Share via:
மிக்ஜாம் புயல் பேரிடர்! சென்னை புளியந்தோப்பில் ஒன்றியக்குழு ஆய்வு!
மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட ஒன்றியக்குழு சென்னை வந்துள்ளது.
இக்குழுவினர் சென்னை புளியந்தோப்பு, திரு.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இக்குழுவில் இவருடன் திமான் சிங், (ஊரக வளர்ச்சி அமைச்சகம்), ஏ. கே. சிவ்ஹரே (வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குநர்), விஜயகுமார் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை), பவ்யா பாண்டே மற்றும் ரங்நாத் ஆடம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒன்றியக் குழுவினர் நேரில் சென்று அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள சேத பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு அறிக்கையை தயார் செய்து வருகின்றனர். இவர்களுடன் கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் சேத இடங்களை உடன் பார்வையிட்டு விளக்கம் அளித்து வருகிறார்.
Copyright © 2023. All Rights Reserved.