News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

எஸ்.எஸ்.எஸ். கர  சேவை அறக்கட்டளையின் சார்பில்  பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் எழுதிப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.


சென்னையில் மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தின் காரணமாக பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வரலாறு காணாத பெருமழை பொழியும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெரியளவில் சேதத்தை விளைவித்தது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகப்பை மற்றும் எழுதுப்பொருட்கள் உள்ளிட்டவை நாசமானதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.


இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எஸ். கர சேவை அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சென்னை எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு  புத்தகம் பை மற்றும் எழுதுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிச.13) சென்னையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் எழுதுப்பொருட்களை வழங்கினார். அவற்றை மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


இதைத்தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ‘‘நீர்நிலைகளில் குப்பை கொட்டும் இடங்களாக மாற்ற வேண்டாம். இதன் காரணமாக வெள்ளத்தின் போது கடல் தண்ணீர் உள்வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.    பொதுமக்களும் நீர்நிலைகளை குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் உள்ள குப்பைகள் விரைவில் சுத்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் மணலி, எண்ணூர் பகுதிகளில்  மழைநீருடன்  ரசாயனக் கழிவு கலந்தது குறித்து இன்று மாலை உயர் மட்ட குழு உடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளோம். அப்பகுதிகளில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் மேற்கொள்ளும் வகையில் வீடுகள்    குடியிருப்பு பகுதிகளை கணக்கீடு செய்து வருவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மலும் அப்பகுதியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதா என்று  வல்லுநரி குழு  உறுதி செய்த பிறகு தான் எவையும் கூற முடியும் என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link