மழையைத் தடுக்க விஜய் யாகம்..? அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட் வில்லங்கம்

இன்னும் மூன்றே நாட்களில் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடக்கயிருக்கும் நிலையில், 27ம் தேதி மழை வரக்கூடாது என்று விஜய் கட்சியினர் யாகம், பூஜை நடத்தியது வில்லங்கமாக மாறிவருகிறது. நடிகர் விஜய்யும் வீட்டில் மழையைத் தடுக்க பிரத்யேக யாகம் நடத்தியதாகப் புகார் சொல்கிறார்கள். வரும் 27ம் தேதி விக்கரவாண்டியில் நடக்க இருக்கும் விஜய் மாநாட்டுச் செய்திகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோருடன் நடிகர் விஜய் கட் அவுட் வைக்கப்பட்டது […]
வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை பிரியங்கா தாக்கல் செய்தது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே அவர் எம்.பி. பதவியில் நீடிக்க முடியும் என்பதால் அவர் தனது வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு […]
தீபாவளி பண்டிகை: தாம்பரம்- நெல்லைக்கு சிறப்பு ரெயில்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். படிப்பு, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கியுள்ளனர். பண்டிகையை சொந்த […]
எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க. மிரட்டுகிறதா..? சேலத்திலும் ரெய்டு

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் இருந்துவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலையைத் தொடரவிரும்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து கூட்டணியில் சேர்ப்பதற்காகவே சேலம் இளங்கோவன் மற்றும் வைத்திலிங்கம் ரெய்டுக்கு ஆளாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எடப்பாடியின் வலது கரமாக சேலம் இளங்கோவன் இயங்கிவருகிறார். திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்ஐடி காலேஜ் ஆப் அக்ரிகல்ச்சர் அண்ட் கல்லூரி ஆர்.இளங்கோவனின் மகன் பீரவின் குமார் தலைமையில் இயங்கி வருகிறது. இங்கு திருச்சி வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு […]
வசூல் வேட்டையா… கூட்டணி மாற்றமா..? திருமாவளவன் கட்சியில் பிரமாண்ட மாற்றம்

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் இருக்கிறது. குறிப்பிட்ட மாவட்டத்தில் இவர்கள் தான் சகல அதிகாரத்துடன் திகழ்வார்கள். தங்களுக்குக் கீழ் இருக்கும் சகல நிர்வாகிகளுக்கும் பொறுப்பு வாங்கிக்கொடுத்து, அதில் வசூல் செய்து, அவர்களுக்கும் கட்சிக்கும் செலவழிப்பார்கள். முக்கியக் கட்சிகளில் எல்லாம் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இப்போது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் […]
பன்னீருக்கு துரோகம் செய்ததால் வைத்திலிங்கத்துக்கு ரெய்டு..? களம் இறங்கிய அமலாக்கத்துறை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இருக்கும் ஒரே பிரபலமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியானது. இதனால் கடுப்பான ஓபிஎஸ் பா.ஜ.க. மூலம் வைத்திலிங்கத்துக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ரெய்டு நடப்பதாக பரபரப்பு எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் இப்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்டு வரும் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் இடம்பிடித்துள்ளார். இவர் 2011-16 கால அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற […]
புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை: 3 இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்!

புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை வா வா என்று அழைத்து வீடியோ எடுக்க முயற்சித்த 3 இளைஞர்களை சிறுத்தை பாய்ந்து வந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியபிரதேசத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு ஜெய்த்தூர் காடுகளில் உதவி சப்இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஷா (வயது 23) மற்றும் நந்தினி சிங் (வயது 25) ஆகிய மூவர் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் 50 முதல் 60 பேரும் சுற்றுலா […]
ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்! முதல்வர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை முதல் இல்லத்தரசிகளுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு தீபம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, தீபாவளி முதல் ஆண்டுதோறும் 3 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டுச்செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட […]
த.வெ.க.மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம், விக்கிரவாண்டி வி சாலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் வரக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அன்புக்கோரிக்கை வைத்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்னதாக மாநாடு நடைபெற உள்ளது என்பதாலும், இது மழைக்காலம் என்பதாலும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உத்தரவுப்படி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் […]
இர்பானை மன்னிக்க முடியாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்!

சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல இர்பானை மன்னிக்கவே முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபல யூடியூபர் தன்னோட மனைவி ஆலியாவை கடந்த ஜூலை மாதம் பிரசவத்திற்காக அனுமதித்தார். அதன்படி ஜூலை 24ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிரசவ அறைக்குள் மனைவியுடன் இருந்த இர்பான் அங்கு நடக்கும் சிகிச்சையை தன்னுடன் அழைத்து சென்ற வீடியோகிராபரை வைத்து வீடியோவாக பதிவு செய்தார். […]

