Share via:
நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை எந்தவித கட்டணமும் இன்றி வழங்குவதற்கான அரசாரணையை இன்று (டிச.13) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகூர் தர்கா நிர்வாகிகளிடம் வழங்கினார்.
உலகப்பிரசித்தி பெற்ற நாகூர் கந்தூரி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் எனப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்காவில் கந்தூரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் 45 கிலோ எடை கொண்ட சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்று வரும் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான அரசாரணையை இன்று வழங்கினார்.
இந்த அரசாணையை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது கமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முகம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் மதிவேந்தன், செஞ்சி மஸ்தான், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Copyright © 2023. All Rights Reserved.