சோழிங்கநல்லூர் தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன்..? இபிஎஸ் சூசக அறிவிப்பு

நேற்றைய தினம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். அதோடு அவர் இபிஎஸ்க்கு தங்க முலாம் பூசப்பட செங்கோல் வழங்கினார். இதையடுத்து இந்த தொகுதியில் தமிழிசை நிற்பதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ் கடந்த 5 கட்டங்களில் 175 தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். ஆறாவது கட்டமாக நேற்று திருப்போரூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளில் எழுச்சியுரை […]
பாஜவுக்கு 23 சீட், பாமகவுக்கு 23. எடப்பாடிக்கு கூட்டணி கொந்தளிப்பு

வரும் 2026 தேர்தலில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் கேட்போம், 50 தொகுதிகளில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றெல்லாம் கடந்த சில நாட்களாக நிலவிவந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 23 சீட் என்று அதிரடி காட்டியிருப்பது பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு விவரம் தொடர்பாக அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு […]
இபிஎஸ் 20 பியூஸ் 40. முதல் மீட்டிங்கில் பன்னீருக்கு முடிவுரை..?

2026 தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயல் தலைமையில் கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் தொடங்கியது எஸ்.ஐ.ஆர். தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவாவில் இருப்பதால், இக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங்கை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீலா பேலஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல். கடந்த 2021 தேர்தலில் […]
காந்தி திட்டத்துக்கு மூடு விழா..? காங்கிரஸ் போராட்டம் எடுபடுமா.?

காந்தியின் பெயரில் நடைபெற்றுவந்த 100 நாள் வேலைத் திட்டத்துக்கு புதிய பெயர் சூட்டி நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றிவிட்டது. இதற்கு அதிமுக துணை போயிருக்கிறது. விவசாய சட்டம் போன்று இதனை வாபஸ் பெறுவதற்குப் போராடுவோம் என்று காங்கிரஸ் கொதிக்கிறது. ஆனால், எடுபடுமா என்பதுதான் விடை தெரியாத கேள்வி. காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை […]
வேட்புமனுவுக்கு மல்லுக்கட்டு. இபிஎஸ் வியூகத்துக்குத் தடுமாறும் பாஜக

யாரும் எதிர்பாராத வகையில் திடீரென வேட்புமனு விநியோகத்தைத் தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. முதல் நாளில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை வாங்கிச் சென்றதைக் கண்டு பாஜக பதறி நிற்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய சட்டப்பேரவைகளுக்கு பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், விருப்பமனு வழங்க ஏதுவாக விருப்பமனு விநியோகம் தொடக்க நிகழ்ச்சி, சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் பொது மற்றும் தனி தொகுதிகள் அனைத்துக்கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்களை […]
ஸ்டாலினை மிரட்டிய சர்வே. சீமானுக்கு இத்தனை தொகுதியா..?

தேர்தலும் சர்வேயும் பிரிக்கவே முடியாத ஒன்று. சர்வே முடிவுகள் சாதகமாக இருக்கும்போது மட்டும் நம்பிக்கை வைக்கும் கட்சிகள் எதிர்ப்பாக இருக்கும்போது, இவையெல்லாம் பொய் என்று அடித்துவிடுவார்கள். ஆனாலும், சர்வேக்களை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் தனியார் பத்திரிகை ஒன்று திமுகவுக்காக சர்வே எடுத்தது. 200 தொகுதிகளை வெல்வோம் என்று திமுகவும் 210 தொகுதிகள் வெல்வோம் என்று அதிமுகவும் கூறிவரும் நிலையில் சர்வே நிலவரம் அப்படியெல்லாம் இல்லை. விஜய் தனியே நின்றால் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்று […]
எடப்பாடி வேட்டைக்குக் கிளம்பிவிட்டார். பொதுக்குழு பரபரப்பு

2026 தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொதுக்குழுவின் தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பா.வளர்மதி பேச்சு வைரலாகியுள்ளது. இன்றைய பொதுக்குழுவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ‘’புரட்சித் தலைவரையும், புரட்சித் தலைவியையும் பற்றி பேசாமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது. சத்துணவு இருக்கும்வரை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெயர் இருக்கும். தாலிக்கு தங்கம் என்று சொல்லுகிற […]
டெல்லியில் ஓபிஎஸ் தர்மயுத்தம்..? எடப்பாடியை மிரட்டுவாரா அமித்ஷா..?

டிசம்பர் 15க்குள் ஒரு முடிவு எடுக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்குவோம் என்று அறிவிப்பு செய்திருந்த ஓ.பன்னீர்செல்வம், இதுகுறித்து தெளிவு பெறுவதற்கு டெல்லிக்குப் போயிருக்கிறார். ஆனால், அவரை சந்திப்பதற்கு அமித்ஷா தயாராக இல்லை என்பதால் தர்மயுத்தம் செய்வதாக சொல்லப்படுகிறது. பன்னீரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி சொல்லிவிட்டதால் பாஜகவுடன் மீண்டும் இணைவாரா, தனிக்கட்சி அறிவிப்பாரா என்று பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இதில் ஒரு தெளிவான முடிவு பெறுவதற்காகவே துக்ளக் குருமூர்த்தியுடன் இணைந்து டெல்லிக்குச் சென்றுள்ளார் பன்னீர். அமித் ஷா […]
செங்கோட்டையனை பொளந்து கட்டிய எடப்பாடி. கோபியில் ஸ்டாலினுக்கு சவால்

செங்கோட்டையனுக்கு கோவை விமானநிலையத்தில் கிடைத்த வரவேற்புக்கு பதிலடி கொடுப்பது போன்று கோபி சட்டமன்றத் தொகுதியில் பிரமாண்டமான கூட்டத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையனை அம்பலப்படுத்தியதும், ஸ்டாலினுக்கு சவால் விட்டதும் பரபரப்பாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய இபிஎஸ், ‘’எத்தனையோ சோதனைக் கற்களை வெற்றிப் படிகளாக மாற்றிய இயக்கமான அஇஅதிமுக, அதே வெற்றி வரலாற்றை மீண்டும் 2026-ல் படைக்கும்! 2026-ல் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிமுக ஆட்சி அமைந்ததும், முதல் வெற்றித் திருவிழா கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும். இந்த தொகுதியில் […]
செம குஷியில் செங்கோட்டையன்… ஆப்பு வைக்கும் எடப்பாடி

தவெகவில் சேர்ந்த கையோடு கோவைக்கு வந்த செங்கோட்டையனுக்கு விமான நிலையத்தில் செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை எதிர்பார்க்காத செங்கோட்டையன் குஷியாகியிருக்கிறார். இந்நிலையில் நாளை கோபிசெட்டிப்பாளையத்தில் இபிஎஸ் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதில் செங்கோட்டையனுக்கு செம ரெய்டு விழும் என்கிறார்கள். இதுகுறித்துப் பேசும் அதிமுகவினர், ‘’கோவையில் செங்கோட்டையன் ஆண்டவர்களே மீண்டும் மீண்டும் ஆள வேண்டுமா என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒரே தொகுதியில மீண்டும் மீண்டும் 9 முறை எம் எல் ஏ வாகவும், அமைச்சராவும் இருந்த ஒருவர் […]

