ஹெச்.ராஜாவுக்கு இந்த அவமானம் தேவையா..? ஓவர்டேக் செய்யும் அண்ணாமலை

லண்டனுக்குப் படிக்கப்போயிருக்கும் அண்ணாமலை கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில், ‘யாரும் சரியாக உழைக்கவில்லை, கடுமையாக உழைக்க வேண்டும்’ என்று ஹெச்.ராஜாவை ஓவர்டேக் செய்து வீடியோ வெளியிட்டிருப்பது சீனியர்களை கொதிக்க வைத்திருக்கிறது. அண்ணாமலை திரும்பிவருவதற்குள் கட்சிப் பணியில் விறுவிறுப்பைக் காட்டி அரசியல் மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்று ஹெச்.ராஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக அமித்ஷா தொடங்கி அத்தனை மூத்த தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். மேலும் உறுப்பினர் சேர்க்கையில் சாதனை படைத்துவருவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். […]
திருமாவளவன் அல்ல அடிமைவளவன்… அ.தி.மு.க. கோபத்துக்குக் காரணம் என்ன?

.மு.க. கூட்டணியை உடைத்துக்கொண்டு திருமாவளவன் வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க.வினர் திடீரென அவருக்கு ஆதரவாக நின்று உரக்கக் குரல் கொடுத்தார்கள். ஆனால், திருமாவளவனின் கோபம் ஒரே ஒரு கொடி ஏற்றுவதற்கு அனுமதி கிடைக்காதது என்று தெரிந்ததும் அடிமைவளவன் என்று சமூகவலைதளத்தில் கடுமையாகத் தாக்குதல் நடத்திவருகிறார்கள். 1991 ஏப்ரல் 14 ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகளின் முதல் கொடியை மதுரை கோ புதூரில் திருமாவளவன் ஏற்றி வைத்தார். அந்த கொடிக் கம்பத்தை 62 அடி உயரத்திற்கு […]
சுசித்ராவை இப்படிச் சொல்லிட்டாரே வைரமுத்து..! ஷாம்பு பாட்டிலுக்குப் பதிலடி

சினிமாவில் பொம்பள பயில்வான் ரங்கநாதன் என்று பாடகி சுசித்ராவைச் சொல்கிறார்கள். அவருக்கு பட வாய்ப்புகள் மற்றும் பாடல் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு மீடியாவுக்கும் சென்று பேட்டி கொடுத்து பணம் சம்பாதிப்பதை தொழிலாக செய்துவருகிறார். கமல் தொடங்கி தனுஷ், ஜெயம் ரவி விவகாரம் வரையிலும் பலருடைய அந்தரங்கத்தைப் புட்டுப்புட்டு வைத்து வருகிறார். இந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் சிக்கியிருக்கிறார். பாடகி சின்மயி நீண்ட காலமாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிவருகிறார். இத்தனை காலமும் சின்மயிக்கு […]
சரண்டரான எஸ்.பி.வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி லேட் ரியாக்ஷன். இது தான் காரணமா?

மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வுக்கும் மறைமுக ஆதரவு கொடுத்துவருகிறார் எஸ்.பி. வேலுமணி என்று ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே கொங்கு பகுதியில் உலவுகிறது. இதை உறுதிபடுத்துவது போன்று எடப்பாடியை வேலுமணி அடிக்கடி சந்திப்பதும் இல்லை. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்த விவகாரம் இரண்டு நாட்கள் பரபரப்பாக ஓடிய நிலையிலும் அதிகாரபூர்வமாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவிக்கவில்லை. வேலுமணியை அ.தி.மு.க. கை கழுவி விட்டதாக செய்தி பரவத் […]
விஜய் புதிய மநாட்டுத் தேதிக்கும் எதிர்ப்பு… இப்படி பண்றீங்களேப்பா..

கோட் படத்தை பிரமாண்டமாக வெற்றிக் கொண்டாட்டத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கோட் படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. அதோடு இம்மாதம் 23ம் தேதி நடத்த திட்டமிட்டுருந்த மாநாட்டுக்கு காவல் துறை இழுத்தடித்தது. எனவே விஜய் அப்செட் ஆனதால் மாநாடு தள்ளிப் போகும் சூழல் உருவானது. அடுத்த தேதி எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அக்டோபர் 27ம் தேதியை அறிவித்திருக்கிறார். இந்த தேதிக்கும் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது. இன்று விஜய் […]
100 யூனிட் மின்சாரத்துக்கு விஞ்ஞான முறையில் தி.மு.க. ஆப்பு..? அதிர்ச்சியில் மக்கள்

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மின்சாரக் கணக்கெடுப்பை மாதம் ஒரு முறை என்று கொண்டுவருவோம் என்று கூறிய தி.மு.க. அரசு இது வரையிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம், 100 யூனிட் மின்சாரப் பயனாளிகள் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு தி.முக. விஞ்ஞான முறையில் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து டி.டி.வி.தினகரன், ‘’தமிழகத்தில் ஒரே பெயரில் மற்றும் ஒரே வளாகத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து, தனித்தனியாக வழங்கப்பட்டு வந்த 100 யூனிட் […]
அமெரிக்க பாணியில் இந்திய அதிபர் ஆகிறார் மோடி..? ஒரே நாடு ஒரே தேர்தல் வில்லங்கம்

மோடிக்கு 75 வயது நெருங்குகிறது. பா.ஜ.க. கட்சி விதிகளின் படி 75 வயதுக்கு மேல் ஒருவர் பதவியில் இருக்க முடியாது. அதேநேரம், வேறு பதவியில் அவர்களை அமர்த்த முடியும். எனவே, மோடியை அடுத்து இந்திய அதிபர் ஆக்கும் வகையிலே ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதாக எதிர்க் கட்சிகள் கொதிக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல்களை ஒரு கட்டமாகவும் அது நடந்து முடிந்து 100 நாட்களுக்குள்ளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற முடிவை மத்திய […]
பளிச்சென்று பேசிய அமைச்சர் உதயநிதி! தொண்டர்கள் பெருமிதம்!

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மரியாதை செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பளிச்சென்று பதில் அளித்துள்ளார். தமிழகத்தின் துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார் என்று சமூகவலைதளங்களில் சில மாதங்களாவே பேசப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் நேற்று (செப்.17) நடந்து முடிந்த தி.மு.க.வின் பவளவிழாவில் அதற்கான கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் […]
18 மணிநேரம் தொடர்ந்து வேலை! உணவு டெலிவரி ஊழியரின் சோக முடிவு!

சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் வேலை பார்த்த உணவு டெலிவரி ஊழியர் பைக்கில் தூங்கியபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எட்டு எட்டாக மனித வாழ்க்கையை பிரிக்க வேண்டும் என்று பாட்ஷா திரைப்படத்தில் வருகிற வரிகளை இப்படியும் பயன்படுத்தலாம். அதாவது 8 மணி நேர வீட்டு வேலை, 8 மணி நேர அலுவலக வேலை கடைசி 8 மணிநேரம் உறக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒரு எட்டு குறைந்தாலும் அது மனிதனின் […]
காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் ஏன்? போலீஸ் விளக்கம்!

போஸ்வெங்கட் இயக்கத்துல விமல், சாயாதேவி நடிப்புல ரெடியாகியிருக்கிற படம் தான் சார். 1980ஸ் கால கட்டத்த மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கிற இந்த படத்துல 2வது முறையா விமல் ஆசிரியர் கதாபாத்திரத்துல நடிக்கிறாரு. காதல், காமெடி, சென்டிமெண்ட், சண்டைக்காட்சிகள்னு மொத்த பேக்கேஜா ரெடியாகி இருந்த படத்துக்கு மியூசிக் சித்துகுமார். சார் படத்தோட ஆடியோ லாஞ்ச் ரொம்ப சிறப்பா நடந்துச்சு. இதுல விஜய்சேதுபதி, வெற்றிமாறன், சரவணன்னு பலர் கலந்துக்கிட்டாங்க. அப்ப பேசிய விஜய்சேதுபதி, சரவணனை பாத்து அழகா இருந்தீங்கன்னு […]

