை வம்பிழுக்கும் வகையில், ‘’காக்கிச் சட்டையைப் போட்டுக்கொண்டு மோதக்கூடாது. சட்டையைக் கழட்டிவிட்டு வா’’ என்று பேசினார். இதற்கு வருண்குமார், ’’பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக […]
எடப்பாடி பழனிசாமி கொலைக் குற்றவாளி..? வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை

எடப்பாடி பழனிசாமி கொலைக் குற்றவாளி..? வம்புக்கு இழுக்கும் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்குமான மோதல் எக்குத்தப்பாக மாறிவருகிறது. எடப்பாடி பழனிசாமியை ஒரு கொலைக் குற்றவாளி என்று பொதுக்கூட்டத்தில் பேசி பெரும் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கிறார் அண்ணாமலை. சென்னை பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ‘’ இன்று திமுக பழனியை நோக்கிப் படையெடுக்கிறது. பழனி முருகன் அசாதாரணமான கடவுள். ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகப் பெருமான், அரசியலுக்காகப் பயன்படுத்தினால், மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவார். சனாதன தர்மத்தை அழிப்போம் என்று […]
கேப்டன் ஆலயத்தில் விஜயகாந்த் சிலை திறப்பு. கட்டிப்பிடித்த பிரேமலதா, தேம்பி அழுத மகன்கள்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முழு உருவச்சிலையைத் திறந்து வைத்தார். விஜயகாந்த் உருவச்சிலையைத் திறந்து வைத்ததும் உணர்ச்சி மேலிட, சிலையைக் கட்டித் தழுவி கண்ணீர் சிந்தினார். அதைக் கண்டு விஜயகாந்த் மகன்கள் இருவரும் கண்ணீர் சிந்தினார்கள். தே.மு.தி.க. தலைமையகம் இனி கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும் என்ற அறிவிப்பையும் பிரேமலதா வெளியிட்டார். வறுமை ஒழிப்பு தினமாக விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் […]
முருகன் மாநாட்டில் தி.மு.க.வுக்கு என்ன வேலை..? கம்யூனிஸ்ட் போர்க்கொடி

‘கடவுள் இல்லை, கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி’ என்ற சொன்ன ஒரு கூட்டம் தான் இன்றைக்கு முருகப்பெருமானின் மாநாட்டை நடத்துகிறார்கள். அவர்களுடைய நோக்கம் ஆன்மிகம் அல்ல, ஓட்டு வங்கி தான் என்று பா.ஜ.க.வினர் எதிர்ப்பு காட்டியிருக்கும் நிலையில், பழனியில் அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாடு 2024 என்ற பெயரில் ஒரு மாபெரும் கொண்டாட்டத்தை இந்து அறநிலையத் துறை நடத்தி வருகிறது. தீபாவளி பண்டிகைக்குக் கூட வாழ்த்து சொல்லாத ஸ்டாலின், இந்த விழாவுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின், […]
வருண்குமார் எஸ்.பி.க்கு சீமான் மீண்டும் சவால்… கைது எப்போது?

எக்ஸ் தளத்தில் இருந்து வருண்குமார் எஸ்.பி. வெளியேறியது குறித்து நாம் தமிழர் சீமான் மீண்டும் எக்குத்தப்பாக பதில் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கொள்ளிக்காட்டில் உள்ள சோழர் கால சிவாலயமான பொங்கு சனீஸ்வரர் திருக்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று அதிகாலையில் நேரில் சென்று வழிபட்டார். இங்கு கோயிலில் சீமானை சந்திப்பதற்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு காளியம்மாள் வந்திருந்தார். இது குறித்து சீமான் பேசுவார் என்று […]

