Share via:
காஞ்சிபுரத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வங்கக்கடலில் கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒன்றியக்குழு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வெள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் அமரம்பேடு பகுதியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேற்று (டிச.13) 2வது நாளாக ஆய்வு மேற்கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் சத்யார்த்தி ஆய்வு மேற்கொண்டார். அவரது தலைமையிலான ரங்கநாத் ஆடம், திமான்சிங் ஆகியோரும் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சந்திப்பின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் உயர் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அதேபோல் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம், மகாலட்சுமி நகர் பாலம் பகுதியிலும் ஒன்றியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
Copyright © 2023. All Rights Reserved.