News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

Share via:

0 Shares

மிக்ஜாம் புயல் பேரிடர் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக காசோலைகளை வழங்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எம்.ஆர்.எப். நிறுவனத்தின் துணைத் தலைவர் அருண் மேனன் மற்றும் நிர்வாக இயக்குனர் ராகுல் மேனன் மாப்பிள்ளை ஆகியோர் சந்தித்னர். பின்னர் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினர். இந்த சந்திப்பின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

 

அதேபோல் டால்மியா குழுமத்தின் தலைவர் மற்றும் செயல் இயக்குனரான அர்மித் சிங் சேத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, டால்மியா குழுமத்தின் செயல் இயக்குனர் விநாயகமூர்த்தி, ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

மகேந்திரா ஆராய்ச்சி கூட்டத்தின் தலைவர் வேலுசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அப்போது மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனிருந்தார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்கு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக மிக்ஜாம் புயல் பேரிடர பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார்.

 

மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கொங்கு ஈஸ்வரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்தார். பின்னர் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 

அதேபோல் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (டிச.13) தலைமை செயலகத்தில் சந்தித்தார். பின்னர் மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சங்க உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடித்தை வழங்கினார். இந்த சந்திப்பின் போது தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் இருந்தார்.

Share via
Copy link