Share via:
ஆண்கள் இருக்கும் வரையிலும் அழிக்கவே முடியாத தொழில் என்று செக்ஸ்
பிசினஸைத்தான் சொல்ல வேண்டும். எத்தனை கெடுபிடிகள் காட்டப்பட்டாலும் போலீஸாருக்கு லஞ்சம்
கொடுத்தும் கொடுக்காமலும் எக்கச்சக்கமாக செக்ஸ் தில்லுமுல்லு நடக்கத்தான் செய்கிறது.
ஆனால், இதுவரை எப்போதும் கேள்விப்படாத வகையில் ஒரு புதுவித செக்ஸ் கேம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
செக்ஸ் விரும்பும் நண்பர்களுக்காக ஆல் இந்தியா பிரக்னெண்ட் ஜாப்
ஏஜென்ஸி என்ற பெயரில் கிளப் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த கிளப்பில் இணைவதற்கு 799 ரூபாய்
மட்டும் ரிஜிஸ்ட்ரேசன் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கணவன் இருந்தும் கர்ப்பம் அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு
உதவி செய்வதே இந்த வேலையின் அடிப்படை நோக்கம். எனவே, கணவனால் கர்ப்பம் அடைய முடியாத
பெண்களின் புகைப்படங்களை பட்டியலிடுகிறார்கள். இந்த பெண்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல்
20 ஆயிரம் வரை ரேட் நிர்ணயிக்கப்படுகிறது.
அதில் பணம் கொடுத்து தேர்வு செய்யப்படும் பெண்ணுடன் இணைந்து,
அவரை கர்ப்பம் அடையச் செய்துவிட்டால் அவருக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்படவே,
எக்கச்சக்கமான பேர் பதிவு செய்திருக்கிறார்கள். கர்ப்பம் அடையச் செய்வதற்காக அதிகாரபூர்வமாக
ஆண்களை அவர்களிடம் அனுப்பிவைக்கும் புனிதமான வேலையை அந்த நிறுவனம் மேற்கொண்டு எக்கச்சக்கமாக
வசூல் செய்திருக்கிறது.
யாருக்குமே 13 லட்சம் பரிசு வழங்கப்படவில்லை என்றதும், நிறைய
நிறைய கொடுத்து ஏமாந்துபோன ஒரு நபர் புகார் தெரிவித்ததையடுத்து, இந்த செக்ஸ் மோசடி
வெளியே வந்திருக்கிறது.
கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் சுருட்டிக்கொண்டு அந்த நிறுவனத்தினர்
இப்போது எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். விரைவில் வேறு ஏதாவது பெயரில் வரத்தான் செய்வார்கள்.
நம்மூரிலும் இப்படி ஏதாவது நடக்குதாப்பா..